Latest Updates
-
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்!
Today Rasi Palan 18 November 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசரத்தைத் தவிர்த்து எதையும் பொறுமையா செய்யணும்..
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி சனிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 9.15-10.15 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 7.30-9.00 மணி வரை. குளிகை காலை 1.30-3.00 மணி வரை. எமகண்டம் காலை 10.30-12.00 மணி வரை. சூலம் - கிழக்கு திசை. சுவாதி, விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். எவ்வளவு பிஸியாக இருந்தாலும், குடும்ப பிரச்சனைகளில் கொஞ்சம் கவனம் செலுத்துவீர்கள். ஆடம்பரத்திற்காக நிறைய செலவுகளை செய்வீர்கள். தொழில் சம்பந்தமாக கவலை இருந்தால் அது நீங்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் கூற்றை அலட்சியப்படுத்தாதீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று வேலை தொடர்பாக சில முக்கியமான நபர்களை சந்திப்பீர்கள். வீட்டு வசதிகளுக்காக நிறைய செலவு செய்வீர்கள். அவசரத்தால் உங்களின் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். எனவே இன்று பொறுமையையும் தைரியத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். மற்றவர்களின் பேச்சைக் கேட்டு முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை உடல் சோர்வால் பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சாதாரண நாளாக இருக்கும். வேலையில் யாருடனும் தேவையற்ற பிரச்சனைகளில் ஈடுபட வேண்டாம். குடும்ப விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கைத் துணை மற்றும் குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் பெரிய திட்டத்தில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று பணியிடத்தில் உங்களின் செயல்திறன் சிறப்பாக இருக்கும். இன்று உங்களின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்கலாம். பணம் தொடர்பான விஷயங்களில் நீங்கள் ஏமாற்றப்படலாம். நண்பர்களால் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கலாம். இன்று தேவையற்ற பதற்றத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று பாதகமான சூழ்நிலைகளிலும் பொறுமையாக இருக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்களை மனதில் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் உங்கள் ஆலோசனைகள் வரவேற்கப்படும். சரும பிரச்சனைகள் அல்லது தொண்டை தொடர்பான ஏதேனும் பிரச்சனை இருந்தால், அது மோசமடையலாம். உங்கள் தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். உங்கள் பிள்ளைகளின் முன்னேற்றத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். உடன் பிறந்தவர்களுடனான உறவு நன்றாக இருக்கும். தெரியாதவர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. பணிபுரிபவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். இன்று உங்களின் பழைய நண்பரை சந்திப்பீர்கள். சில புதிய வேலைகளில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சுமாராக இருக்கும். அரசு வேலையில் இருப்பவர்கள் தங்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும். உங்களின் செலவுகள் அதிகரிக்கும். குடும்ப பிரச்சனைகளை தீர்க்க முயற்சிகளை எடுப்பீர்கள். உடல் நிலையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் பிள்ளைகளிடம் இருந்து சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு முக்கியமான நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக நடந்து கொண்டிருக்கும் வேலை இன்று முடிவடையும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மார்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு நன்றாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, பொரித்த உணவுகளை அதிகம் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். நீண்ட காலமாக சிக்கல்களை எதிர்கொண்டிருந்தால், அதிலிருந்து விடுபடுவீர்கள். யாருடைய பேச்சிற்கும் மயங்கிவிடாதீர்கள். சொத்துக்களில் முதலீடு செய்வதற்கு இன்று நல்ல நாளாக இருக்கும். ஆனால் இன்று சில புதிய எதிரிகள் உருவாகலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று நிதி ரீதியாக நல்ல நாளாக இருக்கும். யாருக்காவது கடன் கொடுத்திருந்தால், அந்த பணத்தை நீங்கள் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. வேலையில் அலட்சியமாக இருக்காதீர்கள். வீட்டுச் சூழல் இனிமையாக இருக்கும். முன்னேற்றத்தில் இருந்த தடைகள் நீங்கும். பணியிடத்தில் உங்களுக்கு மரியாதை கூடும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு புதிய வேலைகளைத் தொடங்க ஏற்ற நாளாக இருக்கும். உங்களின் பெரிய இலக்குகள் நிறைவேறும். உடன் வேலை செய்வோருடன் மனம் விட்டு பேசும் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். ஒரே விஷயத்தில் கவனத்தை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் அது பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று நிலுவையில் உள்ள வேலைகளை முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். எந்த வேலையிலும் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications