Latest Updates
-
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்..
Today Rasi Palan 04 January 2025: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.....
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 04 ஆம் தேதி சனிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 7.45-8.45 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 9.00-10.30 மணி வரை. குளிகை காலை 6.00-7.30 மணி வரை. எமகண்டம் காலை 1.30-3.00 மணி வரை. சூலம் - கிழக்கு திசை. பூசம், ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று நீண்ட கால பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். பயணங்களை மேற்கொள்ள திட்டமிடலாம். பெற்றோரின் ஆசியைப் பெற்று எதையும் செய்தால் நல்ல பலனைப் பெறலாம். அரசியலில் இருப்பவர்களுக்கு பெரிய தலைவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்து புதிய வேலைகளைத் தொடங்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். யாரிடமாவது கடன் வாங்கியிருந்தால், அவர்கள் உங்களிடம் திரும்பக் கேட்கலாம். கடன் வாங்குவதில் சிக்கலை எதிர்கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் தொழிலில் இருந்த டென்சன் நீங்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று சவாலான நாளாக இருக்கும். ஒரு வேலையை செய்வதற்கு பயம் அல்லது சந்தேகம் எழுந்தால், அந்த வேலையைச் செய்யாதீர்கள். உங்கள் குழந்தைகள் சில தவறான செயல்களுக்கு அடிமையாகலாம். எனவே நீங்கள் அவர்களை கண்காணிக்க வேண்டும். பணியிடத்தில் யாராவது உங்களைப் பற்றி கிசுகிசுக்கலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று முன்னேற்ற பாதைகள் திறக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். எந்த வேலையைச் செய்தாலும் அதில் வெற்றி நிச்சயம். வேலையில் அதிக டென்ஷன் எடுக்க மாட்டீர்கள். உங்கள் ஆரோக்கியமும் முன்பை விட சிறப்பாக இருக்கும். எந்த ஒரு முக்கியமான தகவலையும் யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும் நாளாக இருக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். இருப்பினும் பண விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகள் பெரிய ஆர்டரைப் பெறுவார்கள். உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவீர்கள். இதனால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு கலவையான நாளாக இருக்கும். சிந்திக்காமல் எந்த புதிய வேலையிலும் ஈடுபட வேண்டாம். வீடு, வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். பழைய நோய்கள் மீண்டும் தோன்றலாம். எந்த ஒரு வேலையைச் செய்தாலும் அவசரம் காட்டினால், அதில் ஏதோ தவறு செய்ய நேரிடலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும. வேலையில் தடைகள் இருந்தால், அவை நீங்கும். தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகளின் படிப்பில் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று உங்கள் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும். பேச்சு மற்றும் நடத்தையால் பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் மனதை ஈர்ப்பீர்கள். திருமணமாகாதவர்கள் தங்கள் துணையை சந்திக்கலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு பணம் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளாகலாம். இன்று உங்கள் செலவுகள் அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று நீங்கள் மிகவும் சிந்தனையுடன் எந்த காரியங்களையும் செய்ய வேண்டும். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். எந்த வேலையை செய்யும் முன்பும், அதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. நீண்ட கால திட்டங்கள் வேகம் பெறும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று வாகனங்களை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். மனதில் குழப்பம் இருக்கும். இதனால் உங்கள் வேலைகள் கெட்டுப் போகலாம். மாணவர்கள் புதிய வேலைகளில் ஆர்வம் காட்டலாம். உங்கள் குழந்தையின் விருப்பப்படி, புதிய வாகனத்தை நீங்கள் வாங்கலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று விவாதங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். பிறர் விஷயத்தில் தேவையில்லாமல் பேச வேண்டாம். சண்டைகளில் ஈடுபட்டால் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்களின் எந்த ஒரு வேலையையும் நாளை வரை தள்ளிப் போடுவதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் பிறகு முடிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று நீங்கள் எந்த ஒரு முடிவையும் மிகவும் கவனமாக எடுக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து பெற்றோரிடம் பேச வேண்டி வரும். பணியிடத்தில் சில பெரிய பொறுப்புகளை பெறலாம். செலவுகளிலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். தொழிலில் மாற்றம் வேண்டுமானால், அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications