Today Rasi Palan 11 February 2025: இன்று இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப கவனமா இருக்கணும்... இல்லனா ஆபத்துதான்...!

Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.

அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி செவ்வாய்க் கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 11 February 2025 Daily Horoscope in Tamil Today Horoscope in Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக நீங்கள் பெரிய முதலீடுகளைச் செய்யலாம். மாணவர்கள் படிப்பு விஷயங்களில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க தவிர்க்க வேண்டும், இல்லையெனில் மோசமான பின்விளைவுகள் ஏற்படலாம். அலுவலத்தில் நிலவி வந்த பதற்றமும் குறையும். இன்று கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் கருப்பு.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் இன்று ஒரு சவாலான நாளை எதிர்கொள்ள நேரிடும். கடுமையான வார்த்தைகள் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். ஆபத்தான முயற்சிகளைத் தவிர்த்து, உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் யாரிடமாவது வாக்குவாதத்தில் ஈடுபட்டால், உடனடியாக மன்னிப்பு கேளுங்கள். மற்றவர்களின் மனதை புண்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஆறுதலான நாளாக இருக்கும். உங்களின் சில முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி நண்பர்களுடன் விவாதிக்கலாம். உங்களின் நீண்டகால நிதிப் பிரச்சினை தீர்க்கப்படலாம். வியாபாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு உங்கள் தந்தையின் ஆலோசனையைப் பெறுங்கள். சகஊழியர்களின் ஆதரவால் அலுவலகத்தில் நிம்மதியான சூழல் நிலவும். இன்று உங்களின் அதிர்ஷ்ட ஊதா.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று சாதரணமான நாளாக இருக்கும். வீட்டுச் செலவுகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். நேங்கள் கூட்டு வியாபாரத்தில் இருந்தால், இன்று பெரிய நன்மைகளைப் பெறலாம். உங்கள் மேலதிகாரி உங்கள் மீது அதிருப்தி அடையக்கூடும் என்பதால், பணிகளை சரியான நேரத்தில் முடிக்கவும். புதிய சொத்து வாங்குவது சாத்தியமாகும். நீங்கள் கடனையும் திருப்பிச் செலுத்தலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உங்களின் அனைத்து புதிய முயற்சிகளும் வெற்றியைத் தரும். உங்கள் குழந்தைக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால், அவை இன்று குணமாகும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வேலை மற்றும் ஓய்வை சமநிலையில் வைத்திருங்கள். ஒரே விஷயத்தைப் பற்றி அதிக நேரம் சிந்திப்பது உங்கள் ஆற்றலை வீணாக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த நாள் கலவையான நாளாக இருக்கும். நீங்கள் ஒரு பொழுதுபோக்கு நிகழ்வில் பங்கேற்கலாம். வேலை தொடர்பாக இருந்து வந்த சிக்கல்கள் தீர்க்கப்படும். மன அழுத்தத்தைக் குறைக்க சில முயற்சிகளில் ஈடுபடுவது நல்லது. திடீர் வாகனப் பிரச்சனையால் பயணத் திட்டங்கள் தடைபடக்கூடும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் அதிகரிக்கலாம். இன்று சில கடினமான சூழ்நிலைகளில் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். உங்களை நீண்ட காலமாக குழப்பிய ஒரு விஷயம் இன்று முடிவுக்கு வரும். எந்தவொரு முடிவையும் அவசர எடுப்பதைத் தவிர்க்கவும். சில சட்டப் பிரச்சினை சிக்கலை ஏற்படுத்தக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவக்கூடும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் நீலம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இன்று தன்னம்பிக்கையால் பல சாதனைகளை செய்வார்கள். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்கவும். குடும்ப உறுப்பினருக்கு அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். புதிய திட்டங்கள் பலனளிக்கும், இது வணிக வளர்ச்சிக்கு உதவும். ஒரு பழைய நண்பரை இன்று மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். உங்கள் துணையுடன் ஷாப்பிங் செல்ல நேரிடும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இன்று எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாளாக இருக்கும். புதிய சொத்து வாங்க கடன் வாங்க நேரிடலாம். முக்கியமான முடிவுகளை எடுக்கும் முன் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுங்கள். காதலர்களிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் கருத்துகளுக்கு மதிப்பளிப்பார்கள், இது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று சாதாரணமான நாளாக இருக்கும். தேவையற்ற விளம்பரங்களைத் தவிர்க்கவும். புதிய சொத்து வாங்க திட்டமிட்டால், மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். நண்பர்களுடன் சில தகராறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய வணிக யோசனைகளை உடனடியாக செயல்படுத்துங்கள். உங்களின் சகஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மெரூன்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சிறப்பான நாளாக கிடைக்கும். உங்கள் குழந்தைகளுக்காக பயணம் செய்ய நேரிடும். செரிமான பிரச்சனைகள் உங்களை தொந்தரவு செய்யக்கூடும். கடனாகக் கொடுத்த பணத்தை திரும்பப் பெற வாய்ப்பு உள்ளது. வேலை தேடுபவர்கள் இன்று புதிய வாய்ப்புகளைப் பெறலாம். முக்கியமான முடிவுகளை நன்கு ஆலோசித்து அதன்பின் எடுக்கவும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.

மீனம்

மீன ராசிக்காரர்கள் இன்று மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய பொருட்களை வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம், எனவே புத்திசாலித்தனமாக செலவு செய்யவும். உங்கள் வேலையில் கவனமாக திட்டமிட்டு செயல்படுங்கள். உங்களின் உற்சாகம் வேலைகளை துரிதமாக முடிக்க உதவும். மூன்றாம் நபரால் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே தவறான புரிதல்கள் ஏற்படக்கூடும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பிங்க்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Tuesday, February 11, 2025, 5:00 [IST]
Desktop Bottom Promotion