Latest Updates
-
குரு-சந்திரன் உருவாக்கும் கஜகேசரி ராஜயோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் தேடிவரப்போகுது...! -
தமிழ்நாட்டின் ஸ்டார் அரசியல்வாதிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட போகிறார்கள் தெரியுமா? -
தேர்தல் பிரச்சாரங்களின் போது ஏன் இளநீர் அரசியல் தலைவர்களின் விருப்பமான பானமாக உள்ளது தெரியுமா? -
கோடை வெயிலால் முகம் டல்லா, கருப்பா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
பாய் வீட்டு சிக்கன் பிரியாணி ரெசிபி... இந்த ரம்ஜானுக்கு இப்படி பிரியாணி செஞ்சு பாருங்க... தாறுமாறா இருக்கும்! -
வெண்டைக்காய் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி மொறுமொறுன்னு சிப்ஸ் செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க புரியாத புதிராக இருப்பார்களாம்... இவங்கள யாராலும் புரிஞ்சிக்க முடியாதாம்...! -
மீன ராசியில் அரிய சனி-செவ்வாய் சேர்க்கை: ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
4 முட்டையும், ஒரு உருளைக்கிழங்கும் இருந்தா இப்படி முட்டை அவியலை செய்யுங்க...டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்...! -
ரம்ஜான் ஸ்பெஷல் ஆப்கானி மட்டன் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
இந்த 4 ராசிக்காரங்க காதல்னாலே பயந்து ஓடுபவர்களாக இருப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
காதல் என்பது ஒரு அழகான மற்றும் அற்புதமான உணர்வாகும். ஆனால் அனைவருக்கும் காதல் ஒரே மாதிரியான உணர்வுகளையும், அனுபவத்தையும் வழங்குவதில்லை. அதனால்தான் பலரின் காதல் தோல்வியில் முடிகிறது, அவர்களும் வாழ்க்கையில் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர மிகவும் சிரமப்படுகிறார்கள்.
சிலருக்கு காதலில் விழுவது என்பது தீவிரமான பயத்தை ஏற்படுத்தலாம். இந்த பயம் அவர்களின் கடந்த கால அனுபவங்கள், தனிப்பட்ட சிக்கல்கள், அவர்களின் நண்பர்களின் மோசமான காதல் வாழ்க்கை போன்றவற்றிலிருந்து ஏற்படலாம். குறிப்பாக அவர்களின் பிறந்த ராசி இந்த பயத்தைத் தூண்டலாம். சில ராசிகளில் பிறந்தவர்கள் காதலில் விழுவதை நினைத்து அச்சப்படலாம். அவர்களுக்குள் காதலிக்க வேண்டுமென்ற ஆசை இருந்தாலும் பயம் அவர்களை காதலில் இருந்து விலக்கியே வைத்திருக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் காதலை நினைத்து பயப்படுவார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

கடகம்
சந்திரனால் ஆளப்படும் கடக ராசிக்காரர்கள் தங்களின் ஆழமான உணர்ச்சிகளுக்கும் உணர்ச்சிவசப்படும் இயல்புக்கும் பெயர் பெற்றவர்கள். அவர்கள் தீவிரமாக அன்பு செலுத்துவார்கள் மற்றும் காதல் மீதும் ஆர்வம் கொண்டவர்கள். இதுவே அவர்களைக் காதலில் விழுவதற்குப் பயப்பட வைக்கிறது. காதலால் காயப்பட்டுவிடுவோமோ என்று பயந்து, அவர்கள் பெரும்பாலும் தங்கள் இதயத்தைச் சுற்றி ஒரு பாதுகாப்புச் சுவரை எழுப்பிக்கொள்கிறார்கள். காதலில் விழுவது குறித்த அவர்களின் பயமானது நிராகரிப்பு மற்றும் உணர்ச்சிப்பூர்வமான வலி பற்றிய பயத்துடன் தொடர்புடையது. இருப்பினும், ஒருமுறை கடக ராசிக்காரர்கள் ஒருவருடன் பாதுகாப்பாக உணர்ந்துவிட்டால், அவர்கள் மிகவும் பாசமான மற்றும் நேர்மையான துணையாக இருப்பார்கள். காதல் குறித்த அவர்களின் பயத்தைப் போக்க அவர்களுக்கு உறுதிமொழியும் ஒரு வலுவான உணர்ச்சிப்பூர்வமான தொடர்பும் தேவைப்படுகிறது.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் அனைத்து விஷயங்களிலும் பர்பெக்ட்டாக இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள், மேலும் எல்லாவற்றையும் பற்றி அதிகமாகச் சிந்திப்பார்கள். காதலில் விழுவது பற்றிய அவர்களின் பயம், அவர்களின் துணையின் குறைபாடுகள் மீதான அவர்களின் பயத்திலிருந்து வருகிறது. சரியான துணையைத் கண்டுபிடிக்க முடியாமல் போய்விடுமோ அல்லது தாங்களே போதுமான அளவு சிறந்தவர்களாக இல்லையோ என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். இந்த பயம் அவர்களை காதலில் விழுவதை தயங்க வைக்கிறது. காதல் என்பது பர்பெக்ட்டாக இருப்பது பற்றியது அல்ல என்பதை கன்னி ராசிக்காரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் தீவிரத்துடனும் பேரார்வத்துடனும் அனைவரின் மீதும் அன்பு செலுத்துவார்கள். இருப்பினும், காதலில் விழுவது குறித்த அவர்களின் பயம், தங்களை முழுமையாக வெளிப்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு பற்றிய அச்சத்திலிருந்து எழுகிறது. விருச்சிக ராசிக்காரர்கள் காயப்பட விரும்பாததால், தங்கள் இதயத்தை மிகவும் கவனமாகப் பாதுகாக்கிறார்கள். ஒருவரை தங்கள் வாழ்க்கைக்குள் காதல் துணையாக கொண்டு வருவது, தங்களை உணர்ச்சிப்பூர்வமான வலிக்கு ஆளாக்கிவிடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். இந்த பயத்திலிருந்து வெளிவருவதற்கு விருச்சிக ராசிக்காரர்கள் நம்பிக்கை மற்றும் விசுவாசத்திற்கு மதிப்பளிக்கும் ஒரு துணையைத் தேட வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் ஒழுக்கமானவர்களாகவும், யதார்த்தமானவர்களாகவும் இருப்பார்கள். காதல் கொள்வதில் அவர்களுக்கு இருக்கும் பயம், தங்கள் கட்டுப்பாட்டையும், ஒழுக்கத்தையும் இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் வேரூன்றியுள்ளது. காதல் தங்களின் நன்கு திட்டமிடப்பட்ட வாழ்க்கையை சீர்குலைத்துவிடும் என்று அவர்கள் பயப்படுகிறார்கள். மகர ராசிக்காரர்கள் பெரும்பாலும் உறவுகளை விட தங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட இலக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். இவர்கள் காதல் தங்கள் வாழ்க்கையில் ஆதரவு மற்றும் ஸ்திரத்தன்மையின் ஆதாரமாக இருக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












