Latest Updates
-
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும்
தை பொங்கல் ராசி பலன் 2026: தை பிறந்தால் யாருக்கு வழி பிறக்கும்.. யாருக்கு ஜாக்பாட் அடிக்கும்?
Thai Pongal Rasi Palan 2026: தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள். 2026 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி தை முதல் நாள் பிறக்கிறது. இந்த தை மாதத்தில் சூரிய பகவான் மகர ராசியில் பயணம் செய்வார். மகர ராசி சனிபகவானின் வீடு. சனி பகவானின் வீட்டில் அடி எடுத்து வைக்கும் சூரியன் சிலரது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறார்.
தை பொங்கல் நாளில் மகர ராசியில் சூரியன், சுக்கிரன், கும்ப ராசியில் ராகு, மீன ராசியில் சனி, மிதுன ராசியில் குரு, சிம்ம ராசியில் கேது, விருச்சிக ராசியில் சந்திரன், தனுசு ராசியில் செவ்வாய், புதன் என நவகிரகங்களின் பயணம் உள்ளது. இந்த கிரகங்களின் நிலையால் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அதன் தாக்கம் காணப்படும்.

2026 ஆம் ஆண்டின் தை பொங்கல் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் மற்றும் செய்ய வேண்டிய பரிகாரம் குறித்து ஜோதிடர் சொ. ஜெயலட்சுமி அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையிடம் பகிர்ந்து கொண்டார். இப்போது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான தை மாத ராசி பலன்களைப் பார்ப்போம்.
மேஷம்
உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்யும் சூரியனால் பதவி யோகம் தேடி வரப்போகிறது. வேலை தேடுபவர்களுக்கு கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். உங்களின் நிர்வாகத் திறமை கூடும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் கைக்கு வரும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை முருகனை வழிபடவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சூரியன் பயணம் செய்வதால் உங்களுக்கு தை மாதம் பொற்காலமாக இருக்கப் போகிறது. புது வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் வரப்போகிறது. குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஆன்மீக பயணம் செல்வீர்கள்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை வழிபடுவது நன்மையை கொடுக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்கு 8 வது வீடான அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் பயணம் செய்வதால் எதையும் கவனமாக கையாள வேண்டியிருக்கும். தை பிறந்த பின் உங்களின் சாமர்த்தியமான பேச்சால் காரியங்களைச் சாதிப்பீர்கள். கடன் பிரச்சனைகள் குறையத் தொடங்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.
பரிகாரம்: புதன்கிழமை துளசி மாலை அணிவித்து விஷ்ணு வழிபாடு செய்யவும்.
கடகம்
கடக ராசிக்கு 7 ஆம் வீட்டில் சூரியன் பயணம் செய்வதால், சவாலான காரியங்களையும் எளிதில் முடிப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும், உடல் ஆரோக்கியத்தில் மட்டும் அக்கறை காட்டுவது அவசியம். இரவு நேரங்களில் காரமான உணவுகளை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்: திங்கட்கிழமை சிவபெருமானை நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியனின் பயணம் ஆறாம் வீட்டில் உள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். அஷ்டம சனியின் காலம் என்பதால் பயணங்களில் நிதானம் தேவைப்படும். சூரியனின் பலத்தால் தை மாதத்தில் அரசு வழி காரியங்கள் தடையின்றி முடியும்.
பரிகாரம்: தினசரியும் அதிகாலையில் சூரிய வழிபாடு செய்வது நல்லது.
கன்னி
தை மாதத்தில் ராஜ கிரகங்களின் பயணம் உங்களுக்கு சாதகமாக உள்ளது. சூரியன் சுக்கிரன் இணைந்து 5 ஆம் வீட்டில் பயணம் செய்வதால் பூர்வீக சொத்துக்கள் மூலம் பலன் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகளின் திருமணப் பேச்சு வார்த்தைகள் சுபமாக முடியும். வெளிநாடு செல்லும் முயற்சி கைகூடி வரும்.
பரிகாரம்: சனிக்கிழமை பெருமாள் கோவிலில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது வெற்றியை தரும்.
துலாம்
சுக்கிர பகவானின் ஆசி நிறைந்த துலாம் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சூரியன் பயணம் செய்வதால் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். நண்பர்களின் உதவி சரியான நேரத்தில் கிடைக்கும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு செய்யவும்.
விருச்சிகம்
தை பிறந்தால் உங்களுக்கு நிச்சயம் வழி பிறக்கப்போகிறது. உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறப்போகிறது. மூன்றாவது வீடான முயற்சி ஸ்தானத்தில் ராஜ கிரகங்களின் பயணம் இருப்பதால் உங்களின் தைரியம், தன்னம்பிக்கை கூடும். வேலை செய்யும் இடத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். புதிய முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அங்காரக வழிபாடு வெற்றியைக் கொடுக்கும்.
தனுசு
தை மாதத்தில் குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்யும் கிரகத்தினால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடைபெறும். நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று நினைத்த பொருட்களை வாங்குவீர்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். ஆன்மீகப் பயணங்கள் மன அமைதியை கொடுக்கும்.
பரிகாரம்: வியாழக்கிழமை குரு தட்சிணாமூர்த்தியை மஞ்சள் வஸ்திரம் சாற்றி வழிபடுவது நன்மையை கொடுக்கும்.
மகரம்
சனி பகவானின் ஆதிக்கம் நிறைந்த மகர ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டம் இது. இம்மாதம் முழுவதும் சூரியனின் பயணம் உங்களுடைய ராசியில் உள்ளது. கடந்த ஏழரை ஆண்டு காலம் சனியின் பிடியில் சிக்கித் தவித்த உங்களுக்கு கஷ்டங்களும் கவலைகளும் நீங்கப் போகிறது. உங்களுடைய ஏழரை சனியின் இறுதி கட்டம் என்பதால் கஷ்டங்கள் படிப்படியாக குறையும். கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
வழிபாடு: சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடவும்.
கும்பம்
உங்களுடைய ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் பயணம் செய்வதால் சுப விரைய செலவுகள் ஏற்படும். ஏழரை சனி காலம் நடப்பதால் எதிலும் அவசரம் காட்ட வேண்டாம். நிதானமான செயல்பாடுகள் வெற்றியை கொடுக்கும். தேவையற்ற வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்: சனிக்கிழமையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சனி பகவானை வழிபடவும்.
மீனம்
மீன ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் சூரியனும் சுக்கிரனும் திடீர் பண வருமானத்தை கொடுப்பார்கள். இதுநாள் வரை தடைபட்டு வந்த சுப காரியங்கள் எல்லாம் விறுவிறுவென வேகமெடுக்கும். பள்ளி மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். படித்து முடித்து விட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.
பரிகாரம்: வியாழக்கிழமை தினத்தில் சித்தர்கள் ஜீவ சமாதிக்கு சென்று வழிபாடு நன்மையை கொடுக்கும்.



Click it and Unblock the Notifications











