Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
இந்த 4 ராசிக்காரங்க வியாபார உலகின் சக்கரவர்த்தியாக இருப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
இந்த உலகம் வியாபாரிகளால் வியாபாரிகளுக்காக இயங்ககுகிறது என்பதே கசப்பான உண்மை. உலகின் நூற்றுக்கணக்கான கோடி மக்கள் சில ஆயிரம் முதலாளிகளுக்காகவே உழைக்கிறார்கள். அந்த சக்திவாய்ந்த இடத்திற்கு செல்லும் அதிர்ஷ்டம் அனைவருக்கும் இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் சில தனித்திறமைகள் இருந்தாலும் வெகுசிலர் மட்டுமே தொழில் உலகில் பிரகாசிக்க முடியும். அதற்கு காரணம் அவர்களின் பிறந்த ராசியாக இருக்கலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் முதலாளியாகவே பிறந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் தொழில் உலகம் சிறந்து விளங்க வைக்கும் தனித்துவமான குணங்களைக் கொண்டுள்ளனர். அவர்களிடம் வலுவான தலைமைத்துவம், புதுமையான யோசனைகள் மற்றும் துணிந்து ஆபத்துக்களை சந்திக்கும் தைரியம் இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் தங்கள் ஆளுமைப் பண்புகளால் தொழில்களைத் தொடங்குவதிலும், நடத்துவதிலும் சிறந்தவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் தைரியம் மற்றும் ஆற்றலின் கிரகமான செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுகிறார்கள். மேஷ ராசிக்காரர்கள் அளவிலா தன்னம்பிக்கை கொண்டவர்கள், ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள். அவர்கள் தோல்வியைப் பார்த்து ஒருபோதும் பயப்படுவதில்லை, எப்போதும் புதிய விஷயங்களை முயற்சிப்பார்கள். இது அவர்களை சிறந்த தொழிலதிபர்களாக மாற்றுகிறது. மேஷ ராசிக்காரர்கள் வேகமாக முன்னேறுவார்கள். அவர்களிடம் எப்போதும் புதிய யோசனைகள் இருக்கும், அதை முடிந்த அளவிற்கு செயலாக்குவார்கள்.
அவர்கள் மிகவும் ஆர்வமுள்ளவர்கள், மற்றவர்களை கடினமாக உழைக்க ஊக்குவிக்க முடியும். அவர்களின் அசைக்க முடியாத ஆற்றல் எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதை சாதிக்க அவர்களுக்கு உதவுகிறது. பொறுமையாக முடிவெடுக்க மட்டும் அவர்கள் கற்றுக்கொண்டால் அவர்களின் வெற்றி யாராலும் தடுக்க முடியாததாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் சூரியனால் ஆளப்படுகிறார்கள், இது அவர்களை நம்பிக்கையுடனும் வலிமையுடனும் ஆக்குகிறது. சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்க விரும்புகிறார்கள், மேலும் மக்களை தங்கள் பக்கம் ஈர்ப்பது என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். இது அவர்களின் வியாபாரத்தில் மிகப்பெரிய பலமாக இருக்கும். சிம்ம ராசிக்காரர்கள் பொருட்களை சந்தைப்படுத்துவதிலும் விற்பனை செய்வதிலும் சிறந்தவர்கள்.
அவர்கள் வசீகரமானவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை எவ்வாறு ஈர்ப்பது என்ற ரகசியத்தை நன்கு அறிவார்கள். அவர்கள் பெரிய கனவுகளைக் காண விரும்புகிறார்கள், வெற்றியை அடைய கடினமாக உழைக்கிறார்கள். சிம்ம ராசிக்காரர்கள் இயற்கையான தலைவர்கள், அவர்கள் எப்போதும் அதிகாரத்தில் இருப்பதை விரும்புகிறார்கள். அதனால் அவர்கள் மிகப்பெரிய வணிகத்தை உருவாக்குவார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் ஆற்றல் மற்றும் மாற்றத்தின் கிரகமான புளூட்டோவால் ஆளப்படுகிறார்கள். விருச்சிக ராசிக்காரர்கள் அதிபுத்திசாலிகள் மற்றும் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்பதை நன்கு அறிந்தவர்கள். அவர்கள் தங்கள் தொழிலைத் தொடங்குவதற்கு முன் அதைப்பற்றிய அனைத்து நுணுக்கங்களையும் தெரிந்து கொள்ளவும்,அந்த தொழிலைப் பற்றி புரிந்து கொள்ளவும் நேரம் எடுத்துக்கொள்கிறார்கள்.
அவர்கள் வியாபாரத்தில் வெற்றிக்காக அவசரப்படுவதில்லை, அவர்கள் எல்லாவற்றையும் கவனமாக திட்டமிட விரும்புகிறார்கள். அவர்கள் மிகவும் உறுதியானவர்கள், ஒரு இலக்கை நிர்ணயித்தால் அதிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள்.மனித உணர்வுகளைப் புரிந்துகொள்வதில் அவர்கள் மிகவும் திறமையானவர்கள், இது அவர்களுக்கு புத்திசாலித்தனமான வணிக முடிவுகளை எடுக்க உதவுகிறது.
மகரம்
மகர ராசிக்காரர்கள் ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வின் கிரகமான சனிபகவானால் ஆளப்படுகிறார்கள். மகர ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் மிகவும் தீவிரமாக இருப்பார்கள், எப்போதும் எதிர்காலத்தைப் பற்றி சிறப்பாக திட்டமிடுவார்கள். அவர்கள் பொறுமையாகவும், வெற்றியை அடைய கடினமாக உழைக்கவும் தயாராக இருப்பார்கள்.
அவர்கள் தொழிலில் மிகவும் கவனமாக இருப்பார்கள், தீர யோசிக்காமல் பெரிய ரிஸ்க்-யை எடுக்க மாட்டார்கள். அவர்கள் தங்கள் தொழிலை மெதுவாக ஆனால் நிலையானதாக கட்டியெழுப்ப விரும்புகிறார்கள். பணத்தைக் கையாள்வதிலும், தங்கள் வணிகம் லாபகரமாக இருப்பதை உறுதி செய்வதிலும் அவர்களுக்கு நிகர் அவர்கள் மட்டுமே.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
