Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
தீபாவளிக்கு முன் உருவாகும் சமசப்தக் யோகம்: இந்த 3 ராசிகளின் பணம் பெருகும்.. தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்..
Venus Jupiter Make Samsaptak Yoga Before Diwali 2024: ஜோதிடத்தில் அழகு, ஆடம்பரம், செழிப்பு, காதல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவார். அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் தெரியும்.
அந்த வகையில் விஜயதசமிக்கு பின், சுக்கிரன் விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார். விருச்சிக ராசிக்கு சுக்கிரன் செல்லும் போது, குரு பகவானுடன் சேர்ந்து சமசப்தக் யோகம் உருவாகவுள்ளது. தீபாவளிக்கு முன் உருவாகும் இந்த யோகத்தால், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது.

குறிப்பாக நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவதோடு, நிதி நிலையில் நல்ல முன்னேற்றமும் ஏற்படவுள்ளது. இப்போது அக்டோபர் 13 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு செல்லும் சுக்கிரனால் உருவாகவுள்ள சமசப்தக் யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சமசப்தக் யோகமானது நல்ல பலனைத் தரும். அதுவும் நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் வேலை நல்ல பாராட்டைப் பெறும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வும் கிடைக்கலாம். புதிய தொழிலைத் தொடங்கினால், நல்ல பலனைப் பெறுவீர்கள். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். புதிய வாகனம், வீடு, சொத்து போன்றவற்றை வாங்கும் ஆசை இருந்தால், அது இக்காலத்தில் நிறைவேறும். சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சமசப்தக் யோகமானது பலவிதமான மகிழ்ச்சியைத் தரவுள்ளது. முக்கியமாக வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். அதன் மூலம் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இக்காலத்தில் உங்கள் வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வெளியூர் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். மேலும் புதிய வாகனம் வாங்கும் யோகமும் உள்ளது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சமசப்தக் யோகத்தால் அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பணியிடத்தில் உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல செய்தி கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
