Today Rasi Palan 13 December 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும்..

Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.

அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 13 December 2024 Daily Horoscope in Tamil Today Horoscope in Tamil

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 9.15-10.15 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 10.30-12.00 மணி வரை. குளிகை காலை 7.30-9.00 மணி வரை. எமகண்டம் காலை 3.00-4.30 மணி வரை. சூலம் - மேற்கு திசை. அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இன்று நீங்கள் டென்சனாக இருப்பீர்கள். வேலையில் மிகவும் அழுத்தமாக உணர்வீர்கள். வியாபாரிகளுக்கு சிறப்பாக இருக்கும். உங்கள் குழந்தையால் தேவையில்லாமல் மன அழுத்தத்தில் இருப்பீர்கள். எந்த வேலைக்கும் மற்றவர்களை சார்ந்து இருக்காதீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இன்று பலவீனமான நாளாக இருக்கும். நீண்ட கால வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பழைய கடனை திருப்பி செலுத்துவீர்கள். எதையும் சிந்தித்து செய்ய வேண்டும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். பெற்றோரின் ஆசியால் முக்கிய வேலைகள் வெற்றிகரமாக முடியும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இன்று பரபரப்பான நாளாக இருக்கும். நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அவசரமாக எந்த முடிவையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் சிக்கல்களை சந்திக்க நேரிடும். புதிய வேலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரிகள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். பணியிடத்தில் மற்றவரின் வேண்டுகோளின் பேரில் எந்தவொரு சர்ச்சையிலும் ஈடுபட வேண்டாம். எதையும் நன்கு யோசித்த பின்னரே வேலையில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் முழு கவனம் செலுத்துவார்கள். இதன் மூலம் பதவி உயர்வைப் பெறலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். புதிய சொத்து வாங்கும் உங்கள் கனவு நனவாகும். முக்கியமான தகவல்களை மூன்றாம் நபருடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். இல்லாவிட்டால், அது சிக்கல்களை ஏற்படுத்தும். குழந்தையின் கல்வியில் ஏதேனும் சிக்கல் இருந்தால், அது இன்று தீர்க்கப்படும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இன்று சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் முன்னேற்றத்தில் தடைகளை சந்திப்பீர்கள். இது உங்களின் டென்சனை அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் பற்றி கவலைப்படுவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்தால், அதுவும் முடிவடையும் வாய்ப்பு உள்ளது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இன்று முக்கியமான வேலைகளில் முழு கவனம் செலுத்த வேண்டிய நாளாக இருக்கும். உங்கள் வேலையை விட்டுவிட்டு மற்றவர்களில் கவனம் செலுத்தினால், உங்கள் வேலை தாமதமாகிவிடும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வீட்டிற்கு விருந்தினர் வரலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இன்று உங்களின் செல்வம் அதிகரிக்கலாம். இருப்பினும் ஒருவரின் ஆலோசனையைப் பின்பற்றி தவறான இடத்தில் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். வங்கியில் பணிபுரிபவர்களுக்கு நல்ல திட்டத்தில் முதலீடு செய்ய வாய்ப்பு கிடைக்கும். தந்தைக்கு சில கண் சம்பந்தமான பிரச்சனை இருக்கலாம். அதை அலட்சியப்படுத்தினால், சிக்கலாகிவிடும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இன்று சாதகமான நாளாக இருக்கும். எந்த வேலையிலும் அவசரப்பட வேண்டாம். நீங்கள் யாருக்காவது கடன் கொடுத்தால், அதைத் திரும்பப் பெறுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன. வீட்டிற்கு ஒரு புதிய வாகனத்தை நீங்கள் கொண்டு வரலாம். உங்கள் செலவுகள் சம்பந்தமாக சில சிக்கல்கள் ஏற்படும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே! இன்று முன்னேற்றத்தைத் தரும் நாளாக இருக்கும். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். அரசியலில் இருப்பவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் படிப்பில் ஏதேனும் சிக்கலை சந்திக்கலாம். எந்த வேலைக்கும் மற்றவர்களை சார்ந்து இருக்கக்கூடாது. சில வேலைகளை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டி வரும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இன்று உங்கள் பணியிடத்தில் நல்ல பாராட்டுக்களைப் பெறுவீர்கள். ஆனால் எந்த ஒரு வேலையிலும் அவசரம் காட்டினால், அதில் சில இடையூறுகளை சந்திக்க நேரிடும். மற்றவருடன் பேசும் போது யோசித்து பேச வேண்டும். வீட்டின் வரவு செலவு குறித்து வேறு யாரிடமும் பேசக்கூடாது, இல்லையெனில் அவர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் உங்களை ஏமாற்றலாம். எனவே சற்று கவனமாக இருக்க வேண்டும். வேலையில் குறைந்த கவனம் செலுத்துவீர்கள். இதனால் வேலையை குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் போகும். குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள் இன்று மீண்டும் தலை தூக்கும், இது உங்களுக்கு சிரமத்தை கொடுக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Desktop Bottom Promotion