Latest Updates
-
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது...
Sun Transit In Punarpoosam Nakshatra On 06 July 2025: ஜோதிடத்தில் சூரியன் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுகிறார். இந்த சூரியன் ஒரு ராசியில் 1 மாத காலம் பயணிப்பார் மற்றும் இவர் சிம்ம ராசியின் அதிபதியாவார். மேலும் இவர் அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி சூரியனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அந்த வகையில் சூரியன் வருகிற ஜூலை 06 ஆம் தேதி புனர்பூசம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இந்த புனர்பூச நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான். சூரியன் குரு பகவானின் நட்சத்திரத்திற்குள் நுழைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கக்கூடும்.

இதன் மூலம் தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இப்போது சூரியன் புனர்பூச நட்சத்திரத்திற்கு செல்வதால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியானது திடீர் நிதி நன்மைகளைக் கொண்டு வரும். பணிபுரிபவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும் மற்றும் வணிகர்கள் நல்ல லாபத்தையும் பெறுவார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிக்கிய பணம் வைக்கு வந்து சேரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் இருக்கும். புதிய உறவுகளைத் தொடங்க நினைத்தால், இக்காலம் சாதகமாக இருக்கும். கூட்டு வணிகம் செய்பவர்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். முக்கியமாக நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரகமாக முடிவடையும். புதிய சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வாகனம் வாங்கும் யோகமும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. காதல் மற்றும் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். பணியிடத்தில் உங்களின் சிறப்பான செயல்திறன் பாராட்டப்படும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்களையும் பெறலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி ஏராளமான நற்பலன்களை வழங்கப் போகிறது. முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரங்கள் மூலம் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். இக்காலத்தில் நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். லட்சியங்கள் நிறைவேறும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் தங்களின் படைப்பாற்றல் மூலம் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பங்குச் சந்தை, பந்தயம் மற்றும் லாட்டரி மூலம் நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
