Latest Updates
-
வார ராசிபலன் (19 April 2026 - 25 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
மட்டன் வாங்குனா.. ஒருடைம் இந்த செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
அடுத்தடுத்து நட்சத்திரத்தை மாற்றும் 3 கிரகங்கள்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
வெயிலால் முகம் டல்லாகிடுச்சா? அப்ப 1 ஸ்பூன் அரிசி மாவு வெச்சு தினமும் நைட் இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நீங்க அட்சய திருதியை நாளில் என்ன வாங்கணும்-ன்னு சொல்றோம். .. -
நாவூறும்.. சேலத்து மாங்காய் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
Mango Benefits: மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளும்.. மாம்பழம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகளும்.. -
100 ஆண்டுகள் கழித்து அட்சய திருதியை அன்று உருவாகும் 5 ராஜயோகங்கள்: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கபோகுது! -
ரவா இட்லியும், மல்லி சட்னியும் - சட்டுன்னு 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்! -
இன்றைய ராசிபலன் 18 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்
Today Rasi Palan 04 அக்டோபர் 2025: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...!
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 04-ஆம் தேதி சனிக் கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு, இன்று பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். இருப்பினும், உங்கள் எதிரிகள் உங்களுக்கு எதிராக சதி செய்யலாம். உங்கள் பேச்சில் நீங்கள் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். நீண்ட காலமாக ஒரு சட்டப் பிரச்சினை நடந்து கொண்டிருந்தால், வெற்றி உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட தவறான புரிதல்களைத் தீர்த்துக் கொள்வது அவசியம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். கட்டுப்பாடற்ற செலவுகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம், ஆனால் உங்கள் நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். வேலை தொடர்பான விஷயங்களில் கூடுதல் முயற்சி தேவைப்படலாம். குடுமபத்தில் மூத்த உறுப்பினருடன் சில வாக்கு வாதங்கள் ஏற்படலாம். உங்கள் வாழ்க்கைத்துணையின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் நீலம்.
மிதுனம்
இன்று மிதுன ராசிக்காரர்கள் பல சவாலான சூழ்நிலைகளை சந்திக்கலாம், மன அமைதியின்மை ஏற்படலாம் மற்றும் முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு கவனமாக இருக்க வேண்டும். ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சனையைத் தீர்க்க மற்றவர்களின் நிதி உதவி தேவைப்படலாம். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், பதற்றம் அதிகரிப்பதைத் தடுக்க மோதல்களைத் தவிர்ப்பதும் அவசியம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ப்ரவுன்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று வாகனங்களைப் பயன்படுத்தும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிர்பாராத வாகனப் பழுதடைதல் செலவுகளை அதிகரிக்க வழிவகுக்கும். புதிய வேலை கிடைப்பது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். இருப்பினும், உறவினரிடமிருந்து ஏமாற்றமளிக்கும் செய்திகளைப் பெறுவீர்கள். பொறுமை தேவைப்படுவதால், உங்கள் பணிகளை அவசரமாக செய்வதைத் தவிர்க்கவும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த ஒரு பணி இன்று முடிவடையும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கிரகங்களின் நிலை சாதகமாக உள்ளது. உங்கள் நம்பிக்கையையும், விடாமுயற்சியையும் கைவிட்டு விடாதீர்கள். பணியிடத்தில் கடினமான பணிகளையும் உங்கள் மன உறுதியின் துணையால் மூலம் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். நீங்கள் ஏதேனும் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால், இன்றைய நாள் அதற்கு ஏற்ற நாளாக இருக்கும். திடீரென்று உறவினர் வீட்டிற்கு செல்ல நேரிடலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
கன்னி
இன்று உங்கள் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம், வெளியில் இருந்து உணவு உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது. புத்திசாலித்தனமான முதலீட்டுத் தேர்வுகளை செய்யுங்கள், எந்த விஷயத்திலும் அவசரப்படாதீர்கள். குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிட வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் ஆரோக்கியத்தையும், உங்கள் உறவுகளையும் மதிக்கவும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமாகவும், நிறைவாகவும் இருக்கும். உங்கள் நீண்ட நாள் ஆசைகளில் ஒன்று நிறைவேறலாம். மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வது உங்களை அமைதியற்றதாக மாற்றும். முக்கியமான தகவல்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் கவனமாக இருங்கள். உங்கள் தொழில் சம்பந்தமாக ஒரு முக்கியமான முடிவை எடுக்கலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பிங்க்.
விருச்சிகம்
இன்று புதிய திட்டங்களைத் தொடங்கவோ அல்லது மற்றவர்களுக்கு கடன் கொடுக்கவோ வேண்டாம், ஏனெனில் அது நஷ்டத்தையும், மனஅழுத்தத்தையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இன்று சில உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம், அது உங்கள் ஆற்றலை இழக்கச் செய்யலாம். வியாபாரம் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக இருக்காது. இருப்பினும், ஒரு புதிய விருந்தினர் உங்கள் வீட்டிற்குள் நுழையலாம், அது உங்கள் குடும்பத்திற்கு உற்சாகமாக இருக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஊதா.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கலவையான நாளாக இருக்கும். பயணத் திட்டங்கள் தாமதமாகலாம். மனதில் தெளிவு அதிகரிக்கும் மற்றும் எதிர்காலத்தில் நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியும் என்பதால் இன்று நீங்கள் மிகவும் நிதானமாக சிந்திக்க வேண்டும். ஆரோக்கியம் சீராக இருக்கும். இருப்பினும், நீரேற்றமாக இருக்க போதுமான அளவு தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள். மனைவியுடன் சில சிக்கல்கள் வர வாய்ப்புள்ளதால் அமைதி காக்கவும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் கருப்பு.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.தொழிலில் சில நிதி இழப்புகள் ஏற்படக்கூடும், இது உங்கள் ஒட்டுமொத்த பொருளாதார நிலையைப் பாதிக்கும். பணக் கவலைகள் காரணமாக சில முக்கியமான வேலைகள் நிறுத்தப்படலாம், இது உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கலாம். நீங்கள் ஒரு குறுகிய பயணத்தைத் திட்டமிடலாம், அது பலனளிப்பதாக இருக்கும். இன்று உங்களின் அதிர்ச நிறம் வெள்ளை.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சராசரியான நாளாக இருக்கும். உங்களைச் சுற்றியுள்ள எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள். இருப்பினும், நீங்கள் எந்த முயற்சியை மேற்கொண்டாலும், அதில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட காலமாக காத்திருக்கும் ஒரு ஆசை நிறைவேறலாம். வதந்திகளை நம்புவதைத் தவிர்க்கவும். ஏதேனும் ஒரு முக்கியமான ரகசியம் தெரிய வந்தால், அதை மற்றவர்களிடம் பரப்ப வேண்டாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மெரூன்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று அனுகூலமான நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத்துணை உங்கள் வேலையில் உங்களுக்கு முழு ஆதரவளிப்பார். குடும்ப உறுப்பினர்களின் திருமணத் திட்டத்தில் இருந்த தடைகள் நீங்கும். வயிற்றுப் பிரச்சினைகளைத் தவிர்க்க உங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். முக்கியமான தகவல்களை யாருடனும் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். உங்களின் உத்திகள் உங்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் நீலம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











