Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
2026 புத்தாண்டின் தொடக்கத்தில் உதயமாகும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது...
Venus Rise In 2026: ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் தான் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அந்நபர் நல்ல செழிப்பான வாழ்க்கையை வாழ்வார். அதுவே சுக்கிரன் மோசமான நிலையில் இருந்தால், அந்நபர் நிதி சிக்கல்களை சந்திப்பதோடு, தனிப்பட்ட வாழ்க்கையிலும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
இந்த சுக்கிரன் 2025 ஆம் ஆண்டின் இறுதியில் அஸ்தமன நிலையில் பயணிக்கத் தொடங்குவார். இந்நிலையில் தான் 2026 ஆம் ஆண்டிலும் நுழையவுள்ளார். அஸ்தமன நிலையில் சுக்கிரன் நுழைந்தாலும், புத்தாண்டின் ஆரம்ப மாதங்களிலேயே சுக்கிரன் உதயமாகவுள்ளார்.

இப்படி சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படுவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, நிதி நிலையில் நல்ல உயர்வும், வெற்றிகளும், முன்னேற்றமும் ஏற்படப் போகிறது. இப்போது 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சுக்கிரன் உதயமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
புத்தாண்டின் ஆரம்பத்தில் சுக்கிரன் உதயமாவதால், ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், ஒவ்வொரு வேலையையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். சுக்கிரனின் அருளால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நல்ல உற்சாகத்தை உணர்வீர்கள். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொடர்புகளால் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். மொத்தத்தில் புத்தாண்டு வெற்றிகரமான ஆண்டாக இருக்கும்.
மிதுனம்
புத்தாண்டின் தொடக்கத்தில் சுக்கிரன் உதயமாவதால் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ரியல் எஸ்டேட் தொடர்பான விஷங்களில் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். திட்டங்கள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக முடிவடையும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். நிதி ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். முக்கியமாக ஆண்டு முழுவதும் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
மீனம்
புத்தாண்டின் தொடக்கத்தில் சுக்கிரன் உதயமாவதால் மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். குறிப்பாக தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். சமூகத்தில் உங்களின் கௌரவம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட கதவு திறக்கும். முயற்சிகளுக்கு ஏற்ற நல்ல பலன்கள் கிடைக்கும். நிதி முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
