Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களால் செய்ய முடியாத காரியத்தை செய்வதற்காகவே பிறந்தவர்களாம்...!
ஒருவரின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள பல நூற்றாண்டுகளாக ஜோதிட சாஸ்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்கள். சில ராசிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் செய்ய முடியாத பெரிய காரியங்களைச் செய்வதற்காகவேப் பிறந்தவர்கள்.
உலகில் எந்த விஷயமும் அவர்களை தடுக்க விடமாட்டார்கள். அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள், ஒருபோதும் தங்கள் இலட்சியத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் மற்றவர்களால் செய்ய முடியாத காரியத்தை செய்வதற்காகவே பிறந்தவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
ராசி சக்கரத்தின் முதல் ராசியான மேஷ ராசி சக்தி மற்றும் ஆற்றலின் கிரகமான செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுகிறது. மேஷ ராசிக்காரர்கள் சவால்களை விரும்புகிறார்கள். ஏதாவது மிகவும் கடினமாகத் தோன்றினால், அதை அவர்கள் ஆர்வத்துடன் செய்கிறார்கள், அதில் வெற்றி பெற எப்போதும் கடினமாக உழைக்கிறார்கள்.
அவர்களிடம் உள்ள சிறப்பு குணம் என்னவென்றால், அவர்கள் ஒருபோதும் முயற்சியை கைவிட மாட்டார்கள். அவர்கள் தோல்வியடைந்தால், நீண்ட நேரம் சோகமாக உட்கார மாட்டார்கள். மாறாக, அவர்கள் தங்கள் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு மீண்டும் முயற்சி செய்கிறார்கள். அவர்கள் மற்றவர்கள் செய்ய பயப்படும் ரிஸ்க்கான விஷயங்களை துணிந்து செய்வார்கள். மேஷ ராசிக்காரர்கள் எப்போதும் முதலில் இருக்க விரும்புகிறார்கள், வெற்றியைத் துரத்துவதை அவர்கள் ஒருபோதும் நிறுத்த மாட்டார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இயற்கையாகவே வெற்றிக்காக பிறந்தவர்கள். அவர்கள் கிரகங்களின் அதிபதியான சூரியனால் ஆளப்படுகிறார்கள், இது அவர்களை வலிமையானவர்களாகவும், தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் மாற்றுகிறது. அவர்கள் கவனத்தை ஈர்த்து மற்றவர்களை ஊக்கப்படுத்த விரும்புகிறார்கள்.
சிம்ம ராசிக்காரர்கள் பெரிய கனவுகளைக் காண்கிறார்கள், அவர்கள் கனவு காண்பதுடன் நிறுத்தி விட மாட்டார்கள், அவர்கள் அதற்காக உழைக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் தங்களின் தோல்வியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மற்றவர்களால் கிட்ட நெருங்கவே முடியாத விஷயங்களை சிம்ம ராசிக்காரர்கள் செய்து காட்ட விரும்புவார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் அதிக மனவலிமை கொண்டவர்கள். மாற்றத்திற்கும் சக்திக்கும் உரிய கிரகமான புளூட்டோவால் அவர்கள் ஆளப்படுகிறார்கள். வாழ்க்கை எத்தனை முறை அவர்களை வீழ்த்தினாலும், அவர்கள் பீனிக்ஸ் பறவை போல மீண்டும் மீண்டும் எழுந்து வருவார்கள்.
விருச்சிக ராசிக்காரர்கள் அனைத்து விஷயங்களின் மீதும் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் ஏதாவது செய்ய முடிவு செய்தால், எதுவும் அவர்களைத் தடுக்க முடியாது. அவர்கள் அமைதியாக வேலை செய்கிறார்கள், தங்கள் வெற்றியால் அனைவரையும் ஆச்சரியப்படுத்துவார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் மிகவும் கடின உழைப்பாளிகள். ஒழுக்கம் மற்றும் விதியின் கிரகமான சனிபகவான் அவர்களை ஆள்கிறார். அவர்கள் அதிர்ஷ்டத்தை நம்புவதில்லை, மாறாக அவர்கள் தங்களின் கடின உழைப்பை நம்புகிறார்கள்.
மகர ராசிக்காரர்கள் அவசரப்படுவதில்லை. எல்லாம் சரியாக இருப்பதை உறுதிசெய்து படிப்படியாக நிதானமாக நகர்கிறார்கள். அவர்கள் பொறுமையாக இருக்கிறார்கள், வெற்றிக்கு நேரம் எடுக்கும் என்பதை அறிவார்கள். அவர்களின் மிகப்பெரிய ஆயுதமே அவர்களின் நிதானம்தான். அதைவைத்து மற்றவர்களால் செய்ய முடியாத விஷயங்களை சாதிப்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

