Latest Updates
-
இந்த 4 ராசி பெண்கள் ஆண்களிடம் எப்போதும் கடுமையாக நடந்து கொள்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உணவு உண்ட பின் 90% மக்கள் செய்யும் தவறுகள் இதான்.. நீங்களும் இத பண்றீங்களா-ன்னு பாருங்க.. -
பெங்காலி முட்டை புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன? -
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க..
சுக்கிரனின் நட்சத்திரம் மாற்றத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் தொடங்கப் போகுதாம்...!
சுக்கிரனின் ஒவ்வொரு ராசி மற்றும் நட்சத்திர மாற்றமும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒருவரின் வாழ்க்கையில் உள்ள அதிர்ஷ்டத்தை நிர்ணயிப்பதில் சுக்கிரனின் ஆசீர்வாதம் முக்கியப்பங்கு வகிக்கிறது. சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் சாதகமற்ற இடத்தில் இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் மோசமான பாதிப்புகள் ஏற்படலாம்.
தற்போது சுக்கிரன் அவிட்டம் நட்சத்திரத்தில் இருக்கிறார். அவிட்ட நட்சத்திரத்தில் சுக்கிரன் இருப்பதால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டக்காத்து பலமாக அடிக்கப்போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
சுக்கிரனின் நட்சத்திரம் மாற்றத்தால் மேஷ ராசிக்காரர்கள் தற்போது இருக்கும் பல கஷ்டங்களிலிருந்து விடுபடுவார்கள். மனதளவில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். செல்வம் அபரிமிதமாக பெருகும், குடும்பத்தின் வருமானமும், சேமிப்பும் அதிகரிக்கும். சகோதரர்களிடையே முன்பை விட ஒற்றுமை அதிகரிக்கும்.
பொருளாதார நிலை முன்னேறுவதால் கடன் சுமைகள் குறையும். புதிய வேலையில் சேர வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் உயர் கல்விக்காக வெளிமாநிலத்திற்கோ அல்லது வெளிநாட்டிற்கோ செல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு சுக்கிரனின் இந்த நட்சத்திர மாற்றத்தால் நிதி நெருக்கடிகள் குறையும். தொழிலில் எதிர்பார்த்ததை விட வளர்ச்சி இருக்கும். தங்க ஆபரணங்களை வாங்கி சேமித்து வைக்கலாம். குடும்பத்துடன் புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லலாம்.
புதிய வாகனம் அல்லது நிலம் வாங்க அதிர்ஷ்டம் வரும். பிள்ளைகளின் கல்விக்காக பணம் செலவிட வேண்டியிருக்கும். மாணவர்களுக்கு இது மிகவும் சாதகமான காலகட்டமாக இருக்கும். அலுவலப் பணியில் இருப்பவர்கள் இப்போது பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்.
விருச்சிகம்
மகர ராசிக்காரர்கள் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் நினைத்ததை சாதிக்க முடியும். புதிய ஆடம்பர உடைகள், வாகனம் வாங்குவதற்கு வாய்ப்புகள் உருவாகும். பெற்றோருக்கு விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளின் உதவியையும், முழு ஆதரவையும் பெறுவார்கள்.
திருமண வாழ்க்கையில் கடந்த காலத்தை விட மகிழ்ச்சியும், நெருக்கமும் அதிகரிக்கும். விரும்பிய துறையில் வேலை கிடைப்பதற்கான அதிர்ஷ்டம் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு அவர்களின் முயற்சிகேற்ப லாபம் கிடைக்கும்.
மீனம்
மீன ராசியினருக்கு இருந்து வந்த நிதி பிரச்சினைகள் விலகும். இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரிக்கும். அவர்கள் வாழ்க்கையில் தாங்கள் விரும்பும் பல விஷயங்களை சாதிக்க முடியும். அவர்களின் புதிய முயற்சிகள் அவர்களுக்கு பெரிய வெற்றியைக் கொடுக்கும். மேலும் அவர்களின் ஆரோக்கியமும் திருப்திகரமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு விரும்பிய வாகனத்தை சொந்தமாக்கி கொள்ளும் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

