Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
Today Rasi Palan 23 November 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நன்கு யோசித்த பின்னரே எந்த முடிவையும் எடுக்கணும்!
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி சனிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 7.45-8.45 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 9.00-10.30 மணி வரை. குளிகை காலை 6.00-7.30 மணி வரை. எமகண்டம் காலை 1.30-3.00 மணி வரை. சூலம் - கிழக்கு திசை. பூராடம், உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று உங்களின் முக்கிய வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். ஆனால் எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும், நன்கு யோசித்து எடுக்க வேண்டும். பிறர் விஷயத்தில் தேவையில்லாமல் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். தவறான வழியில் பணம் சம்பாதிக்க நினைத்தால், அதன் மூலம் நஷ்டத்தையே சந்திப்பீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். நீதிமன்றம் தொடர்பான விஷயங்கள் முடிவுக்கு வரும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரிகள் அனுபவசாலிகளின் வழிகாட்டுதல் மூலம் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். கூட்டு சேர்ந்து எந்த வேலையை செய்தாலும் நஷ்டம் ஏற்படும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு பொறுப்புகள் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கவிருப்பதால், வீட்டிற்கு விருந்தினர்களின் வருகை அதிகமாக இருக்கும். ஆன்மீக பயணம் மேற்கொள்ள நினைக்கலாம். இன்று சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று நீங்கள் நீண்ட கால பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். இது நல்ல பலனைத் தருவதாக இருக்கும். பணியிடத்தில் சில பிரச்சனைகளை சந்திப்பீர்கள். உங்களின் செயல்களால் இன்று சில புதிய எதிரிகள் உருவாகலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எந்த ஒரு முக்கியமான விஷயத்தையும் மிகவும் கவனமாக ஒருவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். சில சிறப்பு நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் ஏதேனும் தடைகளை எதிர்கொண்டிருந்தால், அவை நீங்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று அமைதியான நாளாக இருக்கும். எதிர்மறை எண்ணங்களை மனதில் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். எதையும் யோசிக்காமல் யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள். இல்லாவிட்டால் அதை நிறைவேற்றுவதில் உங்களுக்கு சிக்கல்கள் இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் குறையலாம். நிதி நிலையில் கவனம் செலுத்த வேண்டும். புதிய சொத்து, வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று நல்ல நாளாக இக்கும். அரசுப் பணியில் இருப்பவர்கள் பதவி உயர்வுக்குப் பிறகு ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல நேரிடும். வேலை சம்பந்தமாக சிறிய தவறை கூட செய்யக்கூடாது, இல்லையெனில் இழப்பு ஏற்படலாம்..
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று உங்கள் நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும், உங்கள் பணம் வியாபாரத்தில் சிக்கியிருந்தால், நீங்கள் அதைப் பெறுவீர்கள். ஏதேனும் வேலை பணத்தால் நிலுவையில் இருந்தால் அதுவும் முடிக்கப்படும். வேலை மாற்றம் பற்றி நீங்கள் நினைத்திருந்தால், உங்கள் விருப்பமும் நிறைவேறும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். புதிதாக ஏதாவது கற்றுக் கொள்வதில் மும்முரமாக இருப்பீர்கள். உங்கள் வேலையை உங்கள் முதலாளி விரும்புவார். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் பேச்சு மற்றும் நடத்தை மீது நீங்கள் கட்டுப்பாட்டை வைத்திருக்க வேண்டும். எந்த வேலையிலும் அலட்சியம் காட்டாதீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். நீங்கள் யாருக்காவது கடன் கொடுத்திருந்தால், அந்தப் பணத்தை நீங்கள் திரும்பப் பெறலாம். உங்கள் நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். இன்று சில எதிரிகள் உங்களை தொந்தரவு செய்யலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று கலவையான நாளாக இருக்கும். சமூகப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுவீர்கள். இன்று உங்கள் பணி பாராட்டப்படும். குடும்ப விவகாரம் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்தால், இன்று அதை முடிக்கலாம். அனுபவம் வாய்ந்தவர்களின் உதவியோடுதான் எந்த முக்கிய முடிவையும் எடுக்க வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சாதகமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமணமானவர்களின் வாழ்வில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அதுவும் நீங்கும். உங்கள் வணிகத்தில் புதிய நபர் சேரலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
