Latest Updates
-
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் பிப்ரவரியில் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது...
Sun Transit In Visaakam Nakshatra On February 2026: வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன் மற்றும் இவர் சிம்ம ராசியின் அதிபதி ஆவார். மேலும் சூரியன் தலைமைத்துவம், தைரியம், திறமை, மரியாதை, ஆற்றல், தன்னம்பிப்பை, நம்பிக்கை, மகிழ்ச்சி ஆகியவற்றின் காரணியாவார். இந்த சூரியன் மாதம் ஒரு முறை ராசியை மாற்றுவார். அதோடு அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார்.
அப்படி சூரியனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அந்த வகையில் சூரியன் பிப்ரவரி 06 ஆம் தேதி நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். இந்த நட்சத்திர பெயர்ச்சியின் போது சூரியன் விசாகம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இந்த விசாகம் நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய்.

இந்த செவ்வாயின் நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சிலருக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். குறிப்பாக நிதி ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இப்போது சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் பிப்ரவரியில் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். குறிப்பாக தைரியமும், வீரமும் அதிகரிக்கும். கடந்த கால பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். மன அமைதி கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் உருவாகும். சூரியனின் அருளால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
கும்பம்
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். புதிய வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்பு கிடைக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
மேஷம்
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பார்கள். பல புதிய வழிகளில் இருந்து பணம் தேடி வரும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். நிதி நிலைமை வலுவடையும். பேச்சால் பல வேலைகளை திறம்பட முடிப்பீர்கள். புத்திசாலித்தனமாகவும், நிதானமாகவும் யோசித்து செயல்படுவதோடு முடிவுகளை எடுத்தால், நல்ல நிதி நன்மைகளைப் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications