Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
Union Budget 2026: பூச நட்சத்திரத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்.. பொதுமக்களுக்கு எப்படி இருக்கும்?
Union Budget 2026 Astrology Predictions: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026 பிப்ரவரி 01 ஆம் தேதி ஒன்பதாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். ஜோதிட ரீதியாக, இந்த ஆண்டில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் நாளில் பல யோகங்கள் உருவாகவுள்ளன. இந்த யோகங்களால் இந்த பட்ஜெட்டில் அரசாங்கம் மக்களுக்கு பல நல்ல செய்திகளை வழங்கி, நிவாரணத்தை அளிக்கலாம் என்பதை குறிக்கிறது.
பஞ்சாங்கத்தின் படி, பிப்ரவரி 01 ஆம் தேதி மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன் கடக ராசியில் இருப்பார். மேலும் இந்நாளில் தான் தை பௌர்ணமியுடன், தைப்பூசமும் வருகிறது. தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரம் மிகவும் விஷேசமானது. இந்த தைப்பூசம் என்பது முருகனுக்கு உகந்த நாளாகும். இந்த பூச நட்சத்திரம் இரவு 11:57 மணி வரை நீடிக்கும்.

மேலும் இந்நாளில் ராகு காலம் மாலை 4:47 மணி முதல் மாலை 6:09 மணி வரை நீடித்திருக்கும். அதோடு இந்த பிப்ரவரி மாதம் முழுவதும் ராகு, சனி மற்றும் கேது ஒரே ராசியில் இருப்பார்கள். அதுமட்டுமின்றி பிப்ரவரி 01 ஆம் தேதி சுக்கிரன் மகரத்தில் உதயமாவார். இது தவிர சூரியன், புதன், செவ்வாய் போன்ற கிரகங்களும் மகர ராசியில் ஒன்றாக இருப்பார்கள். இதனால் திரிகிரக யோகம், சதுர்கிரக யோகம், புதாதித்ய யோகம், மங்களாதித்ய ராஜயோகம், சுக்ராதித்ய ராஜயோகம், லட்சுமி நாராயண ராஜயோகம் போன்ற பல யோகங்கள் உருவாகியுள்ளன.
கடகத்தில் இருக்கும் சந்திரனால் என்ன பலன்?
பிப்ரவரி 01 ஆம் தேதி சந்திரன் தனது சொந்த ராசியான கடக ராசியில் இருக்கும். ஜோதிடத்தின் படி, கடகம் பொது மக்கள், குடும்பம், பெண்கள், விவசாயிகள் மற்றும் உள்நாட்டு பொருளாதாரத்துடன் தொடர்புடையது. ஆகவே இந்நாளில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் பெண்கள், வீட்டுவசதி, ரேஷன் பொருட்கள், மானியங்கள் மற்றும் சமூக திட்டங்களில் அரசு அதிகம் கவனம் செலுத்துவதாக எதிர்பாதிக்கப்படுகிறது. மேலும் சாமானிய மக்கள் சந்தோஷப்படும் வகையில் சில முடிவுகளையும் அரசு எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பூச நட்சத்திரத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்
பிப்ரவரி 01 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் பூச நட்சத்திரத்தில் என்பதால் அரசாங்கம் மக்கள் சந்தோஷப்படும் வகையில் பல அறிவிப்புகளை வெளியிடும் வேளையில், கருவூலத்தில் அதிக சுமை ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் குறிக்கிறது.
மேலும் பிப்ரவரி 01 ஆம் தேதி ராகு காலம் மாலை வேளையில் தான் உள்ளது. ஆனால் பட்ஜெட் தாக்கல் பூச நட்சத்திரத்தில் காலை வேளையிலேயே முடிந்துவிடும். எனவே ராகுவால் பட்ஜெட்டில் எவ்வித எதிர்மறையான தாக்கமும் இருக்காது.
அதுமட்டுமின்றி, பிப்ரவரி மாதம் முழுவதும் ராகு, கேது, சனி போன்ற கிரகங்கள் எந்த ராசியையும் மாற்றாது. இது அரசின் பொருளாதார கொள்கையில் எவ்வித பெரிய மாற்றமும் இருக்காது என்பதைக் குறிக்கிறது. அதோடு வரிகள், கடன், அரசு செலவுகள் போன்றவை கட்டுப்பாட்டில் இருக்கும். அதாவது நிவாரணத்துடன், பட்ஜெட்டில் கடுமையான நடவடிக்கைகளும் இருக்கும்.
சாமானிய மக்களுக்கு மத்திய பட்ஜெட் 2026 எப்படி இருக்கும்?
பூச நட்சத்திரத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் சாமானிய மக்களை திருப்திப்படுத்த அரசு சில நிவாரண நடவடிக்கைகளை எடுக்குமே தவிர, பெரிய அளவில் கருவூலத்தை திறந்துவிடாது என்பதை ஜோதிட சாஸ்திரம் சுட்டிக்காட்டுகிறது.
நடுத்தர மக்கள் குறைந்த அளவில் நிவாரணங்களைப் பெற்றாலும், ஏழைகள் மற்றும் பெண்களுக்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மொத்தத்தில், 2026 பட்ஜெட் நிவாரணம் மற்றும் நிதி ஒழுக்கம் இரண்டையும் பராமரிக்கும் அதே வேளையில், அரசாங்கம் சமநிலையை ஏற்படுத்த நினைக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications