Latest Updates
-
தீபாவளிக்கு பின் உதயமாகும் புதன்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசப்போகுது! -
சனிபகவானின் வக்ர இயக்கம் முடிவுக்கு வருவதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
1/2 கப் ரவை இருந்தா போதும்.. தீபாவளிக்கு சூப்பரான ஸ்வீட் செய்யலாம்.. என்னன்னு பாருங்க.. -
Skin Care: முகப்பரு இல்லாத கண்ணாடி மாதிரி சருமம் வேண்டுமா? அப்ப இந்த தானியங்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க -
தீபாவளி அன்று பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப தக்காளி வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
எந்த காய்கறியும் தேவைப்படாத இந்த பாயாவை ஒருதடவை செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்ட்டகாசமா இருக்கும் -
Diwali 2026: தீபாவளி அன்று ஏன் 13 விளக்குகளை ஏற்ற வேண்டும்? அவற்றை எந்தெந்த இடத்தில் வைக்க வேண்டும்? -
உலகம் முழுக்க 108 ஏன் மிகவும் புனிதமான எண்ணாக கருதப்படுகிறது தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
வாஸ்து படி வீட்டை பெருக்கும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செய்யாதீங்க - இல்லனா வீட்டு அதிர்ஷ்டமே போயிரும் -
தீபாவளியில் உருவாகும் 2 சக்திவாய்ந்த ராஜயோகங்கள்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
சுக்கிரன் மீன ராசியில் உதயமாவதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ராஜவாழ்க்கை வரப்போகுதாம்..உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிரன் அசுரர்களின் குருவாக அழைக்கப்படுகிறா. ஹோலிக்குப் பிறகு சுக்கிரன் மீன ராசியில் உதயமாகப் போகிறார், இது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையையும் ஏதோ ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தப்போகிறது. செல்வம், பெருமை மற்றும் மரியாதையை வழங்கும் சுக்கிரன், ஒருவரின் ஜாதகத்தில் சரியான இடத்தில் இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் பெரிய உயரத்தை அடையலாம். இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ராசியை மாற்றிக்கொண்டே இருக்கும்.
மார்ச் 19, 2025 அன்று, சுக்கிரன் மீன ராசியில் சஞ்சரித்து, அதன் பிறகு 6 நாட்களுக்குப் பிறகுதான் உதயமாகிறார். சுக்கிரன் மீன ராசியில் சஞ்சரித்து, மார்ச் 23, 2025 அன்று உதயமாகிறார். இதன் காரணமாக, சில ராசிக்காரர்கள் மகத்தான வெற்றியை அடையப் போகிறார்கள். இந்த பதிவில் மீன ராசியில் சுக்கிரன் உதயமாவதால் அதிர்ஷ்டமடையப் போகும் ராசிகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சுக்கிரன்
சுக்கிரனின் உதயம் ரிஷப ராசிக்கு அதிக நன்மைகளை அளிக்கப்போகிறது. இந்த ராசியின் முதல் மற்றும் ஆறாவது வீட்டின் அதிபதியாக இருப்பதால், சுக்கிரன் பதினொன்றாவது வீட்டில் உச்சம் பெறுகிறார். இதன் காரணமாக, ரிஷப ராசிக்காரர்கள் அவர்களின் துறைகளில் பெரிய வெற்றிகளை பெறப்போகிறார்கள். தொழில் வாழ்க்கையைப் பொறுத்தவரை, வேலையில் பல புதிய வாய்ப்புகள் தேடிவரலாம், மேலும் உங்களிடம் ஒரு பெரிய பொறுப்பு ஒப்படைக்கப்படலாம்.
உங்கள் வேலையில் நீங்கள் திருப்தி அடைவீர்கள், மேலும் வணிகர்கள் பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து பெரும் வருமானம் ஈட்டலாம். அதைத் தவிர, உங்கள் போட்டியாளர்களுக்கு நீங்கள் கடுமையான போட்டியைக் கொடுப்பீர்கள். நிதி நிலைமை நீண்ட காலத்திற்கு நிலையானதாக இருக்கும். அவர்கள் வருமானத்தில் அபரிமிதமான முன்னேற்றத்தை அனுபவிக்கலாம். உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் மிகவும் சாதகமான பலன்களை அளிக்கப்போகிறது. இந்த ராசியின் மூன்றாவது வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதால், அவர்கள் சிறப்பான நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. அவர்களின் புத்திசாலித்தனம் பல மடங்கு அதிகரிக்கும், இதன் காரணமாக, அவர்கள் பல்வேறு துறைகளில் வெற்றி பெறலாம்.
தொழில் வாழ்க்கையைப் பொறுத்தவரை, வேலைக்காக நீங்கள் நீண்ட தூரம் பயணிக்கலாம், இதன் மூலம் நீங்கள் பல நன்மைகளைப் பெறலாம். பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் நீங்கள் லாபம் ஈட்டலாம், மேலும் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் துணையுடனான நீண்டகால வாக்குவாதங்கள் இப்போது முடிவுக்கு வந்து குடும்ப வாழ்க்கையில் அமைதி நிலவும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் உதயம் அபரிமிதமான பலன்களைத் தரப்போகிறது. இந்த சூழ்நிலையில், கும்ப ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறலாம். அவர்கள் வேலை மற்றும் வணிகத்தில் மகத்தான வெற்றியைப் பெற்று நிதி நன்மைகளைப் பெறலாம். இதனுடன், உங்கள் முயற்சிகளால் பணி வாழ்க்கையில் உங்கள் நற்பெயர் அதிகரிக்கும்.
இந்த காலகட்டத்தில் தலைமைத்துவ குணங்களும் கணிசமாக மேம்படுகின்றன, இதனால் பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். உங்கள் வணிக திட்டங்கள் நீங்கள் எதிர்பார்த்த பலன்களைக் கொடுக்கலாம் மற்றும் நிறைய லாபம் ஈட்ட முடியும். சுக்கிரனின் அருளால், உங்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியானதாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

