Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
Today Rasi Palan 31 October 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பேச்சையும், கோபத்தையும் கட்டுப்படுத்த வேண்டும்...
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்..
.

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 10.45-11.45 மணி வரை. ராகு காலம் காலை 1.30-3.00 மணி வரை. குளிகை காலை 9.00-10.30 மணி வரை. எமகண்டம் காலை 6.00-7.30 மணி வரை. சூலம் - தெற்கு திசை. சதயம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று உங்கள் திட்டங்களில் தெளிவாக இருப்பீர்கள். பழைய நண்பர்களை சந்திக்கலாம். கடந்த காலத்தில் எடுத்த முயற்சிகளுக்காக இன்று பாராட்டப்படுவீர்கள். நிதி ரீதியாக நன்றாக இருக்கும். உங்களின் நல்ல செயல்கள் உங்களுக்கு நற்பலனைக் கொடுக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று கிடைக்கும் வாய்ப்புக்களைபயன்படுத்திக் கொண்டால், வாழ்க்கையில் சில நல்ல மாற்றங்களைக் காணலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். நிதி ரீதியாக பாதுகாப்பாக உணர்வீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று உங்கள் தாயாரின் முழு ஆதரவு கிடைக்கும். உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சியில் அதிகம் ஈடுபடுவீர்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களை ஒரு உத்வேகமாக எடுத்துக் கொள்ளலாம். வருமானம் அதிகரிக்கும். இதன் விளைவாக நிதி நிலை மேம்படும். மொத்தத்தில் இன்று சிறப்பான நாளாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். பயணம் மேற்கொள்ள திட்டமிடுவீர்கள். பண வரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சாதகமாக இருக்கும். மாணவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். கடுமையான சொற்களைப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். ஆனால் ஆரோக்கிய பிரச்சனைகள் தொந்தரவு செய்யக்கூடும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு பரபரப்பான மற்றும் கடினமான நாளாக இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். ஆனால் நிதி ரீதியாக பாதுகாப்பாக உணர்வீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று நிதி ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்த முன்னேற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது. உங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். நிச்சயம் உங்களுக்கு நல்லதே நடக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று காதல் வாழ்க்கை சற்று சிக்கலானதாக இருக்கும். எனவே வாழ்க்கைத் துணையிடம் சற்று கவனமாக இருங்கள். தொழில் ரீதியாக, இன்று கிடைக்கும் புதிய திட்டம் எதிர்காலத்தில் கூடுதல் வருமானத்தை அளிக்கும். பண பிரச்சனைகள் அதிகமாக இருக்கும். ஆனால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று நீங்கள் சில சமூகப் பணிகளில் ஈடுபடலாம். ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். சோம்பேறித்தனம் அதிகரிக்கலாம். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களைத் தூண்டிவிட முயற்சி செய்யலாம் என்பதால் அமைதியாக இருங்கள். உங்களைச் சுறியிருப்பவர்கள் மன உறுதியைக் குறைக்கவும் முயற்சிப்பார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று வெளியாட்களுடன் எந்த ஒப்பந்தத்தையும் செய்யாதீர்கள். கடுமையான வார்த்தைகளைப் பேசுவதைத் தவிர்க்கவும். காதல் வாழ்க்கை சிக்கலாக மாறலாம். நிதி நிலைமைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும், ஆனால் எங்கு செலவிடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று தொழில் ரீதியாக சில வலுவான முடிவுகளை எடுப்பீர்கள். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. பண வரவுகளை சரியாக கணிப்பீர்கள். இன்று உங்கள் மீது நீங்கள் அதிக நம்பிக்கை கொள்ள வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! நீண்ட நாட்களுக்கு பின் இன்று குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கை இனிமையாக இருக்கும். காகித வேலைகளில் கவனமாக இருங்கள். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கலாம். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேறறம் ஏற்பட வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications