Latest Updates
-
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க..
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் ராஜா மாதிரி வாழப்போறவங்க இந்த 4 நட்சத்திரத்தில் பிறந்தவங்கதானாம்...!
ஜோதிடத்தில் கிரகங்களின் ஒவ்வொரு நகர்வும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். அந்த வகையில் மார்ச் 31 ஆம் தேதி, சூரியன் மீன ராசியில் சஞ்சரித்து ரேவதி நட்சத்திரத்தில் நுழைகிறார். சூரியன் ரேவதி நட்சத்திரத்தில் பிரவேசிக்கும்போது, ஒரு பஞ்சக்ரஹி யோகம் உருவாகிறது. மேலும் சந்திரன் மேஷ ராசிக்குள் பிரவேசிக்கிறார்.
இந்த இரண்டு கிரகங்களும் செல்வம் மற்றும் முன்னேற்றத்திற்கான கிரகங்களாகக் கருதப்படுகின்றன. இந்த இரண்டு கிரகங்களும் ராசிகளை மாற்றுவது தூங்கிக் கொண்டிருக்கும் சில நட்சத்திரங்களின் அதிர்ஷ்டத்தை விழிக்க வைக்கப் போகிறது. இதனால் அவர்கள் குறிப்பிட்ட பொருளாதார முன்னேற்றத்தை அடைய முடியும். அவர்கள் வாழ்வில் செழிப்பும் அமைதியும் நிறைந்திருக்கும். இந்த பதிவில் எந்தெந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த கிரக பெயர்ச்சியால் அதிர்ஷ்டமடைய போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

உத்திரம்
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த கிரக பெயர்ச்சியால் வாழ்க்கையில் பல சாதனைகளை செய்ய முடியும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பிய முடிவுகளை அடைய முடியும். அவர்கள் வாழ்க்கையில் இதுவரை இருந்துவந்த சிரமங்கள் முடிவுக்கு வரும். அவர்களுக்கு புதிய வேலை தேடும் வாய்ப்பு கிடைக்கும். அவர்கள் தற்போது பணிபுரியும் நிறுவனத்தில் தங்களுக்கென ஒரு பெயரை உருவாக்க முடியும்.
அவர்கள் தங்கள் திறமைகளை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும். இந்த கிரக பெயர்ச்சியால் அவர்களின் சேமிப்பு அதிகரிக்கும். நிதி விஷயங்களை ஒழுக்கத்துடன் நிர்வப்பதால், அவர்கள் சந்தித்து வந்த நிதி பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வந்து அமைதி அதிகரிக்கும்.
அஸ்தம்
இந்த கிரக பெயர்ச்சியால் அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கடன் பிரச்சினைகளை குறைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அவர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். வாழ்க்கையில் பல சாதனைகள் செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் பணியிடத்தில் சாதகமான சூழ்நிலைகள் நிலவும். குடும்ப உறவுகளில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
உங்கள் துணையுடன் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உடன் பிறந்தவர்களிடையே நிலவி வந்த சொத்து தகராறுகள் முடிவுக்கு வரும். வெளிநாடுகளில் வேலை தேடுபவர்களுக்கு சாதகமான சூழல் நிலவும். அவர்கள் தங்கள் உழைப்புக்கு ஏற்ப தகுந்த பலன்களை அடைவார்கள்.
சித்திரை
இந்த கிரக பெயர்ச்சிகளால் சித்திரைநட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வியாபாரத்தில் பெரிய லாபம் ஈட்ட முடியும். புதிய தொழில் தொடங்க விரும்புவோருக்கு அதற்கான சரியான நேரம் வந்து விட்டது. இந்த நட்சத்திரக்காரர்கள் தங்கள் நிதி பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். கடந்த கால முதலீடுகளால் எதிர்பார்த்ததை விட லாபம் கிடைக்கும். அவர்கள் விரும்பும் ஆடம்பர பொருட்களை வாங்க முடியும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சில நெருங்கிய நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். அவர்கள் மூலம் சில சாதகமான பலன்களை அடைய முடியும்.
உத்திராடம்
இந்த கிரக பெயர்ச்சியால் உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாகனம் வாங்கும் யோகம் வரப்போகிறது. தேவையற்ற செலவுகள் குறைந்து வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும் பல விஷயங்கள் நடக்க வாய்ப்புள்ளது.
இதனால் மனரீதியான சிக்கல்கள் முடிவுக்கு வரும். பெற்றோரிடமிருந்து நிதி உதவி கிடைக்கும். சகோதர சகோதரிகளுடன் இணைந்து புதிய வியாபாரம் தொடங்க வாய்ப்புகள் உருவாகும். நிலம் தொடர்பான பரிவர்த்தனைகளில் லாபம் ஏற்படும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி நிலவும். வேலை தேடுபவர்களுக்கு அதிக சம்பளத்தில் புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
