Latest Updates
-
Diwali 2026: தீபாவளி அன்று ஏன் 13 விளக்குகளை ஏற்ற வேண்டும்? அவற்றை எந்தெந்த இடத்தில் வைக்க வேண்டும்? -
உலகம் முழுக்க 108 ஏன் மிகவும் புனிதமான எண்ணாக கருதப்படுகிறது தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
வாஸ்து படி வீட்டை பெருக்கும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செய்யாதீங்க - இல்லனா வீட்டு அதிர்ஷ்டமே போயிரும் -
தீபாவளியில் உருவாகும் 2 சக்திவாய்ந்த ராஜயோகங்கள்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
18 மாதங்களுக்கு பின் ராகு மகர ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
அவரைக்காயை எப்பவும் பொரியல் செய்யாம.. இப்படி ஒருடைம் கிரேவி செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
15 பல் பூண்டு இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் பூண்டு பப்புவை செய்யுங்க - சாதத்தில் ஊற்றி சாப்பிட அமிர்தமா இருக்கும -
அடிக்கடி நெஞ்செரிச்சல், அஜீரணமா? வயிற்றுப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்! எச்சரிக்கும் டாக்டர்! -
டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டும் உள்ளது? வேறு நிறத்தில் டயர் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா? -
வக்ர சுக்கிரன் இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகிறார்.. உங்க ராசி இதுல இருக்கா?
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்...
Sun Transit In Chithirai Nakshatra 2025: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றி, மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் ஒரு ராசியில் ஒரு மாதம் வரை இருப்பார் மற்றும் அவ்வப்போது சூரியன் நட்சத்திரத்தையும் மாற்றுவார். இப்படிப்பட்ட சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாவார். சூரியனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
தற்போது சூரியன் கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சூரியன் அக்டோபர் 10 ஆம் தேதி, அதாவது இன்று இரவு சித்திரை நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். சூரியனின் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலுமே காணப்படும்.

அதுவும் 3 ராசிக்காரர்களுக்கு இந்த சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இதன் விளைவாக தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும் மற்றும் மாணவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். இப்போது சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் வெளிநாடு செல்லும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கும். உறவினர்களிடையேயான உறவு சிறப்பாக இருக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சூரியனின் ஆசியால் தலைமைத்துவ திறன்கள் மேம்படும். எதிலும் சிறப்பான முடிவுகளை எடுப்பீர்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். தனிப்பட்ட வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைக் காண்பார்கள். வேலையில் பிரச்சனை இருந்தால், அது தீரும். மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்களின் யோசனையைப் பாராட்டுவார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கலாம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
