Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
Today Rasi Palan 20 January 2025: இன்று இந்த ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்...
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 9.15-10.15 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 7.30-9.00 மணி வரை. குளிகை காலை 1.30-3.00 மணி வரை. எமகண்டம் காலை 10.30-12.00 மணி வரை. சூலம் - கிழக்கு திசை. சதயம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று சவால்கள் நிறைந்ததாக இருக்கும். கடின உழைப்புக்கு பலன் கிடைக்காவிட்டால் அதிகமாக வருத்தப்படுவீர்கள். செலவுகளைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையுடன் சண்டை போடலாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். கடன் வாங்கியிருந்தால், அதை இன்று திருப்பி செலுத்தும் வாய்ப்புக்களைப் பெறலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று பணியிடத்தில் உங்களின் செயல்திறன் சிறப்பாக இருக்கும். சில புதிய வேலைகளைச் செய்தால் நல்ல பலனைப் பெறலாம். நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரிகள் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். இன்று யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுப்பதற்கு முன் யோசிக்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று நீங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணியிடத்தில் சிலர் பதவி உயர்வைப் பெறலாம். சிலர் உங்களுக்கு எதிராக சதி செய்யலாம். புதிய வீடு வாங்கும் வாய்ப்புக்கள் தேடி வரலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். எந்த ஒரு புதிய வேலையையும் சிந்தனையுடன் செய்ய வேண்டும். வேலையில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். எதிரிகள் சிலர் உங்களை தொந்தரவு செய்ய முயற்சிப்பார்கள். மூன்றாம் நபரின் பேச்சை நம்பாதீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று சில புதிய எதிரிகள் உருவாகலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். செலவுகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். அரசியலில் இருப்பவர்கள் யாரையும் நம்புவதை தவிர்க்க வேண்டும். உங்கள் செயல்களில் நீங்கள் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று கடினமாக உழைக்க வேண்டிய நாளாக இருக்கும். உங்கள் வேலையில் முழு கவனம் செலுத்துவீர்கள். வேலையை மாற்றும் வாய்ப்பு கிடைத்தால், அதை பயன்படுத்திக் கொள்வது நல்லது. இன்று முன்னேற்றத்தில் இருந்த தடைகள் நீங்கும். பேசும் முன் யோசிக்க வேண்டும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். சட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று நிலுவையில் உள்ள வேலைகளை முடிப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உங்கள் எதிர்காலத்திற்காக பெரிய முதலீட்டை செய்யலாம். கடனாக கேட்ட பணம் எளிதில் கிடைக்கும். உங்கள் பிள்ளைகள் உங்களிடம் ஏதாவது கேட்கலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று நீங்கள் சிந்தனையுடன் முதலீடு செய்ய வேண்டும். புதிய சொத்து வாங்கலாம். கூட்டு தொழில் செய்வதைத் தவிர்க்க வேண்டும். தொலைந்து போன பிடித்த விஷயங்களை கண்டுபிடிப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன. நிலுவையில் உள்ள எந்தவொரு வேலையும் முடிவடையும். குழந்தைகளிடம் இருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு பொறுமையையும், தைரியத்தையும் கடைப்பிடிக்கும் நாளாக இருக்கும். சில வேலைகளை முடிப்பதில் சிக்கல்களை சந்திக்கலாம். குடும்பப் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். நீங்கள் ஒருவருக்கு வாக்குறுதி அளித்திருந்தால், அதை சரியான நேரத்தில் நிறைவேற்ற வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். ஒன்றன் பின் ஒன்றாக நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். பணியிடத்தில் உய அதிகாரிகள் சொல்வதை கேட்டு கவனமாக நடக்க வேண்டும். உங்களின் செல்வாக்கும் மதிப்பும் உயரும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் நண்பரை சந்திப்பீர்கள். குடும்ப பிரச்சனைகள் தீரும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய நண்பர்களை உருவாக்குவீர்கள். கடன் வாங்கியிருந்தால், அதை திருப்பி செலுத்தலாம். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கலாம். நீண்ட நாள் ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். வீட்டு வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications