Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
சனிபகவான் உருவாக்கும் திரிகேச யோகம் இந்த 3 ராசிக்காரர்களை வாழ்க்கையில் உச்சத்திற்கு கொண்டுபோக போகுதாம்...!
ஜோதிட சாஸ்திரத்தின்படி, அனைத்து கிரகங்களும் தொடர்ந்து மாற்றங்களுக்கு உட்பட்டு வருகிறார். கிரகங்களின் இந்த மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தும். பொதுவாக சனிபகவான் கோபக்கார கிரகமாகவும், மோசமான பலன்களை தருபவராகவும் அறியப்படுகிறார். ஆனால் சனிபகவான் ஒருவரின் ஜாதகத்தில் சரியான இடத்தில் அமர்ந்தால் அவர்கள் ராஜயோகத்தைப் பெறுவார்கள். அத்தகைய ஒரு ராஜயோகம் ஜென்மாஷ்டமிக்கு முன் உருவாகப் போகிறது.
சனிபகவான் வழக்கமாக ஒரு ராசியில் சுமார் இரண்டரை ஆண்டுகள் தங்குகிறார். சனிபகவான் தற்போது மீன ராசியில் இருக்கிறார். இந்த நேரத்தில், சனிபகவான் சூரியனுடன் திரிகேச யோகத்தை உருவாக்குகிறார். இது சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத லாபங்களுக்கு வழிவகுக்கிறது. ஆகஸ்ட் 12 அன்று இந்த சக்திவாய்ந்த யோகம் உருவாகிறது. இந்த பதிவில் சனிபகவான் உருவாக்கும் திரிகேச யோகத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசிகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த திரிகேச யோகம் சிறப்பான நன்மைகளை அளிக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் சனிபகவான் விருச்சிக ராசியின் ஐந்தாம் வீட்டில் இருக்கிறார். தற்போது அவர்களின் முயற்சிகள் அனைத்தும் அவர்களுக்கு வெற்றியைத் தரும். இந்த காலகட்டத்தில் அலுவலகப் பணிகளில் இருப்பவர்கள் அசாதாரணமான முன்னேற்றம் அடைவார்கள். வேலை தொடர்பான பயணங்கள் லாபகரமாக இருக்கலாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் சாதனைகளைப் பற்றி பெருமிதம் கொள்வார்கள்.
திரிகேச யோகம் அவர்களின் உறவுகளை வலுப்படுத்துகிறது, உடன்பிறந்தவர்களுடனான உறவு வலுப்படும். சனிபகவானின் ஆசீர்வாதம் அவர்களின் சாதனைக்கான பாதையை பலப்படுத்துகிறது. அவர்கள் இலக்குகளை அடையவும், தனிப்பட்ட மற்றும் தொழில்முறை மேம்பாட்டைத் தொடரவும் இந்த சாதகமான நேரத்தைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு, சனிபகவான் உருவாக்கிய ராஜயோகம் அவர்களை வாழ்க்கையின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லும். இந்த காலகட்டத்தில் அவர்கள் மீது மற்றவர்களுக்கு அன்பும், மரியாதையும் அதிகரிக்கும். எனவே, இந்த ராசிக்காரர்கள் தாங்கள் விரும்பிய பல விஷயங்களை மிக விரைவாக நிறைவேற்றிக் கொள்ளலாம். இந்த ராசிக்காரர்கள் புதிய வழிகளில் பணத்தை முதலீடு செய்ய முடியும். இந்த முதலீடுகள் அவர்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுக்கும்.
அவர்களின் வாழ்க்கையில் உள்ள பல சிக்கல்கள் இப்போது முடிவுக்கு வரும். கும்ப ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் தங்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த முடியும். அலுவலகத்தில் இருப்பவர்கள் தங்கள் சக ஊழியர்களிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவார்கள். சனிபகவான் அவர்களுக்கு வாழ்க்கையில் நிம்மதியையும், முன்னேற்றத்தையும் தரப்போகிறார்.
கடகம்
கடக ராசிகாரர்கள் இந்த திரிகேச யோகத்தால் மிகப்பெரிய வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் அடையப்போகிறார்கள். இந்த காலகட்டத்தில் அவர்களின் வருமானத்தில் வியக்கத்தக்க அதிகரிப்பு இருக்கும். மேலும், அவர்களுக்கு பல வழிகளிலிருந்து வருமானம் கிடைக்கும். பல ஆதாரங்களில் இருந்து வரும் பணம் நிதிநிலையின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். நீங்கள் சில புதிய நபர்களைச் சந்திக்கலாம், அவர்கள் மூலம் வாழ்க்கையில் முன்னேற புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம்.
வியாபாரம் செய்பவர்கள் தங்கள் தொழிலை புதிய இடங்களில் விரிவுபடுத்தலாம். புதிய தொழில் தொடங்கவும் இது ஒரு நல்ல நேரம். உங்கள் குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகளைக் கேட்கலாம். இந்த காலகட்டத்தில் பங்குச் சந்தை போன்றவற்றில் முதலீடு செய்பவர்கள் பெரிய லாபத்தை அடைவார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

