Latest Updates
-
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்
சூரிய பெயர்ச்சியால் செப்டம்பர் 17 முதல் இந்த 3 ராசிகளின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்..
Sun Transit In Virgo On 17 September 2025: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அவ்வாறு சூரியன் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. இப்படிப்பட்ட சூரியன் மகிழ்ச்சி, மரியாதை, செல்வம், செழிப்பு, தந்தை, ஆன்மா ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
இந்த சூரியன் தற்போது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் செப்டம்பர் 17 ஆம் தேதி சூரியன் கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார். கன்னி ராசியில் சூரியன் நுழையும் போது, சூரியன் பலவீனமாக இருப்பார். இருப்பினும் இந்த சூரிய பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

செப்டம்பர் 17 ஆம் தேதி கன்னி ராசிக்குள் நுழையும் சூரியன், அந்த ராசியில் அக்டோபர் 17 ஆம் தேதி வரை இருப்பார். இதனால் அடுத்த 1 மாத காலம் சில ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் நேர்மறையான பலன்களைப் பெறவுள்ளனர். குறிப்பாக அதிர்ஷ்டத்தின் ஆதரவால் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியையும், நிதி நன்மைகளையும் பெறவுள்ளனர். இப்போது கன்னி செல்லும் சூரியனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் செயல்திறனைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். சிலருக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வியாபாரத்தில் பெரிய அளவில் லாபம் கிடைக்கும் வாயப்புள்ளது. நிதி நிலைமை வலுவடையும். எதிர்பாராத வழிகளில் இருந்து பணம் தேடி வரும். குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கான நிறைய செலவுகளை செய்ய வேண்டி வரும்.
தனுசு
தனசு ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். முற்சிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் புதிய உத்திகளை வகுப்பதன் மூலம் நல்ல வெற்றியையும், லாபத்தையும் பெறுவீர்கள். போட்டியாளரக்ளுக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பீர்கள். நிதி நிலை வலுவாக இருக்கும். வசதிகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். உங்கள் இலக்குகளை நிர்ணயித்து அதை நோக்கி பயணிப்பீர்கள். புதிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். உங்களின் பேச்சால் பல முக்கியமான வேலைகளை முடிப்பீர்கள். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கடன் தொல்லைகள் நீங்கும். மொத்தத்தில் இந்த காலம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications