Latest Updates
-
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
2025 ஜனவரியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்காரர்கள் பெரிய ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...!
Venus Transit 2025: 2024 முடிய இன்னும் ஒரு மாதமே இருக்கிறது, வரப்போகிற ஆண்டு பல முக்கிய கிரக பெயர்ச்சிகளுடன் தொடங்குகிறது. 2025 ஆம் ஆண்டு ஜனவரி 28, 2025 அன்று சுக்கிரன் மீன ராசிக்கு மாறுகிறது. இந்த கிரக பெயர்ச்சி மூலம் ஜோதிடத்தில் உள்ள பஞ்ச மகாபுருஷ் யோகங்களில் ஒன்றான மங்களகரமான மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது.
ஆடம்பரம், அன்பு மற்றும் அதிர்ஷ்டத்தின் கிரகமான சுக்கிரன் மீனத்தில் பெயர்ச்சி அடைவது இந்த யோகத்தை மேலும் சக்திவாய்ந்ததாக மாற்றுகிறது. இந்த கிரக பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் வளர்ச்சி, செல்வம் மற்றும் மகிழ்ச்சியை அனுபவிக்கப் போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்காரர்கள் இந்த மாளவ்ய ராஜயோகத்தால் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் சாதகமான விளைவுகளை அனுபவிப்பார்கள். பொருளாதாரரீதியாக ஸ்திரத்தன்மையை அடைவதற்கான காலமிது, மேலும் இந்த நேரத்தில் செய்யப்படும் முதலீடுகள் பலனளிக்கும். திருமண உறவுகள் மகிழ்ச்சியானதாக மாறும், மேலும் சிங்கிளாக இருப்பவர்கள் அவர்களுக்கான பொருத்தமான துணையைக் கண்டறியலாம். பணத்தை திட்டமிட்டு செல்வு செய்வது நல்லது.
கடகம்
கடக ராசிக்காரர்கள் மாளவ்ய யோகத்தால் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் காண்பார்கள். சுக்கிரனின் பெயர்ச்சி அவர்களுக்கு வேலையில் ஆக்கப்பூர்வமான வாய்ப்புகளையும், அவர்களின் திறமைக்கான அங்கீகாரத்தையும் தரும். உங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் நல்லிணக்கத்தின் தருணங்களை நீங்கள் அனுபவிக்கலாம். உடன்பிறந்தவர்களுடனான ஒற்றுமை மேம்படும்.
துலாம்
சுக்கிரன் துலாம் ராசியை ஆளும் கிரகமாக இருப்பதால் அபரிமிதமான வளர்ச்சியை அடையப்போகிறார்கள். இந்த யோகத்தால் சமூக அந்தஸ்து மற்றும் நிதி ஆதாயங்கள் உயரும் என எதிர்பார்க்கலாம். குறிப்பாக கலை மற்றும் மீடியாவில் பணிபுரிபவர்களுக்கு தொழில் வளர்ச்சி கூடும். காதலர்களிடையே நெருக்கம் அதிகரிக்கும், மேலும் திருமணமான தம்பதிகளிடையே இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் முடிவுகளை தைரியமாக எடுப்பது நல்ல பலன்களை அளிக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் ,மாளவ்ய யோகத்தால் தொழில் முன்னேற்றம் மற்றும் நிதி முன்னேற்றத்தைக் காண்பார்கள். அவர்களின் ஆக்கப்பூர்வமான முயற்சிகளுக்கு வெகுமதி கிடைக்கும், வியாபாரத்தில் இருப்பவர்கள் லாபகரமான ஒப்பந்தங்களை மேற்கொள்ளலாம். இந்த காலகட்டத்தில் காதலர்கள் திருமணத்தை நோக்கி நகரலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் சுக்கிரனின் ஆதரவால் காதல் வாழ்க்கை மற்றும் செல்வம் போன்றவற்றில் ஆதாயமடைவார்கள். சிங்கிளாக இருப்பவர்கள் தங்களின் வாழ்க்கைத்துணையை சந்திக்கும் வாய்ப்பைப் பெறலாம், அதே சமயம் காதலில் இருப்பவர்கள் நெருக்கத்தை அனுபவிப்பார்கள். நிதிரீதியாக, இந்த காலம் முதலீடுகள் மற்றும் ஆக்கபூர்வமான திட்டங்களுக்கு சாதகமானது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

