Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
இந்த 4 ராசிக்காரங்க உயிரே போனாலும் உண்மையை மட்டும்தான் பேசுவார்களாம்...ரொம்ப நேர்மையானவர்களாம் இவங்க...!
இந்த அவசரமான உலகில் நேர்மையாகவும், உண்மையாகவும் இருப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக மாறிவிட்டது, சொல்லப்போனால் நேர்மையாக இருப்பவர்களை பார்ப்பதை ஆச்சரியமானதாக மாறிவிட்டது. நேர்மையைக் கடைபிடிப்பது மிகவும் சவாலானதாகும், ஏனெனில் உண்மை பெரும்பாலும் மற்றவர்களை காயப்படுத்தலாம், அதனாலேயே பலரும் உண்மை பேசுவதைத் தவிர்க்கிறார்கள்.
ஜோதிடத்தின் படி சில ராசிக்காரர்கள் விளைவுகள் எப்படி இருந்தாலும், நேர்மை மீதும், உண்மை மீதும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு பெயர் பெற்றவர்கள். இந்த ராசிக்காரர்கள் உண்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை மதிக்கிறார்கள், பெரும்பாலும் நேர்மையை தங்களின் பெருமையாகவும், அடையாளமாகவும் கருதுகிறார்கள். அதனால் அவர்களின் உண்மை எவ்வளவு அசௌகரியத்தை ஏற்படுத்தினாலும் அவர்கள் அதை தொடர்ந்து கடைபிடிக்கிறார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் உயிரே போனாலும் உண்மையை மட்டும் பேசுவார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
தனுசு
குருபகவானால் ஆளப்படும் தனுசு ராசிக்காரர்கள், வெளிப்படையான மற்றும் நேரடியான இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். தனுசு ராசிக்காரர்கள் பெரும்பாலும் ராசி சக்கரத்தின் உண்மை விளம்பிகள் என்று விவரிக்கப்படுகிறார்கள், மேலும் அவர்கள் தங்கள் நேர்மையை தங்களின் பெருமையாகக் கருதுகிறார்கள். நேர்மையே சிறந்த கொள்கை என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள், மேலும் அவர்கள் எவ்வளவு காயத்தை ஏற்படுத்தினாலும் அதையே பின்பற்ற விரும்புகிறார்கள்.
தனுசு ராசிக்காரர்கள் உண்மையின் மீது ஆழ்ந்த மரியாதை கொண்டுள்ளனர், மேலும் விளைவுகளைப் பொருட்படுத்தாமல் தங்கள் மனதில் உள்ளதை வெளிப்படுத்த அவர்கள் தயங்குவதில்லை. தனுசு ராசிக்காரர்களுக்கு, நேர்மை என்பது அவர்களின் வாழ்க்கையில்a தவிர்க்க முடியாத அங்கமாகும்.
மேஷம்
செவ்வாயால் ஆளப்படும் மேஷ ராசிக்காரர்கள் துணிச்சலானவர்கள், நேரடியானவர்கள், உண்மைகளை மறைப்பவர்கள் அல்ல. மேஷ ராசிக்காரர்கள் தங்களின் நேர்மையை மதிக்கிறார்கள், மற்றவர்களிடமிருந்தும் அதையே எதிர்பார்க்கிறார்கள், அதனால்தான் அவர்கள் எப்போதும் தங்கள் உணர்வுகளில் வெளிப்படைத்தன்மையை மதிக்கிறார்கள்.
வஞ்சகம் அல்லது கையாளுதலை எதிர்கொள்ள அவர்களிடம் பொறுமை இல்லை, மேலும் பிரச்சினைகளை நேரடியாக எதிர்கொள்வதையே விரும்புவார்கள். மேஷ ராசிக்காரர்கள் அநியாயத்திற்கு நேர்மையானவர்களாக இருக்கலாம், அவர்களின் நேர்மை மற்றவர்களை பயமுறுத்தும் அளவிற்கு இருக்கும். நம்பிக்கையை வளர்ப்பதற்கும், வலுவான உறவுகளை உருவாக்குதற்கும் நேர்மை அவசியம் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

கன்னி
கிரகங்களின் இளவரசரான புதனால் ஆளப்படும் கன்னி ராசிக்காரர்கள், மிகவும் கவனமாகவும், பகுப்பாய்வு செய்பவர்களாகவும், தங்கள் கொள்கைகளின் அடிப்படையிலும் செயல்படுபவர்கள். கன்னி ராசிக்காரர்கள் தங்கள் பொறுப்புணர்வுக்கும், நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டிற்கும் பெயர் பெற்றவர்கள். அவர்கள் ஒவ்வொரு விஷயங்களையும் கூர்ந்து கவனிப்பார்கள், ஏதாவது தவறு நடந்தால் அதை முதலில் கவனிப்பார்கள்.
கன்னி ராசிக்காரர்கள் உண்மையையும், நேர்மையையும் மதிக்கிறார்கள், மேலும் மற்றவர்களின் தவறுகளை சுட்டிக்காட்ட ஒருபோதும் பயப்படுவதில்லை, அது அவர்களை காயப்படுத்தினாலும் அதை அவர்கள் உறுதியுடன் செய்வார்கள். மற்றவர்கள் முன்னேறவும் வளரவும் உதவ வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தில் அவர்களின் நேர்மை வேரூன்றியுள்ளது. சுய முன்னேற்றத்திற்கும் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் நேர்மை அவசியம் என்று கன்னி ராசிக்காரர்கள் நம்புகிறார்கள்.
மகரம்
சனிபகவானால் ஆளப்படும் மகர ராசிக்காரர்கள் ஒழுக்கமும், தீவிர பொறுப்புணர்வும் கொண்டவர்கள். மகர ராசிக்காரர்கள் நேர்மையை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள், மேலும் அவர்கள் தங்களின் நேர்மைதான் தங்களின் அடையாளம் என்று கருதுகிறார்கள். அவர்கள் நேர்மையானவர்களாகவும், நம்பகமானவர்களாகவும் இருப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளனர், மேலும் மற்றவர்களிடமிருந்தும் அதையே எதிர்பார்க்கிறார்கள்.
மகர ராசிக்காரர்கள் உண்மையை மறைப்பதில் அல்லது திரித்து கூறுவதில் ஒருபோதும் ஆர்வம் காட்டுவதில்லை, அவர்கள் உண்மைகளை எதிர்கொண்டு யதார்த்தத்தை நேரடியாக எதிர்கொள்ள விரும்புகிறார்கள். நேர்மைக்கான அவர்களின் அர்ப்பணிப்பு நிலைத்தன்மை மற்றும் ஒழுங்குக்கான அவர்களின் விருப்பத்தால் இயக்கப்படுகிறது, ஏனெனில் நேர்மைதான் எந்தவொரு உறவிற்கும் அடிப்படையானது என்று அவர்கள் நம்புகிறார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications