Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
Today Rasi Palan 15 November 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் பெரிய பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது...
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 9.15-10.15 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 10.30-12.00 மணி வரை. குளிகை காலை 7.30-9.00 மணி வரை. எமகண்டம் காலை 3.00-4.30 மணி வரை. சூலம் - மேற்கு திசை. உத்திரம், அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று நீண்டகால பிரச்சனைகளில் இருந்து விடுபடும் நாளாக இருக்கும். புதிய வேலை கிடைக்கலாம். உங்கள் படைப்பாற்றலால் மற்றவர்களை உங்கள் பக்கம் ஈர்த்து வெற்றி பெறுவீர்கள். பண பரிவர்த்தனைகளை செய்யும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏமாந்து போக வாய்ப்புள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். முன்னேற்ற பாதைகள் திறக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு நல்ல நாளாக இருக்கும். சிறிய விஷயங்களுக்கு கோபப்படுவதைத் தவிர்க்க வேண்டும். அலுவலகத்தில் உங்கள் வேலையில் அலட்சியமாக இருக்காதீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதுவும் நண்பர்களால் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும். தொழில் ரீதியாக சில முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். காலநிலை மாற்றத்தால் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திப்பீர்கள். பணியிடத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இருப்பினும் சில வேலைகளை முடிப்பதில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சுமாராகவே இருக்கும். பணியிடத்தில் மிகவும் ஆற்றலுடன் இருப்பீர்கன். உங்களின் எந்த தவறான முடிவும் உங்களை தொந்தரவு செய்யலாம். வேலை சம்பந்தமாக சில பிரச்சனைகளை எதிர்கொண்டிருந்தால், அவை நீங்கும். ஆரோக்கிய பிரச்சனை தொந்தரவு செய்யலாம். இது உங்களின் செலவை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சவாலான நாளாக இருக்கும். நீங்கள் ஏதேனும் மாற்றம் செய்திருந்தால், அது உங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தலாம். யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். எந்த முக்கியமான வேலை விஷயத்திலும் உங்கள் உடன் பிறந்தவர்களின் ஆலோசனை பெறுவது நல்லது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று பிஸியான நாளாக இருக்கும். வேலையில் மும்முரமாக ஓடிக்கொண்டே இருப்பீர்கள். வியாபாரம் முன்னெப்போதையும் விட அதிகமாக வளரும். உங்கள் முக்கியமான ஆவணங்களை கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவை திருட்டுப்போக வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கையில் சில ஏற்ற தாழ்வுகளை சந்திக்க வேண்டி வரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வேலை தொடர்பான டென்சன் நீங்கும். ஆனால் வாழ்க்கைத் துணையுடன் சில பிரச்சனைகளால் வாக்குவாதத்தில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது. முன்னேற்றத்தில் இருந்த தடைகள் நீங்கும். பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது. அப்படி பயணம் மேற்கொள்ளும் போது உடைமைகளை பத்திரமாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று முக்கியமான பணிகளில் கவனம் செலுத்தும் நாளாக இருக்கும். தனிப்பட்ட செலவுகளைக் குறைத்துக் கொண்டால், அது உங்களுக்கு நல்லது. நீண்ட நாட்களுக்கு பிறகு பழைய நண்பரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். உங்கள் முன்னேற்றத்தில் இருந்த தடைகள் நீங்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளும் நாளாக இருக்கும். நீங்கள் வேலை சம்பந்தமாக ஏதேனும் பிரச்சனையை எதிர்கொண்டிருந்தால், அது நீங்கும். மற்றவர்களைப் பற்றி தேவையில்லாமல் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். வேலை தொடர்பான சில சவால்களை நீங்கள் எதிர்கொண்டிருந்தால், அதுவும் நீங்கிவிடும். உங்கள் வேலையைத் திட்டமிட்டு செய்ய வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும். வீட்டு பெரியோரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் இன்று தேவையில்லாமல் வாக்குவாதம் செய்வதை தவிர்க்க வேண்டும். உங்கள் வீட்டை மாற்றுவது நல்லது. உங்களின் சில பெரிய இலக்குகள் நிறைவேறலாம். உங்கள் பிள்ளையின் முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். நண்பர்களுடன் ஏதேனும் தகராறு இருந்தால் அது தீர்க்கப்படும். உடல்நிலையில் சில ஏற்ற தாழ்வுகள் ஏற்படும், எனவே சற்று கவனம் தேவை. நீங்கள் சொத்தில் ஏதேனும் முதலீடு செய்தால், அதில் கொஞ்சம் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. வியாபாரத்தில் தடைபட்ட திட்டங்களால் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது, சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











