Latest Updates
-
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 3 ராசிக்கு தொழில் ரீதியா அதிர்ஷ்டமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கேரட்டும், ஜவ்வரிசியும் இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் செய்யுங்க.. பிள்ளைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
Nag Panchami 2026: நாக பஞ்சமியில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
காரசாரமான சிக்கன் ஈரல் வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்த 7 அறிகுறிகள் அடிக்கடி தெரியுதா? அப்ப அது குடல்வால் புற்றுநோயின் அறிகுறியா இருக்கலாம்.. உஷார்.. -
ஆகஸ்ட் 19-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..! -
கவுண்டம்பாளையம் சிக்கன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனச்சுமை அதிகரிக்கப்போகுதாம் -
புதன்-குருபகவான் இணைப்பால் சூப்பர் ஸ்டாரா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோவா ஸ்டைல் சிக்கன் மசாலா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும்
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி என்ன?
Venus Transit In Cancer 2024: ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் இவர் ரிஷபம், துலாம் ராசிகளின் அதிபதியும் கூட. சுக்கிரன் ஒரு ராசியில் ஒரு மாத காலம் பயணிப்பார்.
இந்த சுக்கிரன் ஜூலை 07 ஆம் தேதி தான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் நுழைந்தார். இந்த கடக ராசியில் சுக்கிரன் ஜூலை 31 ஆம் தேதி வரை இருந்து, பின் சூரியனின் ராசியான சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கடக ராசிக்குள் சுக்கிரன் நுழைந்ததால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் நல்ல நிதி நன்மைகளையும், வெற்றியையும் பெறுவார்கள்.

அதே சமயம், சில ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும். ஏனெனில் நிதி இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இப்போது கடக ராசிக்கு சென்றுள்ள சுக்கிரனால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் மன உளைச்சலை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வேலையை முழு கவனத்துடன் செய்து முடித்தால் நல்ல பலனைப் பெறலாம். ஆனால் நிதி நிலைமை சற்று பலவீனமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்காக நிறைய செலவை செய்ய வேண்டியிருக்கும். இக்காலத்தில் உங்களால் பணத்தை சேமிக்க முடியாது.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்காது. குடும்ப உறுப்பினர்களிடையே பிரச்சனைகள் அதிகரிக்கும். இது உங்களுக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தும். வியாபாரிகளுக்கு இக்காலம் சிறப்பாக இருக்காது. இந்த காலத்தில் எந்த ஒரு முடிவையும் எடுக்கும் முன் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் நிதி இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தேவையற்ற செலவுகளால் சிரமப்படுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தந்தையின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்தை செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
தனுசு
தனுசு ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சிறு வேலைகளை முடிக்கவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்களின் இலக்கை அடைய முடியாமல் சிரமப்படுவீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும். வியாபாரிகள் இக்காலத்தில் நஷ்டங்களை சந்திக்க நேரிடும். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications