Latest Updates
-
மூன்றாம் உலகப்போர் வந்தாலும் இந்த நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்களாம்... எந்தெந்த நாடுகள் தெரியுமா? -
100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறதாம்...! -
கலகத்தை உருவாக்குவதற்காகவே பிறந்த 4 ராசிக்காரங்க இவங்கதான்...ரொம்ப ஆபத்தானவங்க இவங்க...உங்க ராசி இதுல இருக்கா? -
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
யமனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.. -
முகத்தில் உள்ள ஹோலி நிறங்களை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1 வாழைப்பழமும் இருந்தா.. இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. 2 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சந்திர-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
ருசியான... பிடிக்கருணை கிழங்கு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்..
Today Rasi Palan 23 January 2025: இன்று இந்த 5 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப் போகுதாம்...!
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஒரு நல்ல நாளாக இருக்கும். பண இருப்பு போதுமானதாக இருக்கும். பணத்தால் கிடைக்கும் பாதுகாப்பு இன்று உங்களுக்கு மிகவும் அவசியமானதாக இருக்கும். பண வரவு ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இன்று நீங்கள் நேர்மறையான மக்களால் சூழப்பட்டிருப்பீர்கள், மேலும் உங்களுக்குள் சில நேர்மறைக ஆற்றலை உணவீர்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ப்ளூ.
ரிஷபம்
இன்று, நீங்கள் வழக்கத்தை விட சில விஷயங்களில் சற்று அதிகமாக ஆர்வமாக இருப்பீர்கள். தேவைப்பட்டால் மட்டும் நீங்கள் எதிர்வினையாற்றுங்கள். எனவே பயனுள்ள விஷயங்களுக்கு உங்கள் நேரத்தை ஒதுக்கி, அதற்கேற்ப செயல்படுங்கள். உங்கள் நெறிமுறைகள் மற்றும் உங்கள் சூழ்நிலைகளில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்ய வேண்டியிருக்கலாம். சூழ்நிலைக்கு என்ன தேவை என்பதை ஆராய்ந்த பின்னர் புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுங்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும். குடும்ப வாழ்வில் அமைதி நிலவும். வாழ்க்கைத் துணையுடனான உறவு முன்பை விட சிறப்பாக இருக்கும். சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். வீட்டிற்கு புதிய விருந்தினரின் வருகையால் சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும். வாகனத்தை கவனமாக ஓட்ட வேண்டும், இல்லையெனில் விபத்து ஏற்படலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். உங்கள் வேலையைத் திட்டமிட்டு செய்ய வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த சண்டைகள் முடிவுக்கு வரும். தொண்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் அலட்சியமாக இருக்கக் கூடாது, இல்லையெனில் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
சிம்மம்
இன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். உங்களுக்குள் மறைந்திருக்கும் திறமை இன்று வெளிவரும். வேலையில் சந்தித்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நீங்கள் யாரிடமாவது கடன் வாங்கியிருந்தால், அவர்கள் உங்களிடம் திரும்பக் கேட்கலாம். தாயின் உடல்நிலையில் முழு கவனம் செலுத்த வேண்டியிருக்கும். உங்கள் பொறுப்புகள் அதிகரிப்பதால் சற்று கவலை அடைவீர்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஊதா.
கன்னி
இன்று வாழ்க்கையில் மதிப்புமிக்க வழிகாட்டுதலையும், புதிய கண்ணோட்டங்களையும் வழங்கக்கூடிய சிறப்பு வாய்ந்த ஒருவரை நீங்கள் சந்திக்க நேரிடும். இருப்பினும், உடல்நலம் தொடர்பான செலவுகள் காரணமாக ஏற்படக்கூடிய நிதி நெருக்கடி மனஅழுத்தத்தை அதிகரிக்கும். பெரிய வணிக முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது, ஏனெனில் அவை குறிப்பிடத்தக்க இழப்புகளுக்கு வழிவகுக்கும். பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சுறுகூறுப்பான நாளாக இருக்கும். உங்கள் ஆற்றலை சரியான செயல்களில் பயன்படுத்தினால், அது உங்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கும். காதலிப்பவர்கள் தங்கள் துணையுடன் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்களுக்குள் ஏதேனும் தவறான புரிதல் இருந்தால், அதைப்பற்றி ஆலோசிப்பது நல்லது. ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மெரூன்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். நீங்கள் பணிகளில் ஆழ்ந்த கவனம் செலுத்துவீர்கள் மற்றும் அதற்கான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் எண்ணங்கள் தெளிவாகவும் லாஜிக்காகவும் இருக்கும், இது எந்த சவாலையும் நீங்கள் எளிதாக எதிர்கொள்ள உதவும். இன்று தனிப்பட்ட உறவுகளில் நீங்கள் புரிந்துணர்வுடனும் அனுதாபத்துடனும் செயல்பட வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவது மனதிற்கு புத்துணர்ச்சி தரும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கலவையான நாளாக இருக்கும். பயணத் திட்டங்கள் தாமதமாகலாம். மனதில் தெளிவு அதிகரிக்கும் மற்றும் எதிர்காலத்தில் நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியும் என்பதால் இன்று நீங்கள் மிகவும் நிதானமாக சிந்திக்க வேண்டும். ஆரோக்கியம் சீராக இருக்கும். மனைவியுடன் சில சிக்கல்கள் வர வாய்ப்புள்ளதால் அமைதி காக்கவும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று மிகவும் சுய கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். தேவையற்ற கோபத்தைத் தவிர்க்க வேண்டும். பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். வியாபாரிகளுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். நிறைய லாபத்தைப் பெறும் வாய்ப்புள்ளது. வேலை தொடர்பாக சில பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ப்ரவுன்.
கும்பம்
இன்று எந்த வதந்திகளையும் நம்பாதீர்கள், ஏனெனில் அது உங்களுக்கு மனஅழுத்தத்திற்கு வழிவகுக்கும். எதிர்வினையாற்றுவதற்கு முன் உண்மைகளைச் சரிபார்ப்பது அவசியம், மேலும் வதந்திகளின் அடிப்படையில் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். உங்கள் உறவை சேதப்படுத்தாமல் இருக்க உங்கள் துணையிடம் கருணை மற்றும் புரிதலுடன் நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் கருப்பு.
மீனம்
இன்று சாதனைகள் மற்றும் முன்னேற்றங்கள் நிறைந்த ஒரு வெற்றிகரமான நாளுக்குத் தயாராகுங்கள். வேலை தேடுபவர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும், வியாபாரத்தில் வருமானம் நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும். பெற்றோரின் ஆரோக்கியம் மேம்படுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வாகனம் அல்லது வீடு வாங்க முயற்சிகள் மேற்கொள்ளலாம், ஆனால் அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம். இன்று அனைத்து கிரகங்களும் உங்களுக்கு சாதகமாக உள்ளன. இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் நீலம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











