Today Rasi Palan 13 November 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பேச்சால் பல வெற்றிகளைப் பெற போறாங்க..

Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.

அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 13 November 2024 Daily Horoscope in Tamil Today Horoscope in Tamil

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 10.45-11.45 மணி வரை. ராகு காலம் காலை 1.30-3.00 மணி வரை. குளிகை காலை 9.00-10.30 மணி வரை. எமகண்டம் காலை 6.00-7.30 மணி வரை. சூலம் - தெற்கு திசை. மகம், பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இன்று சொத்து தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நடந்து வந்த நீதிமன்ற விஷயங்கள் விரைவில் முடிவுக்கு வர வேண்டுமானால், அனுபவசாலிகளின் ஆலோசனையைப் பெற வேண்டும். வியாபாரிகள் இன்று மேற்கொள்ளும் சில புதிய விஷயங்கள் நல்ல பலனைத் தரும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இன்று மிகவும் ஆற்றலுடன் இருப்பீர்கள். சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பெற்றோரின் ஆசியால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். உங்கள் குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். ஆனால் இன்று சில புதிய எதிரிகள் உருவாகலாம்.

மிதுனம்

மிதுன ராக்காரர்களே! இன்று உங்களுக்கு சாதகமாக இருக்கும். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். வேலை தொடர்பான கவலை நீங்கும். வாழ்க்கைத் துணையிடம் இருந்து போதுமான ஆதரவு கிடைக்கும். பேசும் போது கவனமாக பேச வேண்டும். உங்களின் பழைய நண்பரை இன்று நீங்கள் சந்திக்கலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்களே! இன்று கலவையான பலன்கள் கிடைக்கும். உங்களின் முக்கிய வேலைகளில் முதலில் கவனத்தை செலுத்த வேண்டும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நன்றாக இருக்கும். காதலிப்பவர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். ஏனெனில் துணையுடனான பிணைப்பு நன்றாக இருக்கும். எந்த ஒரு வேலையிலும் அவசரம் காட்டினால், அதில் தவறு செய்ய வாய்ப்பு உள்ளது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு பிச்சனைகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் மீது பொறுப்புகள் அதிகமாக இருப்பதால், அதிகம் சிரமப்படுவீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். மோசமான சூழ்நிலையில் பொறுமையாக இருக்க வேண்டும். எந்த வேலையையும் தள்ளிப் போடுவதைத் தவிர்க்க வேண்டும். புதிய வீடு, கடை போன்றவற்றை வாங்குவது நல்லது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சாதகமாக இருக்கும். வேலை விஷயமாக சில நல்ல செய்திகளைப் பெறலாம். பணிபுரிபவர்கள் சில திட்டங்களால் நல்ல வருமானத்தைப் பெறலாம். ஆரோக்கிய விஷயத்தில் கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். தெரியாதவர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. உங்கள் பிள்ளையின் முன்னேற்றத்தில் இருந்த தடைகள் நீங்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு இனிமையான நாளாக இருக்கும். பேசியே பல பிரச்சனைகளை சமாளிப்பீர்கள். அதே சமயம் அதிகம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அதுவே தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். எனவே மார்கெட்டிங் துறையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். உங்களின் திட்டங்களில் ஏதேனும் ஒன்று வெற்றி அடையலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு கலவையான நாளாக இருக்கும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளலாம். தொழிலதிபர்கள் புதிய நபர்களை சந்திக்கும் வாய்ப்பைப் பெறலாம். ஆனால் பணியிடத்தில் கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். வியாபாரிகள் இன்று சுறுசுறுப்பாக செயல்படுவார்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். உங்களைச் சுற்றியுள்ள சூழல் இனிமையாக இருக்கும். வியாபாரத்தில் முன்பை விட நிலைமை சிறப்பாக இருக்கும். உங்கள் வருமானம் அதிகரிப்பதால் உங்கள் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாம்பத்ய வாழ்வில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அது தீரும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்கும். பொறுமை மற்றும் துணிச்சலால் வேலைகளை செய்து முடிப்பீர்கள். சகோதர சகோதரிகளுடன் நன்றாகப் பழகுவீர்கள், எந்த வேலையிலும் அலட்சியமாக இருக்க வேண்டாம். உங்கள் கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும். உங்கள் குடும்ப உறவுகளை நீங்கள் நிர்வகிக்க வேண்டும். வேலையைத் திட்டமிட்டால், அது உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இன்று நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த அரசு வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சொத்து வாங்கும் எண்ணம் இருந்தால், இன்று வாங்குவது நல்லது. உங்களின் பணித்திறன் சிறப்பாக இருக்கும் மற்றும் ஏதேனும் சவாலை எதிர்கொள்ள நேரிட்டால், அதை எளிதாக சமாளிக்க முடியும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! இன்று கடினமாக உழைக்க வேண்டிய நாளாக இருக்கும். தினசரி வழக்கத்தை சிறப்பாக பராமரிக்க வேண்டும். பணம் தொடர்பான ஏதேனும் பிரச்சனை நீண்ட நாட்களாக உங்களைத் தொந்தரவு செய்து கொண்டிருந்தால், இன்று அதற்கு ஒரு முடிவு கிடைக்கலாம். எதிர்மறை எண்ணங்களை மனதில் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Desktop Bottom Promotion