Latest Updates
-
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம்
Today Rasi Palan 03 November 2024: இன்று இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கும்...
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 03 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 7.45-8.45 மணி வரை. மாலை 3.15-4.15 மணி வரை. ராகு காலம் காலை 4.30-6.00 மணி வரை. குளிகை காலை 3.00-4.30 மணி வரை. எமகண்டம் காலை 12.00-1.30 மணி வரை. சூலம் - மேற்கு திசை. அசுபதி நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று குடும்ப உறுப்பினர்களால் சிறிது சிரமப்படுவீர்கள். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் குறித்த கவலையும் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உடன் வேலை செய்வோரின் ஒத்துழைப்பு இல்லாததால், மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். உங்கள் குழந்தைகள் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று உங்கள் தொழிலை விரிவுபடுத்த முயற்சித்துக் கொண்டிருந்தால், அதற்கான கடன் எளிதில் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். ஆனால் வயிறு தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படலாம். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்றுஉ உங்கள் பிள்ளையின் திருமணத்தில் தடை ஏற்படுவதால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். நண்பர்களின் உதவியால் நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலை வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று குடும்ப உறுப்பினர்களால் அதிகம் விமர்சிக்கப்படுவீர்கள். உடன் பிறந்தவர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். காதல் விஷயத்தில் வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. பழைய நண்பர்களை இன்று சந்திப்பீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று அரசியலில் இருப்பவர்களுக்கு அருமையான நாளாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளுடனான உறவு வலுபெறும். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பயணம் மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், அதற்காக உங்களை யாரும் பாராட்டமாட்டார்கள். அதற்காக வருதப்படாதீர்கள். தந்தையுடனான உறவு சற்று பலவீனமாக இருக்கும். உடன் பிறந்தவர்களின் துரோகத்தால் மிகுந்த வருத்தப்படுவீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று நீங்கள் பேசுவதற்கு முன் நன்கு யோசித்த பின் பேசுங்கள். தந்தையின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சுமூகமாக இருக்கும். பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களைப் பெறுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். எந்த வேலையை செய்தாலும் யோசிக்காமல் செய்யாதீர்கள். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகளை அனுபவசாலிகளின் உதவியுடன் முடிப்பீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று உங்கள் நடத்தை மற்றவர்களை காயப்படுத்தும். எனவே உங்கள் நடத்தைகளை கவனித்துக் கொள்ளுங்கள். காதல் விவகாரங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு இன்று நல்ல லாபம் கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று உங்களின் நீண்டகால பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உங்களின் நடத்தையால் மற்றவர்கள் உங்களுக்கு உதவ முன்வருவார்கள். வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று உங்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உங்கள் பிள்ளைகளின் நடத்தையால் மகிழ்ச்சி அடைவீர்கள். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு நிறைய வேலைகள் இருக்கும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய வாகனம் மற்றும் நிலம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பிள்ளைகளின் திருமணம் குறித்த கவலைகள் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications