Latest Updates
-
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை!
Today Rasi Palan 28 December 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பணப் பிரச்சனை அதிகமா இருக்கும்... உஷார்..
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி சனிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 7.45-8.45 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 9.00-10.30 மணி வரை. குளிகை காலை 6.00-7.30 மணி வரை. எமகண்டம் காலை 1.30-3.00 மணி வரை. சூலம் - கிழக்கு திசை. ரேவதி, அசுபதி நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று கவலை தரும் நாளாக இருக்கும். உங்களின் எதிரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். அரசியலில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் முழு கவனம் செலுத்த வேண்டும். வியாபாரம் வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். தேவையற்ற செலவுகள் உங்கள் நிதி நிலையை பலவீனப்படுத்தும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று நல்ல நாளாக இருக்கும். எந்த வேலை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். சில சிறப்பான நபர்களை சந்திப்பீர்கள். தேவையில்லாமல் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். வேலையில் தவறுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று வீட்டிற்கு விருந்தினர் வருகையால் சூழல் இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு பதற்றம் நிறைந்ததாக இருக்கும். குழந்தைகளின் நடவடிக்கைகளில் மாற்றங்களை கவனிப்பீர்கள். இது உங்களுக்கு டென்சனை ஏற்படுத்தும். பணியிடத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று ஆரோககிய பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டிய நாளாக இருக்கும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வந்து சேரும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். காலநிலை மாற்றத்தால் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முதலீடுகளை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று சாதாரண நாளாக இருக்கும். புதிய நபர்களின் நட்புகளால் நல்ல ஆதாயத்தைப் பெறுவீர்கள். நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். உங்களுக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சனை இருந்தால், அது சரியாகும். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் இருந்து எதையும் ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இருவருக்கும் இடையே சண்டை வர வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று சண்டைகள் மற்றும் பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். எந்த வேலையையும் நன்கு யோசித்த பிறகே செய்ய வேண்டும். வியாபாரத்தில் முழு கவனத்தை செலுத்த வேண்டும். உங்கள் வேலைகளை மற்றவர்களுக்கு கொடுக்காதீர்கள். இல்லாவிட்டால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று சிந்தனையுடன் முன்னேற வேண்டிய நாளாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் குறித்த கவலைகள் நீங்கும். கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அந்த பணத்தை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பழைய நண்பரைச் சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று உங்களின் மரியாதை அதிகரிக்கும். பணம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பரம்பரை சொத்து மூலம் நல்ல லாபம் கிடைக்கும். சொத்தில் சில முதலீடு செய்யலாம். சில புதிய எதிரிகள் உருவாகலாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் தொழிலில் நல்ல உயர்வு ஏற்படும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரிகள் பெரிய டெண்டரைப் பெறலாம். பணியிடத்தில் சில பெரிய பொறுப்புகளைப் பெறுவதைப் பற்றி நீங்கள் கொஞ்சம் கவலைப்படுவீர்கள். குடும்ப உறுப்பினர் வேலையில் பிரச்சனைகளை சந்தித்தால், அது சரியாகும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். விவாதத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும். வாகனங்களைப் பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். பயணங்களின் போது உங்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். தந்தைக்கு கண் சம்பந்தமான பிரச்சனை வரலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று பரபரப்பான நாளாக இருக்கும். வேலையில் மன அழுத்தத்தை சந்திப்பீர்கள். வணிக ஒப்பந்தங்களை முடிப்பதில் சிக்கல்களை சந்திக்கலாம். வியாபாரிகளுக்கு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும். குடும்ப விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களிடம் உதவி கேட்டால் நிச்சயம் கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று முன்னேற்றத்தைத் தரும் நாளாக இருக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். வணிகர்கள் இன்று சில மாற்றங்களை செய்யலாம். இது நல்ல லாபத்தைத் தரும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்கள் செயல்திறனால் நல்ல பாராட்டைப் பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications