Latest Updates
-
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்..
1 வருடம் கழித்து சுக்கிரனால் உருவாகும் கேந்திர திரிகோண ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட மழை கொட்டும்..
Venus Make Kendra Trikon Rajyog 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் ராசி மாற்றங்கள் மற்றும் அவற்றால் உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார்.
இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு, திருமண வாழ்க்கை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த சுக்கிரன் மீன ராசியில் பயணித்து வருகிறார். இவர் மே 31 ஆம் தேதி செவ்வாயின் மேஷ ராசிக்குள் நுழைவார். அதன் பின் ஜூன் மாதத்தில் தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்குள் நுழைவார். சுக்கிரன் ரிஷப ராசிக்கு செல்வது சற்று சிறப்பானது.

ஜூன் மாதத்தில் ரிஷப ராசிக்குள் நுழையும் சுக்கிரனால் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலுமே தெரியும். இருப்பினும் சில ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் அதிர்ஷ்டத்தை தரப்போகிறது. இப்போது 1 வருடம் கழித்து சுக்கிரனால் உருவாகும் கேந்திர திரிகோண ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
கேந்திரி திரிகோண ராஜயோகமானது ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். ஏனெனில் ரிஷப ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் வாழ்க்கை துணையும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். வாழ்க்கையில் ஆடம்பரங்களும் வசதிகளும் அதிகரிக்கும். பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு கேந்திர திரிகோண ராஜயோகம் அதிர்ஷ்டத்தைத் தரப்போகிறது. சுக்கிரனின் அருளால் வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் நிறைய பணத்தை சேமிக்க முடியும். வணிகத்தில் பல மடங்கு லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறலாம். தொழிலதிபர்களுக்கு புதிய திட்டங்களால் நல்ல லாபம் கிடைக்கும். தந்தையுடனான உறவு வலுவடையும். பணியிடத்தில் புதிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். இந்த வாய்ப்பால் அலுவலகத்தில் உயர்நிலையை அடைவீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு கேந்திர திரிகோண ராஜயோகமானது சிறப்பான பலனைத் தரும். அதுவும் இந்த ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பிரகாசிப்பதால், வெற்றிகள் குவியும். செல்வம் அதிகம் சேரும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். காதல் தொடர்பான விஷங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். சுபநிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக நிறைவேறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications