Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சூரியனின் விருச்சிக ராசி பெயர்ச்சி இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றப் போகுதாம்...!
Sun Transit in Scorpio: கிரகங்களின் ராஜா மற்றும் சூரிய குடும்பத்தின் மையமான சூரியன், தோராயமாக மாதத்திற்கு ஒரு முறை தனது ராசியை மாற்றிக் கொள்கிறார். தற்போது சூரியன் தனுசு ராசியில் இருக்கிறார். நவம்பர் 16ஆம் தேதி சூரியன் தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். விருச்சிகம் போரின் கடவுளான செவ்வாயால் ஆளப்படும் ராசியாகும்.
செவ்வாய் மற்றும் சூரியன் இரண்டும் நட்பு கிரகங்களாகும். இந்த சூரியனின் ராசி மாற்றம் சில ராசிகளுக்கு நன்மை பயக்கும். அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் பல நன்மைகள் பெறுவார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு சூரியனின் ராசி மாற்றம் துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும். ஏனெனில் சூரியன் துலாம் ராசியின் பணம் மற்றும் பேச்சு அம்சத்தில் இருப்பதால் அவர்களுக்கு பல நல்ல பலன்கள் கிடைக்கப்போகிறது.
இந்த ராசி மாற்றத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பண லாபம் உண்டாகும். சிந்தித்து முடிவெடுக்கும் திறன் மேம்படும். வியாபாரத்தில் நினைத்ததை விட அதிக லாபம் கிடைக்கும். அவர்களின் பேச்சாற்றல் சிறப்பாக இருக்கும். அவர்களுக்கு பிடித்தவர்கள் அவர்களின் பேச்சால் ஈர்க்கப்படுவார்கள்.
கடகம்
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் நற்பலன்களை அளிக்கப்போகிறது. இந்த ராசியின் 5-ம் வீட்டில் சூரியன் வருவது மிகவும் விசேஷமானது. ஐந்தாவது வீடு குழந்தைகளுடன் தொடர்புடையது. எனவே இந்தக் காலகட்டத்தில் குழந்தைகள் தொடர்பான நல்ல விஷயங்களைக் கேட்பீர்கள்.
குழந்தைகளுக்கு நல்ல வேலை கிடைக்கும் அல்லது அவர்களது திருமணம் முடிவு செய்யப்படும். இந்த காலகட்டத்தில் எதிர்பாராத பண ஆதாயத்தைப் பெறுவார்கள். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் அதிகரிப்பதால் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல்நிலை திருப்திகரமாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு சூரிய பகவானின் ராசி மாற்றம் மகிழ்ச்சியான நாட்களைக் கொடுக்கும். சூரியன் அவர்களின் நான்காவது வீட்டில் சஞ்சரிப்பதால் இது அவர்களுக்கு சிறப்பான காலத்தை அளிக்கும். எனவே இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு அதிர்ஷ்டம் சிறப்பாக இருக்கும்.
வாகனம், சொத்து வாங்க விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல நேரம். வேலையில் இருப்பவர்களும், வியாபாரிகளும் அதிக பலன்களைப் பெறுவார்கள். அவர்களின் வருமானம் அதிகரித்து பொருளாதார ஸ்திரத்தன்மை கிடைக்கும். ரியல் எஸ்டேட் மற்றும் சொத்து தொடர்பான வியாபாரம் செய்பவர்கள் இந்த காலகட்டத்தில் பெரும் லாபத்தைப் பெறுவார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

