Latest Updates
-
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்..
18 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் உருவாகும் சக்திவாய்ந்த திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது...
Trigrahi Yog In Pisces 2025: வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் கிரகங்களின் ராசி மாற்றங்களின் போது, சில சமயங்களில் மற்ற கிரகங்களுடன் இணைந்து யோகங்களை உருவாக்கி, அதுவும் வாழ்க்கையில் தாக்கத்தை உண்டாக்கும்.
அந்த வகையில் கிரகங்களில் நிழல் கிரகமாக கருதப்படும் ராகு ஒரு ராசியில் 18 மாத காலம் பயணிப்பார். இவர் ஒரு ராசியை சுழற்சியை முடிக்க 18 ஆண்டுகள் ஆகும். தற்போது இந்த ராகு மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் பிப்ரவரி 27 ஆம் தேதி மீன ராசிக்கு செல்கிறார். அதைத் தொடர்ந்து கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மார்ச் 14 ம் தேதி மீன ராசிக்கு செல்லவுள்ளார்.

இதனால் மீன ராசியில் ராகு, சூரியன் மற்றும் புதனின் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த 3 கிரகங்களின் சேர்க்கையானது மீன ராசியில் சுமார் 18 ஆண்டுகள் கழித்து உருவாகிறது. இதனால் இந்த கிரக சேர்க்கையால் சக்தி வாய்ந்த திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறவுள்ளார்கள். இப்போது மீன ராசியில் உருவாகும் திரிகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் ராகு, சூரியன் மற்றும் புதன் சேர்க்கையினால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் ஏராளமான நன்மைகளைப் பெறுவார்கள். சில முக்கியமான முடிவுகளை எடுக்க நேரிடும் மற்றும் இந்த முடிவுகள் நல்ல நிதி ஆதாயத்தை தரும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் ராகு, சூரியன் மற்றும் புதன் சேர்க்கையினால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் நிறைய நன்மைகள் கிடைக்கும். பணியிடத்தில் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். வணிகர்கள் நிறைய லாபத்தைத் தரும் பெரிய ஆர்டரைப் பெறுவார்க. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் ராகு, சூரியன் மற்றும் புதன் சேர்க்கையினால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை தேடி வரும். தொழிலில் நிறைய லாபம் கிடைக்கும். முக்கியமாக வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications