Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
Today Rasi Palan 08 December 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசரப்பட்டு எதையும் செய்வதை தவிர்க்கணும்..
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 08 ஆம் தேதி ஞாயிறுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 7.45-8.45 மணி வரை. மாலை 3.15-4.15 மணி வரை. ராகு காலம் காலை 4.30-6.00 மணி வரை. குளிகை காலை 3.00-4.30 மணி வரை. எமகண்டம் காலை 12.00-1.30 மணி வரை. சூலம் - மேற்கு திசை. பூசம், ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்களின் தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும். உங்களின் பொறுப்புகள் அதிகரிக்கலாம். உடன் வேலை செய்வோருடன் பேசும் முன் கவனமாக சிந்தித்து பேச வேண்டும். பணியிடத்தில் செய்யும் வேலையில் அவசரப்படக்கூடாது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று எந்த வேலையையும் சிந்தித்து செய்ய வேண்டும். வேலை தொடர்பாக உடன் வேலை செய்வோரின் உதவியைப் பெறுவீர்கள். குழந்தைகளிடம் இருந்து சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். புதிய சொத்தில் இன்று முதலீடு செய்யும் வாய்ப்பு கிடைக்கும். இது உங்களின் செல்வத்தை அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று உங்களின் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும். அதிக வேலையின் காரணமாக போதுமான அளவு ஓய்வை எடுக்காமல் இருப்பீர்கள். இதனால் ஆரோக்கியம் மோசமடையக்கூடும். குடும்பப் பணியின் சுமை அதிகமாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் திருமணத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று உங்களின் முன்னேற்ற பாதைகள் திறக்கும். இது உங்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினரின் விசித்திரமான நடத்தையால் உங்கள் மனம் கொஞ்சம் குழப்பமாக இருக்கும். உங்கள் முன்னேற்றத்தில் இருந்த தடைகள் நீங்கும். பணிபுரிவர்களுக்கு அல்லது வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். மற்றவரிடம் பேசும் போது மிகவும் சிந்தனையுடன் பேச வேண்டும், இல்லையெனில் நீங்கள் சொல்வதை அவர்கள் மோசமாக உணரலாம். பணியிடத்தில் உயர் அதிகாரி உங்களுக்கு அதிக பொறுப்புக்களை வழங்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று நீங்கள் எங்காவது வெளியே செல்லத் திட்டமிடலாம். மாணவர்கள் தேர்வுக்கு கடினமாக உழைத்தால் வெற்றி பெற வாய்ப்புள்ளது. உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரிகள் புதிய திட்டத்தை போடலாம். இது நல்ல பலனையும் தரும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று உங்களின் வேலைக்கு உடன் பிறந்தவர்களின் உதவியைப் பெற வேண்டியிருக்கும். உங்கள் தந்தையைப் பற்றி நீங்கள் வருத்தப்படலாம். உங்களின் எந்த ஒரு வேலையையும் முடிப்பதில் சிக்கல் இருக்கும். உங்கள் பிள்ளைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு செல்வம் பெருகும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையலாம். கூட்டு தொழில் செய்ய நினைத்தால், கூட்டாளரைப் பற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். இது உங்கள் இமேஜை மேலும் மேம்படுத்தும். இன்று உங்கள் முன்னேற்றத்தில் இருந்த தடைகள் நீங்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று சிரமங்கள் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் பல சிரமங்கள் இருக்கும். உங்கள் தந்தையின் உடல்நிலையில் நீங்கள் முழு கவனம் செலுத்த வேண்டியிருக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய நண்பரை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவீர்கள். ஆனால் அப்போது பழைய குறைகளை எடுத்துரைக்க வேண்டாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று காதலிப்பவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். ஒரே நேரத்தில் பல பணிகளைச் சமாளிக்க வேண்டியிருந்தால் உங்கள் கவலை அதிகரிக்கும். உங்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி அனைத்து வேலைகளையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று வேலையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்பு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இன்று உங்களின் கடந்த கால தவறுகளில் இருந்து நீங்கள் பாடம் கற்க வேண்டும். பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த வேலை தேடி வரும். இதனால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு பிரச்சனைகள் நிறைந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் சில இடையூறுகளை சந்திக்கலாம். இதனால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு கிடைக்காமல் போகலாம். யாருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அரசியலில் இருப்பவர்கள் மிகவும் சிந்தனையுடன் செயல்பட வேண்டும். ஏனெனில் நிறைய எதிரிகளை உருவாகலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
