Latest Updates
-
புரட்டாசி ஸ்பெஷல் செட்டிநாடு கல்யாண பிரிஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
ஓம நீர் Vs சோம்பு நீர் - இவற்றில் உண்மையில் செரிமானத்திற்கு சிறந்தது எது? -
அக்டோபர் 19-ல் சொந்த ராசியில் அஸ்தமனமாகும் சுக்கிரன்: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், பணம் பெருகும்.. -
கல்யாண வீட்டு பூரி மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 11 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு வீண் செலவுகள் தேடிவரப்போகுதாம் - ஜாக்கிரதை -
Navaratri 2026: இந்த நவராத்திரியில் ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா உருளைக்கிழங்கோட சேர்த்து இந்த மாதிரி குருமா பண்ணுங்க - ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும் -
3 முட்டை இருந்தா இந்த கையேந்தி பவன் சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு காரசாரமா சூப்பரா இருக்கும் -
World Mental Health Day 2026: ரீல்ஸ் பார்ப்பது மனநிலையை எப்படிப் பாதிக்கிறது? விளக்கும் மனநல மருத்துவர்! -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்
செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது!
Sun Transit In Virgo On 17 September 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் தன்னம்பிக்கை, கௌரவம், தலைமைப்பண்புகள், தந்தை, நிர்வாகத் திறன், அரசாங்கத் துறை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். மாதம் ஒருமுறை ராசியை மாற்றும் சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாவார். தற்போது சூரியன் சிம்ம ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த சூரியன் செப்டம்பர் மாதத்தில் கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார். அதுவும் செப்டம்பர் 17 ஆம் தேதி சூரியன் ராசியை மாற்றவுள்ளார் மற்றும் இந்த ராசியில் சூரியன் அக்டோபர் 17 ஆம் தேதி வரை இருப்பார். இந்த கன்னி ராசியின் அதிபதி புதன் ஆவார். கன்னி ராசிக்கு சூரியன் செல்வது வேலையில் ஒழுக்கம், பகுப்பாய்வு திறன்கள் மற்றும் திட்டங்களை திறம்பட செய்யும் மனப்பான்மையை அதிகரிக்கும்.
சூரியனின் இந்த பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறவுள்ளனர். இப்படி அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைப்பதால் தொழிலில் முன்னேற்றம், நிதி நிலை உயர்வு போன்றவற்றையும் காணக்கூடும். இப்போது செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மேலும் முடிவெடுக்கும் திறனும் மேம்படும். பணியிடத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நல்ல வெற்றியைப் பெறக்கூடும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
மீனம்
மீன ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வியாபாரிகளுக்கு புதிய நட்புகளால் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரக்கூடிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் உதவியால் நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளருடன் வெளிப்படையாக இருப்பது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலையில் உயர்வு ஏற்படும். புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன்கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைப்பதோடு, அவர்களுடனான உறவு மேம்படும். இது எதிர்காலத்தில் நன்மை பயக்கும். முக்கியமாக இந்த பெயர்ச்சி காலத்தில் உங்களின் திட்டங்களை சரியாக செயல்படுத்தினால் நல்ல பலனைப் பெறலாம்.
தனுசு
தனுசு ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் தலைமைப்பண்புகள் பாராட்டப்படும். சிலருக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். மேலும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் தேடி வரும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


