Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
Today Rasi Palan 16 December 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு மறக்க முடியாத நாளாக இருக்கும்...
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 9.15-10.15 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 7.30-9.00 மணி வரை. குளிகை காலை 1.30-3.00 மணி வரை. எமகண்டம் காலை 10.30-12.00 மணி வரை. சூலம் - கிழக்கு திசை. விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று வேலை தேடுபவர்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். வியாபாரிகள் அவசரத்தால் தவறு செய்ய வாய்ப்புள்ளது. யாரையும் நம்பாதீர்கள். உங்கள் பேச்சு மற்றும் நடத்தையில் கட்டுப்பாட்டை வைத்திருக்க வேண்டும். இதனால் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சாதாரண நாளாக இருக்கும். உங்கள் தாயாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது. உடன் பிறந்தவர்களிடம் பணம் தொடர்பான உதவி கேட்டால், அது எளிதில் கிடைக்கும். தேவையில்லாமல் பேசுவதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் அது சண்டைக்கு வழிவகுக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று மூன்றாம் நபரை நம்பினால், அது தீங்கை விளைவிக்கும். உங்கள் முன்னேற்றத்தில் இருந்த தடைகள் நீங்கும். தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், இன்று சிறந்த நாளாக இருக்கும். வீட்டில் சில மாற்றங்களை செய்வீர்கள். இது உங்களுக்கு நன்மை விளைவிக்கும். குடும்ப உறுப்பினர் உங்கள் மீது கோபமாக இருப்பார்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று பரபரப்பான நாளாக இருக்கும். வீட்டிற்கு புதிய விருந்தினர் வரலாம். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். புதிய நண்பர்களை உருவாக்குவீர்கள். வாக்குறுதி அளித்திருந்தால், அதை நிறைவேற்ற முயற்சிப்பீர்கள். இன்று எந்த விஷயத்திலும் தேவையில்லாமல் பேசக்கூடாது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று நல்ல நாளாக இருக்கும். புதிய வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கலாம். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. வணிக திட்டங்கள் நல்ல பலனைத் தரும். குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். பெற்றோரின் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும்,
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று அதிகரித்து வரும் செலவுகளில் கவனம் செலுத்த வேண்டிய நாளாக இருக்கும். உங்கள் வேலையை திட்டமிட்டு செய்ய வேண்டும். செலவுகளை கட்டுப்படுத்தாவிட்டால், பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையுடன் வெளியே செல்லலாம். வாகனங்களைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று வருமான அதிகரிப்பால் மகிழ்ச்சி அடைவீர்கள். பரம்பரை சொத்துக்களைப் பெற வாய்ப்புள்ளது. உங்கள் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வேலை தாமதமானால் வருத்தப்படுவீர்கள். மாணவர்கள் படிப்பில் சிக்கல்களை எதிர்கொண்டால், நண்பர்களின் உதவியால் சமாளிப்பார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்கள் வேலையில் இடையூறுகளை சந்திக்கலாம். உடன் வேலை செய்வோர் வழங்கும் ஆலோசனைகளை ஏற்றுக் கொண்டால் நற்பலனைப் பெறலாம். பங்குச் சந்தையுடன் தொடர்புடையவர்கள் முதலீடு செய்வது நல்லது. தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று தொண்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். ஒன்றன் பின் ஒன்றாக நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். யாரிடமும் பொறாமை, வெறுப்பு உணர்வுகள் இருக்கக்கூடாது. எந்த வேலையையும் செய்ய, நீங்கள் உங்கள் தந்தையிடம் ஆலோசனை பெறலாம். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு இன்று உங்களுக்கு கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று முன்னேறும் நாளாக இருக்கும். புதிய நண்பர்களை உருவாக்கலாம். எதிரிகள் வேலையில் தொந்தரவு செய்ய முயற்சிக்கலாம். உங்களைச் சுற்றி வசிப்பவர்களிடம் இருந்து விலகி இருந்தால், அது உங்களுக்கு நல்லது. புதிய வேலைகளைத் தொடங்குவது நல்லது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து சில நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். வணிகர்களுக்கு நல்ல ஒப்பந்தம் கிடைக்கும். மனதில் உள்ளதை தந்தையிடம் தெரிவிக்கும் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நீங்கள் எடுக்கும் எந்த முடிவும் உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று உங்கள் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும். எந்த ஒரு வேலையிலும் அவசரம் காட்டினால் அதில் தவறு நடக்க வாய்ப்பு உள்ளது. புதிய எதிரிகள் உருவாகலாம். குடும்ப பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். இல்லாவிட்டால் டென்சன் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் நற்செய்திகளைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











