Latest Updates
-
தீபாவளிக்கு பின் உதயமாகும் புதன்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசப்போகுது! -
சனிபகவானின் வக்ர இயக்கம் முடிவுக்கு வருவதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
1/2 கப் ரவை இருந்தா போதும்.. தீபாவளிக்கு சூப்பரான ஸ்வீட் செய்யலாம்.. என்னன்னு பாருங்க.. -
Skin Care: முகப்பரு இல்லாத கண்ணாடி மாதிரி சருமம் வேண்டுமா? அப்ப இந்த தானியங்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க -
தீபாவளி அன்று பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப தக்காளி வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
எந்த காய்கறியும் தேவைப்படாத இந்த பாயாவை ஒருதடவை செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்ட்டகாசமா இருக்கும் -
Diwali 2026: தீபாவளி அன்று ஏன் 13 விளக்குகளை ஏற்ற வேண்டும்? அவற்றை எந்தெந்த இடத்தில் வைக்க வேண்டும்? -
உலகம் முழுக்க 108 ஏன் மிகவும் புனிதமான எண்ணாக கருதப்படுகிறது தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
வாஸ்து படி வீட்டை பெருக்கும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செய்யாதீங்க - இல்லனா வீட்டு அதிர்ஷ்டமே போயிரும் -
தீபாவளியில் உருவாகும் 2 சக்திவாய்ந்த ராஜயோகங்கள்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
இந்த 5 ராசிக்காரங்க எல்லோரையும் சிரிக்க வைப்பதற்காகவே பிறந்த ஆன்மாக்களாம் ... உங்க ராசி இதுல இருக்கா?
மனிதர்களை மனிதர்களாக வைத்திருப்பது என்பது சிரிப்புதான். மனிதர்களை மிருகங்களிடமிருந்து வேறுபடுத்துவதும் சிரிப்புதான். மனிதராக பிறந்த அனைவருக்குள்ளும் நகைச்சுவை உணர்வு என்பது நிச்சயம் இருக்கும். ஒருவரின் நகைசுவை உணர்வு அவர்களை சுற்றியுள்ளவர்களை மகிழ்விப்பது மட்டுமல்லாமல், அவர்களின் எல்லைகளை உடைத்து நண்பர்களை உருவாக்கவும், கடினமான சூழ்நிலையை எளிதாக்கவும் உதவும்.
நகைச்சுவை என்பது நபருக்கு நபர் மாறுபடும். சிலர் இயற்கையாகவே வேடிக்கையான குணம் கொண்டவர்களாகவும், விதிவிலக்கான நகைச்சுவை உணர்வு கொண்டவர்களாகவும் இருக்கலாம், இதனால் அவர்களைச் சுற்றியுள்ளவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் மற்றும் அவர்களுடன் பழகுவதற்கு அனைவரும் ஆசைப்படுவார்கள். இந்த பதிவில் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்ட ராசிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் தனித்துவமான நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள், இதனால் அவர்கள் மற்ற அனைத்து ராசிக்காரர்களையும் விட மிகவும் வேடிக்கையானவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் நகைச்சுவை உணர்வு அவர்களின் தொலைநோக்குப் பார்வையிலும், புத்திக்கூர்மையிலும் இருந்து உருவாகிறது.
அவர்கள் புத்திசாலித்தனமானவர்கள், ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்ப உடனடியாக நகைச்சுவைகளை உருவாக்கக் கூடியவர்கள், மிகவும் சாதாரணமான விஷயங்களைக் கூட நகைச்சுவையாகவும், ரசிக்கும்படியும் அவர்களால் மாற்ற முடியும். அவர்களின் உலகம் எப்போதும் நகைச்சுவையானதாகவும், வேடிக்கையானதாகவும் இருக்கும், அவர்கள் உங்கள் பக்கத்தில் இருந்தால் அனைத்து சூழ்நிலையும் சுவாரஸ்யமாகவும், உயிரோட்டமாகவும் இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இயற்கையாகவே நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள், இது மற்ற ராசிக்காரர்களை விட மிகவும் வேடிக்கையானவர்களில் ஒருவராக அவர்களை மாற்றுகிறது. அவர்களின் குட்டி குட்டி ஜோக்குகள், ஒன் லைனர்கள் மற்றும் இயல்பான நகைச்சுவை உணர்வு அவர்களை சிறந்த வேடிக்கையானவர்களாக மாற்றுகிறது. ஒரு மிதுன ராசிக்காரர் தங்கள் நகைச்சுவைகள் மூலம் யாரையும் புண்படுத்தாமல் அனைவரையும் சிரிக்க வைக்கும் திறனைக் கொண்டுள்ளனர். அவர்கள் அனைத்து வகையான நகைச்சுவை விளையாட்டுகளிலும் முக்கிய இடத்தில் இருக்கிறார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இயல்பிலேயே எண்டர்டெயினர்களாக இருப்பார்கள், மேலும் அவர்கள் மிகவும் வேடிக்கையான செயல்பாடுகள் மற்றும் ஒன் லைனர்கள் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார்கள். சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் நகைச்சுவைகளை உருவாக்குவதில் படைப்பாற்றல் மிக்கவர்கள், மேலும் அவர்கள் பொதுவாக தங்கள் தனித்துவமான நகைச்சுவையால் மக்களை சிரிக்க வைப்பார்கள். எந்தவொரு விஷயத்தையும் மிகைப்படுத்தும் சிம்ம ராசிக்காரர்களின் இயல்பான உள்ளுணர்வு சிலருக்கு எரிச்சலூட்டுவதாக இருக்கலாம், ஆனால் பெரும்பாலானவர்கள் அவர்களின் கவர்ச்சியால் ஈர்க்கப்படுவார்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் உண்மையிலேயே மிகவும் வேடிக்கையான நபர்களில் ஒருவராக இருப்பார்கள். அவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் மட்டுமே தங்களின் வேடிக்கையான முகத்தை வெளிப்படுத்துவார்கள். மேஷ ராசிக்காரர்கள் அந்நியர்களுடன் இருக்கும்போது மிகவும் மர்மமான முறையில் நடந்து கொண்டாலும், நண்பர்கள் மத்தியில் அவர்களின் நகைச்சுவை உணர்வுக்கு பிரபலமானவர்களாக இருப்பார்கள். மேஷ ராசிக்காரர்கள் புத்திசாலித்தனமாக நகைச்சுவைகளை உருவாக்குவதில் வல்லவர்கள். அவர்கள் மற்றவர்களிடம் ஒரு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்த முயற்சிக்கும்போது மட்டுமே அவர்களின் நகைச்சுவை பக்கத்தை வெளிக்கொண்டு வருவார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் அவர்களின் விதிவிலக்கான நகைச்சுவை உணர்வுக்கு பெயர் பெற்றவர்கள், அவர்கள் மிகவும் வேடிக்கையாக இருப்பார்கள், ஆனால் அவர்களின் நகைச்சுவை உணர்வைப் புரிந்துகொள்ள நீங்கள் திறந்த மனதுடன் இருக்க வேண்டும். நீங்கள் சின்ன சின்ன விஷயங்களுக்காக கோபப்படுபவர் என்றால் உங்களால் அவர்களின் நகைச்சுவையை புரிந்து கொள்ள முடியாது, அவர்களுடன் இருப்பது உங்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தலாம். ஆனால் அவர்களுடன் நெருங்கி பழகிவிட்டால் அவர்களின் நகைச்சுவை உங்களை மனம் விட்டு சிரிக்க வைக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

