Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
இந்த 4 ராசிக்காரங்க ராஜா போல ஆடம்பரமான வாழ்க்கை வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
வாழ்க்கையை வாழும் முறை என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். சிலர் மிகவும் அமைதியான மற்றும் எளிமையான வாழ்க்கையை வாழ விரும்புபவர்கள். அதேசமயம் சிலர் மிகவும் கலகலப்பான மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். அவர்களின் இந்த ஆடம்பர வாழ்க்கை மீதான ஆசைக்கு அவர்களின் பிறந்த ராசி காரணமாக இருக்கலாம்.
வாழ்க்கையில் சிறந்த விஷயங்களை அனுபவிக்க வேண்டும் என்ற அவர்களின் ஆசை, வெறும் கனவு மட்டுமல்ல, அவர்கள் நினைத்த ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கும் சாதனையாளர்களாகவும் இருப்பார்கள். அதற்கான திறமையும், குணங்களும் அவர்களிடம் இயல்பிலேயே இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிகளில் பிறந்தவர்கள் ஆடம்பர வாழ்க்கையை கனவு கண்டு அதை அடைபவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

துலாம்
அன்பு மற்றும் ஆடம்பரத்தின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் துலாம் ராசிக்காரர்கள் ஆடம்பர வாழ்க்கையின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஃபேஷன், அழகியல் மற்றும் அழகு மீதான அவர்களின் அன்பு, எந்தக் கூட்டத்திலும் அவர்களைத் தனித்து நிற்க வைக்கிறது.
ஆடம்பர வாழ்க்கை மற்றும் வாய்ப்புகளை எளிதில் ஈர்க்கும் ஒரு காந்த சக்தி அவர்களிடம் உள்ளது. துலாம் ராசிக்காரர்கள் ஒரு அறைக்குள் நுழையும்போது, அவர்களின் இருப்பு தெளிவாகத் தெரியும். அவர்கள் அமைதியான மனநிலையும், ராஜதந்திர ஆளுமையும் அவர்கள் விரும்பும் ஆடம்பர வாழ்க்கையை அவர்களுக்கு அளிக்கிறது. அவர்களின் வசீகரமும், நட்புணர்வும் அவர்களுக்கு பல நன்மைகளை அளிக்கிறது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களும் அழகு, அன்பு மற்றும் ஆடம்பரத்தின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படுகிறார்கள். இது ரிஷப ராசிக்காரர்களை ஆடம்பர வாழ்க்கை வாழும் ராசிகளில் ஒன்றாக மாற்றுகிறது. அவர்கள் சிறந்த உணவு, வெளிநாடு சுற்றுலா, வசதியான வீடுகள் மற்றும் உயர்தர ஆடைகளை அதிகம் விரும்புகிறார்கள்.
ரிஷப ராசிக்காரர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ விரும்புவதால் அதற்காக கடினமாக உழைக்கிறார்கள். அவர்கள் செல்வத்திற்காகவும், புகழுக்காவும் அவசரப்படுவதில்லை, ஆனால் ஆறுதல் மற்றும் தரம் நிறைந்த அழகான வாழ்க்கையை கட்டியெழுப்புவதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். ரிஷப ராசிக்காரர்கள் மற்றவர்கள் கனவு காணும் ஒரு வாழ்க்கையை வாழ்வார்கள்.
சிம்மம்
சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள் அவர்களின் துணிச்சலான ஆளுமைக்கும், கவனத்தை ஈர்க்கும் குணத்திற்கும் பெயர் பெற்றவர்கள். சிம்ம ராசிக்காரர்கள் அரசர்களைப் போல பிரகாசிக்கவும், ஆடம்பரமாக வாழவும் பிறந்தவர்கள். அவர்கள் ஆடம்பர வாழ்க்கையை விரும்புகிறார்கள், ஏனெனில் அது அவர்களுக்கு திருப்தியை அளிக்கிறது மற்றும் அவர்களை சிறப்பாக உணர வைக்கிறது.
தனித்துவமான உடைகள் முதல் கவர்ச்சியான பார்ட்டிகள் மற்றும் சொகுசு கார்கள் என எப்போதும் சிறந்ததையே அவர்கள் விரும்புகிறார்கள்.
ஆடம்பர வாழ்க்கை மீதான அவர்களின் ஆசை வெறும் ஆசை மட்டுமல்ல, அது அவர்களின் இலட்சியம்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் ஒழுக்கமானவர்காளாகவும், அனைத்து விஷயங்களிலும் தீவிரமாகவும் இருக்கலாம், ஆனால் அவர்களின் ஆழ்மனதில் ஆடம்பர வாழ்க்கை மீது தீராத ஆசை இருக்கும். சனிபகவான் ஆட்சி செய்யும் அவர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் வெற்றியின் ஏணியில் ஏற உறுதியுடன் இருப்பார்கள். அவர்களின் ஒரே குறிக்கோள் ஆடம்பரமான வாழ்க்கைதான்.
மற்ற ராசிக்காரர்களைப் போலல்லாமல், மகர ராசிக்காரர்கள் தங்கள் செல்வத்தை அனைவரிடமும் வெளிப்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக தங்கள் செல்வத்தை முதலீடுகள் மற்றும் சொத்துக்களை குவிப்பதன் மூலம் வெளிப்படுத்துவார்கள். கடின உழைப்பின் மூலம் ஆடம்பர வாழ்க்கையை அடைவதில் அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர் மற்றும் அவர்களின் வெற்றிக்காக மற்றவர்கள் அவர்களை மதிப்பதை ரசிக்கிறார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












