Latest Updates
-
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க
இந்த 5 ராசிக்காரங்க ரொம்பவும் ஆபத்தானவங்களாம்.. இவங்கள பகைச்சுக்காதீங்க... இல்ல ரொம்ப வருத்தப்படுவீங்க..
Most Dangerous Zodiac Signs: ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஒவ்வொருவிதமான குணங்களைக் கொண்டுள்ளனர். இதற்கு ஒவ்வொரு ராசியை ஆளும் அதிபதிகளான நவகிரகங்கள் ஒரு முக்கிய காரணம். சில ராசிக்காரர்கள் வலுவான ஆளுமையைக் கொண்டிருப்பார்கள்.
இன்னும் சிலர் மிகவும் தைரியமானவர்களாக, எப்பேற்பட்ட கடினமான சூழ்நிலைகளையும் அசால்ட்டாக சமாளிக்கும் ஆற்றலைக் கொண்டிருப்பார்கள். இப்படி எதற்கும் அஞ்சாமல் துணிச்சலுடன் இருப்பவர்களை பகைத்துக் கொண்டால், பின் அவர்கள் அதற்கான பதிலடியை நிச்சயம் கொடுப்பார்கள்.

எனவே ஒருவரை பகைத்துக் கொள்ளும் முன் அவர்களின் குணங்களை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் சிலர் பார்க்க சாந்தமானவர்களாக இருப்பார்கள். ஆனால் சண்டை, சவால்கள் என்று வந்துவிட்டால், அவர்களை வீழ்த்துவது என்பது முடியாது.
ஜோதிடத்தின் படி, 5 ராசியைச் சேர்ந்தவர்கள் மிகவும் ஆபத்தானவர்களாக கருதப்படுகின்றனர். இந்த ராசிக்காரர்களை பகைத்துக் கொண்டால், பின் பெரிய சேதத்தை சந்திக்க நேரிடும். இப்போது அப்படிப்பட்ட ஆபத்தான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம் வாருங்கள்.
1. மேஷம்
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, போர் குணம் ஆகியவற்றின் காரணியாவார். எனவே மேஷ ராசிக்காரர்கள் இயற்கையாகவே போர் குணமிக்கவர்களாக இருப்பார்கள். தங்களின் போட்டியாளர்களுக்கு எதிராக சவால்விட சற்றும் தயங்கமாட்டார்கள். இந்த ராசிக்காரர்களை யாரேனும் எதிர்கொண்டால், எதிராளியை எப்படி சமாளிப்பது என்பது இவர்களுக்கு நன்கு தெரியும். இவர்களின் அகராதியில் மன்னிப்பு என்ற வார்த்தைக்கே இடமில்லை. எனவே இந்த ராசிக்காரர்களுடன் மோதுவதற்கு முன் பல முறை சிந்தியுங்கள்.
2. சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த சிம்ம ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை மற்றும் செல்வாக்குமிக்கவர்கள். இவர்களுக்கு சுயமரியாதை மிகவும் முக்கியம். இவர்கள் எப்போதும் அழுத்தம் நிறைந்த இடத்தில் வேலை செய்ய விரும்பமாட்டார்கள். மிகவும் துணிச்சலானவர்கள், அச்சமற்றவர்கள். இவர்களை யாரேனும் பகைத்துக் கொண்டால், இந்த ராசிக்காரர்கள் பகைவர்களை மிகுதியாக வருத்தப்பட வைப்பார்கள். எனவே இந்த ராசிக்காரர்களிடம் சற்று கவனமாக இருங்கள்.
3. விருச்சிகம்
விருச்சிக ராசியின் அதிபதியும் செவ்வாய். இந்த ராசிக்காரர்கள் கோபம் மற்றும் திட்டம் தீட்டுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். ஒருவித ரகசியமானவர்களாக, யாராலும் கணிக்க முடியாத அளவில் இருப்பார்கள். தன்னை எதிர்த்தவர்களை இவர்கள் எப்போது, எப்படி தாக்குவார்கள் என்று யூகிப்பது கடினம். இவர்கள் ஒருவரை எதிரியாக நினைத்துவிட்டால், வாழ்நாள் முழுவதும் எதிரியாகவே பார்ப்பார்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வீழ்த்த முயற்சிப்பார்கள். எனவே இந்த ராசிக்காரர்களையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
4. மகரம்
மகர ராசியின் அதிபதி சனி பகவான். இந்த ராசிக்காரர்கள் அமைதியானவர்களாக காணப்படுவார்கள். ஆனால் இவர்களுக்கு யாரேனும் சவால்விட்டால், இவர்கள் ஆபத்தானவர்களாகிவிடுவார்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையில் சமநிலையை பேணக்கூடியவர்கள். தன்னைக் காயப்படுத்தியவரை பழிவாங்காமல் விடமாட்டார்கள். இவர்கள் எதையும் மன்னிக்கவும், மறக்கவும் மாட்டார்கள். தந்திரமாக செயல்பட்டு எதிரிகளுக்கு தகுந்த பாடத்தை கற்பிப்பார்கள்.
5. கும்பம்
கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். இந்த கும்ப ராசிக்காரர்கள் சற்று வித்தியாசமானவர்கள். சுதந்திரமாக செயல்பட விரும்புவார்கள். புத்திசாலிகள். யாராவது தங்கள் வாழ்க்கையில் தலையிட்டாலோ அல்லது அநீதி இழைத்தாலோ, அதை அவர்கள் எளிதில் மறந்துவிட மாட்டார்கள். பகையை மனதில் நீண்ட காலம் வைத்திருப்பார்கள். அதை தீர்க்க சரியான நேரம் வரும் வரை பொறுமையாக காத்திருப்பார்கள். எனவே இவர்களிடம் சற்று கவனமாக இருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
















