Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
இன்றைய ராசிபலன் 11 ஜனவரி 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு துயரமான நாளாக இருக்குமாம்...!
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 11-ஆம் தேதி ஞாயிறுக் கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று திருமண வாழ்க்கையில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்படும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக உங்களுக்கு பரீட்சை வரப்போகிறது என்றால், எந்த விதத்திலும் அலட்சியமாக இருக்கக்கூடாது. உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். திடீர் பண வரவு கிடைக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில் இன்று நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மிகவும் வெற்றிகரமான நாளாக இருக்கும். உங்களின் அனைத்து முயற்சிகளும் சாதகமான பலனைத் தரும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு லாபகரமான வாய்ப்புகள் தேடிவரும் மற்றும் வணிகம் பிரகாசமாக இருக்கும். குடும்பத்தில் குதூகலமான சூழல் நிலவும் மற்றும் சிறிய பயணம் செய்ய நேரலாம். விருந்தினர்கள் வருவதால் வீட்டில் கலகலப்பான சூழல் நிலவும். இன்று உங்களின் அதிர்ஷ்டமான நிறம் நீலம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று மன அழுத்தம் நிறைந்த நாளை சந்திக்கலாம், குறிப்பாக அவர்களின் குழந்தைகள் தொடர்பான விஷயங்களால். மறுபுறம், உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும், உங்கள் மனைவி உங்களுக்கு முழு மனதுடன் ஆதரவளிப்பார். அலுவலகத்தில் சில சவால்கள் காத்திருக்கும், எனவே கவனமாக செயல்படவும். ஒருவரின் கருத்துகள் உங்களை காயப்படுத்தலாம், எனவே அவற்றை புறக்கணிப்பது நல்லது. இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று சில பணிகளை முடிப்பதில் சவால்களை சந்திக்க நேரிடும். நீங்கள் உங்கள் வேலையில் முழு கவனம் செலுத்த வேண்டும். கல்விப் பிரச்சினைகளில் போராடும் மாணவர்கள் தங்கள் கவனத்தை அதிகரிக்க உழைக்க வேண்டும். அலுவலகத்தில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் செயல்படவும். மற்றவர்களை அதிகம் சார்ந்திருப்பதை தவிர்க்கவும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று உற்சாகமான ஒரு நாளை எதிர்பார்க்கலாம். உங்கள் மகிழ்ச்சியை அதிகரிக்கும் சில நல்ல செய்திகள் உங்களைத் தேடிவரும். நீண்டகாலப் பணிகள் இன்று நிறைவேறும், இது உங்களுக்கு ஒரு திருப்தியான உணர்வைத் தரும். வேலை தொடர்பான பயணம் செய்ய நேரிடலாம், இது உங்களுக்கு பலனளிக்கும். குடும்பச்சூழல் சிறப்பாக இருக்கும், கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்பட்டு மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்ட நிறம் ஊதா.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று வருமானம் மற்றும் செலவுகளுக்கு இடையே சமநிலையை பராமரிக்க வேண்டும். பணவரவு அதிகரிப்பது மகிழ்ச்சியைத் தந்தாலும், செலவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் பணிகளை சரியாகத் திட்டமிடுவது அவை வெற்றிகரமாக முடிவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். நிதி நெருக்கடியால் ஏதேனும் பணி தடைபட்டிருந்தால், அது இன்று முடிய வாய்ப்பு உள்ளது. இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று கலவையான நாளை அனுபவிப்பார்கள். வேலையில் மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். பாதகமான சூழ்நிலைகளில் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும் மற்றும் முக்கியமான தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். சட்டரீதியான விவகாரங்கள் சவால்களை ஏற்படுத்தலாம். உங்கள் நிதி நிலை மேம்படும், உங்கள் மனைவி உங்கள் முயற்சிகளை முழுமையாக ஆதரிப்பார். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பிங்க்.
தனுசு
இன்று உங்கள் கடந்த காலத்திலிருந்து ஒரு புதிய பாடத்தைக் கற்றுக்கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பைப் பெறலாம். நீங்கள் ஒரு பழைய நண்பருடன் தொடர்பு கொள்ளலாம், ஆனால் அந்த நபர் உங்களுக்கு தீங்கு செய்ய நினைக்கலாம் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் மனைவியிடமிருந்து ஒரு நல்ல செய்தி கிடைக்கக்கூடும். உங்கள் குடும்பத்துடன் நல்ல நேரத்தை செலவிட இது ஒரு சிறந்த நாள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு, இந்த நாள் மகிழ்ச்சியையும், திருப்தியையும் அளிக்கும். உங்கள் குழந்தைகள் உங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவார்கள். இருப்பினும், உங்கள் தேவையற்ற செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வேலையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கலாம், ஆனால் பீதி அடையத் தேவையில்லை, இது உங்களின் திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ப்ரவுன்.
கும்பம்
இன்று நீங்கள் மோசமான நாளை அனுபவிக்காலம். உங்கள் புத்திசாலித்தனம் இன்று உங்களுக்கு துணையாக இருக்காது, இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு பாதகமான பலன்களை அளிக்கலாம். இன்று உங்கள் நண்பர்கள் மற்றும் சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் சில பெரிய நிதி இழப்பையும் சந்திக்க நேரிடலாம். வழக்கத்தை விட இன்று உங்கள் இயல்பில் அதிகப்படியான கோபம் இருக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் கருப்பு.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய செலவுகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். உங்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள். உங்களின் சிறப்பான செயல்திறனைக் கண்டு மேலதிகாரிகள் மகிழ்ச்சி அடைவார்கள். உங்களின் காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். உங்கள் குழந்தைகளிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் நீலம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











