Latest Updates
-
நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது!
Today Rasi Palan 19 மே 2025: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்கபோகுதாம்...!
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி திங்கள் கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் நண்பர்கள் உங்களுக்கு துரோகம் செய்ய வாய்ப்புள்ளது, நிதி நெருக்கடி மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உங்களை சோர்வடையச் செய்யலாம். உங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருடன் கருத்து வேறுபாடுகள் காரணமாக குடும்பத்தில் மோதல்கள் ஏற்படலாம். இதனால் உங்கள் நிம்மதி கடுமையாக பாதிக்கப்படலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று புதிய வேலைகளைத் தொடங்க சிறந்த நாளாக இருக்கும். உங்களின் நீண்ட கால திட்டங்கள் இன்று நிறைவேற வாய்ப்புள்ளது. கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கலாம். வீட்டிற்கு விருந்தினர் வருகைத் தருவதால் சூழல் இனிமையாக இருக்கும். குடும்ப விஷயங்களில் மூன்றாம் நபரின் ஆலோசனையைப் பெற வேண்டாம். இல்லாவிட்டால், உங்கள் குடும்பத்தில் வாக்குவாதங்கள் அதிகரிக்கலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பிங்க்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று பணியிடத்தில் சவால்களைச் சந்திக்க நேரிடும், ஒரு நண்பரின் துரோகம் அல்லது குறிப்பிடத்தக்க வணிக இழப்பு அதற்கு காரணமாக இருக்கலாம். கூடுதலாக, ஆரோக்கிய பிரச்சினைகள் உங்கள் மனதில் பெரும் சுமையாக இருக்கலாம். குடும்ப சூழலும் பதட்டமாக இருக்கலாம், சில விஷயங்களில் மாறுபட்ட கருத்துக்களால் கருத்து வேறுபாடுகள் எழலாம். இந்த சிக்கல்களைத் தடுக்கவும், உங்கள் நலன்களைப் பாதுகாக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று நெருக்கமான ஒருவரால் நீங்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகலாம். நீங்கள் சமீபத்தில் ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டிருந்தால், அதனால் நஷ்டங்களை சந்திக்க வாய்ப்புள்ளது. பணிச்சூழலில் அமைதியை கடைபிடிப்பது நல்லது. வீட்டில், பதட்டங்கள் அதிகரிக்கக்கூடும், எனவே குடும்ப சச்சரவுகளைத் தவிர்த்து, அமைதியான சூழ்நிலையைப் பேணுவது அவசியம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மெரூன்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு, இன்று சாதாரணமான நாளாக இருக்கும். காதல் உறவுகளில் நல்லிணக்கம் நிலவும், குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியால் நிறைந்திருக்கும். உங்களைச் சுற்றியுள்ள சூழல் இனிமையாக இருக்கும். உங்கள் முதலாளி உங்களுக்கு ஒரு பொறுப்பு நிறைந்த பணியை வழங்கக்கூடும், அதற்காக நீங்கள் உங்கள் சக ஊழியர்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும். புதிய முயற்சியைத் தொடங்க இது சரியான நாள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று ஒரு சவாலான நாளை எதிர்கொள்ள நேரிடும். கடுமையான வார்த்தைகள் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். ஆபத்தான முயற்சிகளைத் தவிர்த்து, உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் யாரிடமாவது வாக்குவாதத்தில் ஈடுபட்டால், உடனடியாக மன்னிப்பு கேளுங்கள். மற்றவர்களின் மனதை புண்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் கருப்பு.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் தொழிலில் மாற்றங்களைச் செய்வதை பற்றி நீங்கள் பரிசீலிக்கலாம், மேலும் பணிபுரியும் நிபுணர்கள் அவர்கள் விரும்பும் வேலைகளைப் பெறலாம். அனுபவம் வாய்ந்த நபர்கள் மூலம் நீங்கள் பெரிதும் பயனடைவீர்கள். முதலீட்டுக்கான புதிய வாய்ப்புகள் உருவாகும். இருப்பினும், மற்றவர்களுக்கு தேவையற்ற ஆலோசனைகளை வழங்குவதைத் தவிர்க்கவும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் நீலம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். சில பிரச்சனைகள் நீண்ட காலமாக குடும்பத்தைத் தொந்தரவு செய்து கொண்டிருந்தால், இன்று அவை முடிவுக்கு வரும். உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கலாம். மாணவர்கள் சில போட்டிகளில் பங்கேற்பதோடு, வெற்றியும் பெறுவார்கள். காதலித்து வருபவர்கள் சில மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிக்கலாம். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் அவர்களின் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறுவதால் மகிழ்ச்சியான நாளை அனுபவிக்கலாம். மங்களகரமான நிகழ்வுகள் மற்றும் குடும்ப நல்லிணக்கம் ஏற்படலாம், இது மகிழ்ச்சியையும், நேர்மறை மாற்றங்களையும் தருகிறது. வியாபாரம் நிலையானதாகவும் லாபகரமாகவும் இருக்கும். ஒட்டுமொத்தமாக, இது கொண்டாட்டம், வளர்ச்சி மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் நாளாக இருக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஊதா.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று ஆறுதலான நாளாக இருக்கும். உங்களின் சில முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி நண்பர்களுடன் விவாதிக்கலாம். உங்களின் நீண்டகால நிதிப் பிரச்சினை தீர்க்கப்படலாம். வியாபாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு உங்கள் தந்தையின் ஆலோசனையைப் பெறுங்கள். சகஊழியர்களின் ஆதரவால் அலுவலகத்தில் நிம்மதியான சூழல் நிலவும். இன்று உங்களின் அதிர்ஷ்ட ஆரஞ்சு.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பொறுப்புகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். வேலையில் இருப்பவர்கள் அதிக வேலைப்பளுவை அனுபவிப்பார்கள். உங்கள் தொழிலில் சில புதிய அணுகுமுறையை அறிமுகப்படுத்துவீர்கள். உங்கள் பழைய தவறு வெளிச்சத்திற்கு வரலாம். நிதி தொடர்பாக தேவையற்ற மன அழுத்தத்தை நீங்கள் உணரலாம். இன்று கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்கவும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ப்ரவுன்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று நிதி விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நாளாக இருக்கும். மற்றவர்களிடம் கடன் வாங்குவதை தவிர்க்கவும். வியாபார முயற்சிகளில் உங்கள் மனைவியின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், சில பணிகளில் சில தடைகளை சந்திக்க நேரிடும். மாணவர்கள் அவர்களின் மனச்சுமைகளிலிருந்து விடுபடுவார்கள். உங்கள் வருமானத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவது அவசியம். இன்று உங்களின் வெள்ளை.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications