Latest Updates
-
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
100 ஆண்டு கழித்து உருவாகும் சக்திவாய்ந்த திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டப்போகுது
Trigrahi Yog In February 2026: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றங்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றன. ஏனெனில் அவற்றின் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களில் பல கிரகங்கள் ஒரே ராசியில் இருக்கும் போது, அதன் விளைவாக சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும்.
அப்படி உருவாகும் யோகங்கள் இன்னும் ஆழமான தாக்கத்தை உண்டாக்கும். அந்த வகையில் பிப்ரவரி மாதத்தில் மிகவும் சக்தி வாய்ந்த திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகமானது மிகவும் மங்களகரமானது மற்றும் ஒருவரது வாழ்க்கையில் முன்னேற்றத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரக்கூடியது.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, பிப்ரவரி மாதத்தில் சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் கும்ப ராசியில் ஒன்றிணையவுள்ளன. இந்த மூன்று கிரகங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
முக்கியமாக சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். அதுவும் தொழிலில் வெற்றி, நிதி நிலையில் முன்னேற்றம், சமூகத்தில் மரியாதை போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. இப்போது பிப்ரவரி மாதத்தில் உருவாகும் சக்திவாய்ந்த திரிகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
பிப்ரவரி மாதத்தில் உருவாகும் திரிகிரக யோகத்தால் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பல புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. மேலும் திட்டங்கள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக நடக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். மனநிலை மேம்படும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வீட்டு சூழல் மகிழ்ச்சியாக இருக்கும்.
மிதுனம்
பிப்ரவரி மாதத்தில் உருவாகும் சக்தி வாய்ந்த திரிகிரக யோகமானது மிதுன ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட வீட்டில் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். மன அமைதியும், கௌரவமும் அதிகரிக்கும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். முதலீடுகளை செய்வதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம்
பிப்ரவரி மாதத்தில் கும்ப ராசியின் முதல் வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும், வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் உங்கள் முடிவெடுக்கும் திறன்கள் வலுபெறும். பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் புரிதல் அதிகரிக்கும். துணையுடன் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நிதி நிலை வலுபெறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
