Today Rasi Palan 11 ஆகஸ்ட் 2025: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கப்போகுதாம்...!

Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.

அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி திங்கள் கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 11 August 2025 Daily Horoscope in Tamil Today Horoscope in Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் சில சாதகமான மாற்றங்கள் ஏற்படும். உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். உங்கள் முழு கவனமும் உங்கள் இலக்கில் இருக்கும். பொருளாதார நிலை வலுப்பெறும். எந்தவொரு பழைய முதலீட்டிலிருந்தும் நியாயமான லாபத்தைப் பெறலாம். வணிகர்களுக்கு இன்று சாதகமான நாள். லாபம் ஈட்ட நல்ல வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் கோபத்தை சந்திக்க வேண்டி வரும். எனவே உங்கள் வேலையை கவனமாக செய்யுங்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு வேலை தொடர்பான புதிய முயற்சிகள் வெற்றி பெறும். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கையின் நேர்மறையான அம்சங்களில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் புதிய தொழில் தொடங்க நினைத்தால் உங்களுக்கு நெருக்கமானவர்களின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் நிலை வலுவாக இருக்கும். முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்பு கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களைப் பொறுத்தவரை கடின உழைப்பு இருந்தபோதிலும், எதிர்பார்த்த பலன் கிடைக்காததால் நீங்கள் மிகவும் ஏமாற்றத்தை உணரலாம். நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையே சமநிலையைப் பராமரிக்கவும். குடும்பத்திலும் கவனம் செலுத்துங்கள். வியாபாரிகள் தற்போதைய பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். புதிய வேலையைத் தொடங்க அவசரப்பட வேண்டாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஊதா.

கடகம்

இன்று உங்கள் கடின உழைப்புக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். நீங்கள் மிகவும் நேர்மறையாகவும் நம்பிக்கையுடனும் இருப்பீர்கள். நீங்கள் சிறப்பு வாய்ந்த ஒருவரைச் சந்திக்கலாம். உங்களது இந்த சந்திப்பு மறக்க முடியாததாக இருக்கும். பணம் தொடர்பான கவலைகளில் இருந்து விடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் வார்த்தைகளை அலட்சியம் செய்வதால் அதிக செலவு ஏற்படும். வீட்டில் நடக்கும் பிரச்சனைகளில் கவனம் தேவை. இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.

சிம்மம்

இன்று உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள். பழைய விஷயங்களை மறந்துவிட்டு புதிதாக தொடங்க முயற்சி செய்யுங்கள். அண்டை வீட்டாரோடு அல்லது உறவினரோடு தகராறு ஏற்படலாம். கோபத்திலும் ஆத்திரத்திலும் எந்த வேலையையும் செய்வதைத் தவிர்க்கவும். வேலை விஷயமாக நிறைய அலைய வேண்டியிருக்கும். வியாபாரிகளுக்கு வேலை தொடர்பான பிரச்சனைகள் தீர்ந்து உங்கள் வேலை வேகமடையும். வேலையில் இருப்பவர்கள் முக்கியமான வேலைகளைச் செய்யும்போது அதிக அவசரம் வேண்டாம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் பிங்க்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உங்களுக்கு கடினமான நாளாக இருக்கும். நீங்கள் சில புதிய சவால்களைச் சந்திக்க நேரிடும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள். உங்களின் பெருந்தன்மையை சிலர் பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்யலாம். அப்படிப்பட்டவர்களிடம் கவனமாக இருங்கள். வேலை பற்றிய கவலைகள் இருக்கும். வியாபாரிகளே இன்று உங்கள் எதிரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உயர் அதிகாரிகளின் முன்னிலையில் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும். தேவையற்ற ஈகோவை தவிர்க்க வேண்டும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் நீலம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்று உங்கள் உடல்நிலை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சில பழைய நோய்கள் உங்களைத் தொந்தரவு செய்யலாம். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. நீங்கள் புதிய வழிகளில் பணம் சம்பாதிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகளின் செயல்பாடுகளில் ஒரு கண் வைத்திருங்கள். இல்லையெனில், அவர்கள் தங்கள் இலக்கிலிருந்து விலகிச் செல்லலாம். வியாபாரிகள் பழைய சட்ட சிக்கலில் இருந்து விடுபடுவீர்கள். நீங்கள் சில புதிய வணிகத் திட்டங்களையும் செயல்படுத்தலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மெரூன்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று அவர்களின் உங்களின் நீண்ட கால விருப்பம் இன்று நிறைவேறும். அதனால், மனம் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் முன்னேற்றத்தில் இருந்த தடைகள் நீங்கி முன்னேறுவீர்கள். தொழிலதிபர்களின் நிலை சந்தையில் வலுவாக இருக்கும். நீங்கள் ஒரு பெரிய ஆர்டரைப் பெற வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்களின் செயல்பாடுகளால் உயர் அதிகாரிகள் திருப்தி அடைவார்கள். வீட்டில் நிலவி வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்வில் இருந்துவந்த பிரச்சனைகள் அதிகரிக்கலாம். தனிப்பட்ட வாழ்க்கையின் சிக்கல்கள் வேலையில் ஆதிக்கம் செலுத்தும். கடந்த காலத்தில் எடுத்த தவறான முடிவு உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கும். உங்களுக்கு நெருக்கமான ஒருவரின் ஆதரவைப் பெறுவதன் மூலம் உங்கள் மன உறுதி அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு வீண் அலைச்சல் வரலாம். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். இணர் உங்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.

மகரம்

மகர ராசிக்காரர்கள் வேலை தொடர்பான பிரச்சனைகள் தீர்ந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பலாம். குழந்தைகள் கல்வியில் சிறந்த வெற்றியைப் பெறுவார். அதனால், நீங்கள் அவர்களைப் பற்றி மிகவும் பெருமைப்படுவீர்கள். இன்று திடீர் தேவையற்ற பயணத்தை மேற்கொள்ள நேரிடலாம். கூட்டுத் தொழில் செய்யும் திட்டம் நற்பலன்களை அளிக்கும். சில புதிய யுக்திகளையும் தயார் செய்வீர்கள். வேலையில் இருப்பவர்களின் நேர்மறை எண்ணம் அலுவலகத்தில் உள்ள அனைவரையும் ஈர்க்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.

கும்பம்

இன்று நீங்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் மிகவும் வலுவாக உணர்வீர்கள். முழு நம்பிக்கையுடன் உங்கள் முடிவுகளை எடுப்பீர்கள். குடும்ப உறவுகளில் இனிமை இருக்கும். அன்புக்குரியவர்களிடமிருந்து உணர்ச்சிபூர்வமான ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் நேர்மறையான அணுகுமுறையைப் பராமரிக்கவும். தொழிலதிபர்களின் அனைத்து வேலைகளையும் பணியாளர்களை நம்பி விடாதீர்கள். முடிந்த வரை அலுவலகத்தில் இருக்க முயற்சி செய்யுங்கள். படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.

மீனம்

இன்று உங்கள் மன நிலையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். தேவையில்லாமல் கவலைப்படாதீர்கள். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிட வாய்ப்பு கிடைக்கும். வருமானம் உயரும் வாய்ப்பு உண்டு. தொழிலதிபர்கள் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இன்று வேலை நிமித்தமாக பயணம் செய்ய வேண்டியிருக்கும். வேலை குறித்த கவலை அதிகரிக்கும். நீங்கள் வேலையில்லாமல் இருந்தால், வேலை கிடைப்பதில் மேலும் தாமதம் ஏற்படலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் கருப்பு.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, August 11, 2025, 5:00 [IST]
Desktop Bottom Promotion