Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
100 ஆண்டுகள் கழித்து மகரத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
Trigrahi Yog 2026: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பல கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் பல யோகங்களும், ராஜயோகங்களும் உருவாகவுள்ளன. இவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
இந்நிலையில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியன், செல்வத்தின் காரணியான சுக்கிரன் மற்றும் புத்திகாரகனான புதன் ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கை மகர ராசியில் நிகழப்போகிறது. இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால் மிகவும் மங்களகரமான திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகமானது மகர ராசியில் சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளது.

இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். அதுவும் திடீர் நிதி ஆதாயங்களையும், தொழிலில் முன்னேற்றத்தையும் காணவுள்ளனர். இப்போது மகர ராசியில் உருவாகும் திரிகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசியின் முதல் வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தினால் ஆரோக்கியம் மேம்படும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஆளுமை மேம்படும். பணியிடத்தில் ஒரு அடையாளத்தை உருவாக்குவீர்கள். வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்துடன், வருமானத்தில் நல்ல உயர்வும் ஏற்படும். திருமணமான தம்பதிகளின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மேலும் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணையும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
மீனம்
மீன ராசியின் 11 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தால் முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. வருமானத்தில் எதிர்பாராத அளவில் உயர்வு ஏற்படும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். இதனால் நிதி நிலைமை மேம்படும். குடும்ப சூழல் இனிமையாக இருக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து நல்ல பலனைப் பெறக்கூடும்.
துலாம்
துலாம் ராசியின் 4 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பணியிடத்தில் புதிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். பரம்பரை சொத்துக்கள் கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது. தாயுடனான உறவு மேம்படும் மற்றும் அவர் மூலம் நிறைய செல்வத்தைப் பெறக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
