Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
Today Rasi Palan 30 December 2024: இன்று இந்த 4 ராசிக்காரர்கள் அற்புதமான நாளை அனுபவிக்கப் போறாங்களாம்...!
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி திங்கள் கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு நிதிரீதியாக இன்று சாதகமான நாளாக இருக்கும். எந்தவொரு முடிவையும் பதட்டத்தில் அல்லது அவசரத்தில் எடுப்பதைதத் தவிர்க்க வேண்டும். வேலையில் மாற்றங்களைக் கொண்டுவர எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும். உங்கள் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்கலாம். சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள்தேடி வரும். இருப்பினும், அற்ப விஷயங்களுக்காக அதிகம் கோபப்படுவதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் அலுவலகப் பணிகளை கவனமாக செய்ய வேண்டியது அவசியம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஊதா.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சுமாரான நாளாக இருக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய நண்பரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். மூத்த குடும்ப உறுப்பினர்களுடன் விவாதங்கள் ஏற்படும். திருமணமான தம்பதிகளிடையே ஒற்றுமை நிலவும். சிங்கிளாக இருப்பவர்கள் அவர்களுக்கு ஏற்ற ஒருவரை பார்க்கலாம். மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்கு தயாராவதற்கு குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கல் இன்று சிறப்பான நாளை அனுபவிப்பார்கள். அன்பும் ஒத்துழைப்பும் உங்கள் இதயத்தில் மேலோங்கி இருக்கும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கும் நற்பெயரும் உயரும். தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். உங்கள் பெற்றோரின் ஆசியுடன் நிலுவையில் உள்ள காரியம் நிறைவேறும். பணியில் இருப்பவர்கள் சாதகமான பணிச்சூழலை அனுபவிக்கலாம். எந்த ஒரு புதிய முயற்சியையும் தொடங்கும் முன் கவனமாக சிந்தித்து செயல்படவும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ப்ளூ.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு, இந்த நாள் சிறப்பான நாளாக இருக்கும். குடும்ப விஷயங்களில் அதிக கவனம் செலுத்துங்கள். புதிய நபர்களை அதிகமாக நம்புவதை தவிர்க்கவும். திருமண வாழ்க்கை மிகவும் இனிமையாக இருக்கும், மேலும் அன்பு மற்றும் ஒத்துழைப்பு உணர்வுகள் மேலோங்கி இருக்கும். இருப்பினும், உங்கள் கவலையற்ற அணுகுமுறை குடும்ப உறுப்பினர்களிடையே சில விரக்தியை ஏற்படுத்தக்கூடும். வெளிநாட்டில் படிக்கத் திட்டமிடும் மாணவர்கள் அதற்கான வாய்ப்புகளைப் பெறலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று மிகவும் இருக்க வேண்டும், இன்று எதிரிகளின் கை ஓங்கி இருக்கும். வியாபாரத்தில் குறைவான லாபம் ஏற்படுவது சிறிய ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம். உங்கள் பணிகளைப் பற்றிய கவலைகள் தொடரும், நீங்கள் சரியான திட்டமிடலுடன் தொடர வேண்டும். அரசியலில் இருப்பவர்களுக்கு அவர்களின் முயற்சிகளுக்கான பலன்கள் கிடைக்கும். உறவினர்கள் மூலம் சில நல்ல செய்திகளைப் பெறலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஊதா.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் அதிகரிக்கும். கட்டுப்பாடற்ற செலவுகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம், ஆனால் உங்கள் நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். வேலை தொடர்பான விஷயங்களில் கூடுதல் முயற்சி தேவைப்படலாம். குடுமபத்தில் மூத்த உறுப்பினருடன் சில வாக்கு வாதங்கள் ஏற்படலாம். உங்கள் வாழ்க்கைத்துணையின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ப்ரவுன்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சாதகமான நாளாக இருக்கும். உங்கள் பணம் யாரிடமாவது சிக்கியிருந்தால், அதை திரும்ப பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. வியாபாரம் தொடர்பான மன அழுத்தத்தை நீங்கள் அனுபவிக்கலாம். உடல்நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருக்கலாம். உங்கள் உடன்பிறந்தவர்கள் குடும்ப விஷயங்களை உங்களுடன் விவாதிக்கலாம். உங்கள் குழந்தையின் கல்வியில் உள்ள சவால்கள் உங்களுக்கு கவலையை ஏற்படுத்தலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று சாதகமான நாளை அனுபவிக்கலாம். உங்கள் பேச்சில் கண்ணியத்தைக் கடைப்பிடிக்கவும். மூதாதையர் சொத்து தொடர்பான விஷயங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. ஒரு நண்பர் உங்களை ஒரு பரிசு மூலம் ஆச்சரியப்படுத்தலாம். திருமணமாகாத நபர்களின் வாழ்க்கையில் ஒரு புதிய நபர் நுழையலாம். கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வது அவசியம். உங்கள் குழந்தைகள் உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வார்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பரபரப்பான நாளாக இருக்கும். அதிக வேலைப்பளு காரணமாக சோர்வு ஏற்படலாம். பணியிடத்தில் வேலையும், பொறுப்புகளும் அதிகரிக்கலாம். நண்பர்களிடம் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். உங்கள் முயற்சிகளில் புத்திசாலித்தனமாக செயல்படுங்கள். அன்பானவர்களுடன் குடும்ப விழாக்களில் கலந்து கொள்ளலாம். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சுமாரான நாளாக இருக்கும். சொத்து சம்பந்தமான சர்ச்சைகள் உங்களுக்கு சாதகமாக தீர்க்கப்படலாம். பணியில் உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதலால் முக்கியமான பணிகளை முடிக்க உதவும். உங்களின் தொழில் வளர்ச்சியில் இருந்த தடைகள் நீங்கும். திருமண வாழ்க்கை இணக்கமாக இருக்கும், ஆனால் உங்கள் துணையுடன் உங்கள் உறவை வலுப்படுத்த நீங்கள் உண்மையாக முயற்சிக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும் முன் கவனமாக இருங்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் கருப்பு.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று வழக்கத்தை விட சிறப்பான நாளை அனுபவிக்கலாம். பெரிய லாபங்களைத் துரத்தும்போது சிறிய லாபம் ஈட்டும் வாய்ப்புகளில் நீங்கள் குறைவாக கவனம் செலுத்தலாம், இது விரும்பிய முடிவுகளைத் தராது. உடன்பிறந்தவர்களுடன் இருந்த பிரச்சனைகள் தீரும். குடும்ப விஷயங்களில் முழு கவனம் செலுத்துங்கள். காதல் உறவில் இருப்பவர்கள் தங்கள் துணையுடன் தரமான நேரத்தை அனுபவிப்பார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனுகூலமாக நாளாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும், மேலும் நீங்கள் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் வெற்றி பெறுவீர்கள். புதிய வீடு அல்லது நிலம் வாங்குவதற்கு முயற்சிகள் தொடங்கப்படலாம். உங்கள் வேலையை மாற்றுவது உங்களுக்கு சாதகமாக இருக்கும். மற்றவர்களின் வார்த்தைகளால் தூண்டப்படுவதை தவிர்க்கவும். இன்று உங்களின் அதிஷ்ட நிறம் மஞ்சள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











