Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
165 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அர்த்தகேந்திர யோகம்: இந்த 3 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது!
Ardha Kendra Yog 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அதன் நிலைகளைக் கொண்டு அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். அதில் சக்தி வாய்ந்த ஒரு கிரகம் தான் சுக்கிரன். இந்த சுக்கிரன் அசுரர்களின் குரு மற்றும் செல்வத்தின் காரணியாவார். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார்.
தற்போது சுக்கிரன் மகர ராசியில் பயணித்து வருகின்றனர். இந்த மகரத்தில் புதன், சூரியன், செவ்வாய் ஆகியவற்றுடன் இணைந்து பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜனவரி 29 ஆம் தேதி மாலை சுக்கிரன் நெப்டியூடன் இணைந்து அர்த்தகேந்திர யோகத்தை உருவாக்கியுள்ளது.

இந்த யோகத்தால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அதன் தாக்கம் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. ஜோதிடத்தின் படி, சுக்கிரனும், நெப்டியூனும் ஒருவருக்கொருவர் 45 டிகிரியில் இருக்கும் போது அர்த்த கேந்திர யோகம் உருவாகும். இந்த யோகத்தின் போது நெப்டியூன் மீன ராசியில் இருக்கும்.
பொதுவாக நெப்டியூன் ஒரு ராசியில் 14-15 ஆண்டுகள் வரை இருக்கும் மற்றும் ஒரு முழு ராசி சுழற்சியை முடிக்க சுமார் 165 ஆண்டுகள் ஆகும். இந்நிலையில் சுக்கிரனுடன் சேர்ந்து நெப்டியூன் உருவாக்கியுள்ள அர்த்த கேந்திர யோகத்தால் சிறப்பான பலன்களைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு அர்த்த கேந்திர யோகமானது சாதகமாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றகரமாக முடிக்கப்படும். வேலை மற்றும் வணிகத்தில் குறிப்பிடத்தக்க நன்மைகளைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். அதிர்ஷ்டத்தால் வெற்றிகள் குவியும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கருத்து வேறுபாடுகள் தீரும். தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் அர்த்த கேந்திர யோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். செல்வ நிலையிலும் நல்ல உயர்வு ஏற்படும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வணிர்களுக்கு சாதகமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களால் நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் இலக்குகளை அடைவார்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப சூழல் இனிமையாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு அர்த்த கேந்திர யோகத்தால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பரம்பரை சொத்து மூலம் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக, வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வெளிநாட்டில் வேலை தேடுபவர்கள் நல்ல செய்தியைப் பெறுவார்கள். புதிய தொழிலை தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமை வலுவாக இருக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
