Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
சுக்கிரன்-புதன் உருவாக்கும் நீச்சபங்க ராஜயோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் எதிரிகளை மண்டியிட வைக்கப்போறாங்களாம்!
நவகிரகங்களில் புதனும், சுக்கிரனும் மிகவும் முக்கியமான இரண்டு கிரகங்களாகும். பிப்ரவரி 27 ஆம் தேதி, புதனும் சுக்கிரனும் மீன ராசியில் இணையப் போகின்றனர். இரண்டு கிரகங்களும் ஒரே ராசியில் இருக்கும்போது, அது ஒரு ராஜயோகத்தை உருவாக்குகிறது.
இது வெறும் ராஜயோகம் மட்டுமல்ல, எதிரிகளைக் கூட மண்டியிட வைக்கும் சக்தியைக் கொடுக்கும் நீச்சபங்க ராஜயோகமாகும். இந்த நீச்ச பங்க ராஜயோகத்தால் அதிர்ஷ்டமடையப் போகும் ராசிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் பதினொன்றாவது வீட்டில் புதனும் சுக்கிரனும் இணைகின்றனர். இதனால் ரிஷப ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழிலில் பல சாதனைகளை செய்ய முடியும். இந்த காலகட்டத்தில் அவர்கள் தங்கள் எதிரிகள் கூட பொறாமைப்படும் அளவிற்கு வளர வாய்ப்பு கிடைக்கும். கடந்த காலத்தில் கிண்டல் செய்யப்பட்ட பலர் முன்வந்து உங்களிடம் உதவி கேட்பார்கள். அவர்களின் நீண்ட கால ஆசைகள் இப்போது நிறைவேற வாய்ப்புள்ளது.
பொதுவாகவே ரிஷப ராசிக்காரர்கள் அவர்கள் நேசிப்பவர்களுக்கு அன்பைத் திருப்பிக் கொடுக்கத் தயங்க மாட்டார்கள். இந்த காலகட்டத்தில் அவர்களின் வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும். இதுவரை நடந்து வந்த சட்டப் போராட்டங்களில் வெற்றி பெறும் வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டில் செட்டிலாக விரும்புபவர்களுக்கு இப்போது அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
மகரம்
மகர ராசியில் புதன் இருப்பது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தினாலும், சுக்கிரனால் ஏற்படும் அசுப ராஜயோகத்தின் மூலம் மகர ராசிக்காரர்கள் பல நன்மைகளை பெறப் போகிறார்கள். அவர்களின் நிதி நிலை வெகுவாக மேம்படும். அவர்களின் அனைத்து முயற்சிகளிலும் வெற்றியும், அதிர்ஷ்டமும் அவர்களுக்கு துணை நிற்கும்.
அவர்களின் அனைத்து முயற்சிகளிலும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அவர்களை கேலி செய்த உறவினர்கள் இப்போது அவர்களிடம் உதவி கேட்பார்கள். அவர்களின் குடும்பம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் பதட்டங்கள் விலகி இப்போது மன நிம்மதியை அடைவார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் பல நன்மைகளை அனுபவிப்பார்கள். தொழில் வாழ்க்கையில் இருந்து வைத்த பல பிரச்சனைகள் இப்போது முடிவுக்கு வரும். அவர்களின் நிதிநிலை இப்போது பலமடங்கு அதிகரிக்கும். அவர்களுக்கு பல துறைகளில் இருந்து லாபம் கிடைக்கும். செலவுகள் குறைவதுடன் சேமிப்பும் அதிகரிக்கும்.
புதிய வேலை தேடுபவர்களுக்கு இந்த காலகட்டத்தில் சரியான வேலை கிடைக்கும். மேலும் வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அவர்களின் வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். மொத்தத்தில் வாழ்க்கையில் வெற்றியும், அதிர்ஷ்டமும் நிறைந்திருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
