Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
Today Rasi Palan 30 September 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் தேவைக்கு அதிகமாக பிறரை நம்புவதைத் தவிர்க்கவும்..
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். 2024ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி திங்கட்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 6.15-7.15 மணி வரை. மாலை 3.15-4.15 மணி வரை. ராகு காலம் காலை 7.30-9.00 மணி வரை. குளிகை காலை 1.30-3.00 மணி வரை. எமகண்டம் காலை 10.30-12.00 மணி வரை. சூலம் - கிழக்கு திசை. உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, வியாபாரிகளுக்கு இன்று ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். பிறரை அளவிற்கு அதிகமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம். நீங்கள் உடனே மருத்துவரை அணுக வேண்டும். குடும்ப பிரச்சனைகள் தீர்ந்து உங்கள் கவலைகள் நீங்கும். வியாபாரிகளுக்கு வணிக நிலைமை சாதகமாக இருக்கும். பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். உத்தியோகஸதர்கள் வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இல்லையெனில், சில முக்கியமான பொறுப்புகள் உங்களிடமிருந்து திரும்பப் பெறப்படலாம். வீட்டில் சூழ்நிலை நன்றாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் ஒருங்கிணைப்பையும் நல்லிணக்கத்தையும் பேணுங்கள். அதிகப்படியான அலைச்சல் உடற்சோர்வு மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் காலை 11 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, சோம்பல் காரணமாக உங்களின் முக்கியமான சில வேலைகள் முழுமையடையாமல் இருக்கும். எனவே, கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். தாயாரின் உடல்நிலையில் கவலைகள் ஏற்படும். உங்கள் குழந்தையின் திருமணத்தில் ஏதேனும் தடை ஏற்பட்டால், அது நீங்கும் வாய்ப்பு அதிகம். நீங்கள் கூட்டு வியாபாரம் செய்தால் நிதி பரிவர்த்தனை தொடர்பான நடவடிக்கைகளில் தெளிவு வேண்டும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் அறிவுரைகளை அலட்சியம் செய்வதைத் தவிர்க்கவும். குடும்பத்தில் உள்ளவர்களிடையே நல்லிணக்கம் நிலவும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி தொடரும். உடல்நலம் தொடர்பான எந்தவொரு பிரச்சனையையும் புறக்கணிக்காதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மாலை 7 மணி முதல் இரவு 9:30 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணை எங்காவது வெளியே செல்ல திட்டமிடலாம். வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த செலவுகளைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். தொழிலதிபர்கள் பணம் தொடர்பான திட்டங்களை ரகசியமாக வைக்க முயற்சிக்கவும். உத்தியோகஸ்தர்களின் செயல்திறன் மேம்படும், உங்கள் வேலைகள் அனைத்தும் தடையின்றி முடிவடையும். எக்காரணம் கொண்டும் குடும்ப உறவுகளில் தவறான புரிதல்கள் அதிகரிக்க விட வேண்டாம். காதல் வாழ்க்கையில் உறவு வலுவடையும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 2:30 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த எந்தவொரு வேலையும் இன்று முடிவடையும். இது உங்களுக்கு மிகுந்த நிம்மதியைத் தரும். குடும்ப உறுப்பினருடனும் எக்காரணம் கொண்டும் வாக்குவாதம் செய்யாதீர்கள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். தாராளமாக செலவு செய்வீர்கள். தொழிலதிபர்களின் வியாபாரம் சுமுகமாக நடைபெறும். உங்களுக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். வீட்டில் சூழ்நிலை நன்றாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை மிகவும் காதல் நிறைந்த மனநிலையில் இருப்பார். ஒருவருக்கொருவர் அதிக நேரம் செலவிடுவீர்கள்.
ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், தசை சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் தீர்ந்து உங்கள் நிதி நிலையும் வலுவடையும். உத்தியோகஸ்தர்கள் நிலுவையில் உள்ள வேலையை செய்து முடிக்கலாம். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் ஓரளவு முன்னேற்றம் காணப்படும். தொழிலதிபர்களின் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இதெல்லாம் உங்கள் கடின உழைப்பின் பலன். உத்தியோகஸ்தர்கள் திடீர் பயணம் செல்ல நேரிடலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் அன்பும் உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான தவறான புரிதலை அதிகரிக்கவிட வேண்டாம்.
ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஒரு சீரான பழக்கவழக்கத்தையும், ஆரோக்கியமான உணவையும் உண்ண பழகவும்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:30 மணி முதல் மதியம் 1 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்துங்கள். உங்கள் கசப்பான வார்த்தைகள் உங்கள் அன்புக்குரியவர்களை உங்களிடமிருந்து விரட்டிவிடும். மாணவர்களுக்கு இன்று நல்ல நாள். உங்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள். ஆடம்பரத்திற்காக நிறைய பணம் செலவழிக்கலாம். எதிர்காலத்தை மனதில் வைத்து உங்கள் நிதி முடிவுகளை எடுப்பது நல்லது. தொழிலதிபர்கள் சில உறுதியான மற்றும் முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். நீங்கள் உயர் பதவியில் பணிபுரிபவராக இருந்தால், அதிக கோபம் கொள்வதைத் தவிர்க்கவும். வீட்டில் அமைதியான சூழ்நிலை இருக்கும். காதல் வாழ்க்கையில் மந்தமான நிலை இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், எந்தவொரு நாள்பட்ட நோயும் சிக்கலை ஏற்படுத்தலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 39
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, வீட்டில் ஏதேனும் பதற்றம் ஏற்பட்டால், நீங்கள் கோபத்தையும் அவசரத்தையும் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், உங்கள் உறவுகள் இன்னும் பலவீனமாகிவிடும். அலுவலகத்தில் உங்கள் வேலையை சரியான நேரத்தில் முடிக்க முயற்சியுங்கள். சக ஊழியர்களிடம் அதிக எதிர்பார்ப்பு வேண்டாம். மாலை நேரத்தைக் குடும்பத்தினருடன் நன்றாக செலவிடுவீர்கள். ரியல் எஸ்டேட் சம்பந்தமான வேலையில் இருப்பவர்கள் இன்று அவசரமாக ஒப்பந்தம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். உத்தியோகஸ்தர்களின் சில முக்கிய வேலைகளில் தடைகள் இருக்கலாம். ஆனால், உயர் அதிகாரிகளின் உதவியால் உங்கள் பிரச்சனைகள் தீரும். வீட்டில் அமைதியையும் மகிழ்ச்சியையும் பராமரிக்க, சிறிய விஷயங்களுக்கு வாதிடுவதைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சராசரியாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:30 மணி முதல் இரவு 8:50 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, வியாபாரம் சம்பந்தமாக சிறு பயணம் செய்ய வேண்டியிருக்கும். உங்களின் இந்த பயணம் மிகவும் இனிமையாக இருக்கும். பண விஷயத்தில் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். வருமானம் உயர வாய்ப்புள்ளது. மற்றவர்களின் பேச்சைக் கேட்டு வேலை தொடர்பான முக்கிய முடிவை எடுக்காதீர்கள். இல்லையெனில், உங்கள் முன்னேற்றம் தடைபடலாம். குடும்பப் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். தொழிலதிபர்களின் சில வேலைகள் பணியாளரின் அலட்சியத்தால் பாதியில் நிற்கும் வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்கள் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு வேலை தொடர்பான நல்ல செய்திகள் வந்து சேரும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இரவு நேரத்தில் எளிதில் செரிக்கக்கூடிய உணவை உண்ணுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: இரவு 7:30 மணி முதல் இரவு 9:15 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, சமூக சேவைகளில் ஈடுபடுபவர்களுக்கு இன்று மிகவும் சாதகமான நாள். நீங்கள் முன்னேற்றத்திற்கான வழியைத் திறக்கும் நல்ல வாய்ப்பைப் பெறலாம். நீங்கள் உங்கள் குடும்ப வணிகத்துடன் தொடர்புடையவராக இருந்தால், உங்கள் தந்தையின் வழிகாட்டுதல் உங்களுக்குத் தேவைப்படலாம். வீட்டில் சூழ்நிலை நன்றாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலதிபர்களின் வியாபாரம் சார்ந்த செயல்பாடுகள் மேம்படும். நீங்கள் வேலை தேடுகிறீர்கள் என்றால், உங்களுக்கு வெற்றிக்கான வலுவான வாய்ப்புள்ளது. இன்று பெற்றோரின் வழிகாட்டுதலைப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களுடனான உறவு இனிமையாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 32
அதிர்ஷ்ட நேரம்: காலை 6 மணி முதல் காலை 11 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, பரபரப்பான வேலைப்பளு காரணமாக, உங்கள் குடும்பத்திற்கு போதுமான நேரத்தைக் கொடுக்க முடியாது. உங்கள் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையில் சமநிலையைப் பராமரிப்பது முக்கியம். கலைத் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இன்று மிகவும் முக்கியமானதாக இருக்கும். உங்களுக்கான தனி அடையாளத்தை உருவாக்குவதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்கள் துணையிடம் உங்கள் நடத்தை பெருந்தன்மை நிறைந்ததாக இருக்கும். வியாபாரிகளுக்கு போட்டியாளர்களால் சில மனஅழுத்தம் இருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல சலுகைகள் கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் நெருக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மது மற்றும் சிகரெட் போன்றவற்றிலிருந்து விலகி இருக்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, குடும்ப பிரச்சனைகள் தொடர்பான கவலைகள் அதிகரிக்கலாம். நீங்கள் நேர்மறையாக இருக்க வேண்டியது அவசியம். தேவையில்லாத வேலைகளில் நேரத்தை வீணாக்காதீர்கள். இல்லையெனில், நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் வீண் பேச்சுகளைத் தவிர்க்க வேண்டும். உங்கள் தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டால், உங்கள் திட்டத்தில் சில தடைகள் இருக்கலாம். விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிபவர்களுக்கு இன்று மிகவும் சவாலான நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை குலைந்து போகலாம். வாழ்க்கைத் துணையுடனான உறவில் இணக்கம் அதிகரிக்கும். நீங்கள் காதல் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், குடும்பத்தாரின் ஒப்புதன் கிடைக்கும். மன அழுத்தம் மற்றும் பதற்றம் உங்களை ஆள்வதற்கு அனுமதிக்காதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 29
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் காலை 11 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். ஆனால், பெரிய பிரச்சனைகள் இருக்காது. இருப்பினும் இன்று ஓய்வில் அதிக கவனம் செலுத்தினால் நல்லது. நீங்கள் ஏதேனும் சொத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டால், கண்டிப்பாக உங்கள் நெருங்கியவர்களிடம் ஆலோசனை செய்யுங்கள். குழந்தையின் வெற்றியால் மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் அவர்களைப் பற்றி மிகவும் பெருமைப்படுவீர்கள்.வியாபாரிகள் அனுபவம் வாய்ந்த நபரின் வழிகாட்டுதலைப் பெறுவீர்கள். உங்கள் வேலையில் இருந்த தடைகள் நீங்கும். அலுவலகத்தில் மேலதிகாரி உங்கள் வேலையில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார். இன்று குடும்ப உறுப்பினர்களுடன் சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த, உங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 40
அதிர்ஷ்ட நேரம்: மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











