Latest Updates
-
எப்பவும் சிக்கனை ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருவாட்டி இப்படி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
நவம்பர் 01, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - இல்லனா ஆபத்துதான் -
செவ்வாய் சிம்ம ராசிக்குள் செல்வதால் செல்வத்தையும், புகழையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கிலோ சிக்கன் வாங்குனா இந்த மாதிரி மங்களூர் ஸ்டைல் சிக்கன் சுக்கா செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
வாஸ்து படி உங்கள் வீட்டில் உள்ள சின்ன சின்ன தவறுகள் உங்களுக்கு ராகுவின் சாபத்தை பெற்றுத்தருமாம் - ஜாக்கிரதை -
இந்தியாவின் இந்த கிராமத்தில் திருமணம் என்ற உறவே கிடையாதாம் - லிவ்-இன் உறவு மட்டும்தானாம்- எங்க தெரியுமா? -
4 முட்டை இருந்தா இந்த மாதிரி மைசூர் ஸ்டைலில் முட்டை குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
வார ராசிபலன் (01 November 2026-07 November 2026)- இந்த வாரம் உங்க ராசி எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
பாவக்காய் வாங்குனா இந்தஉருளைக்கிழங்கோட சேர்த்து சுக்கா பண்ணுங்க - கசப்பே இல்லாம செமையா இருக்கும் -
இந்தியாவின் 'பால் நகரம்' என்று அழைக்கப்படும் ஊர் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா?
ஜூலை மாத சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
Sun Transit In Cancer On July 2025: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாவார். மேலும் இவர் ஒரு ராசியில் ஒரு மாத காலம் பயணிப்பார். சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றும் போது தமிழ் மாதங்கள் பிறக்கின்றன.
தற்போது சூரியன் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூலை மாதத்தில் சூரியன் கடக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கடக ராசியில் அதிபதி சந்திரன். இப்படி கடக ராசிக்கு சூரியன் நுழையும் போது தமிழ் மாதமான ஆடி மாதம் பிறக்கிறது. அதுவும் இந்த ஆடி மாதம் ஜூலை 16 ஆம் தேதி பிறக்கிறது.

ஜோதிடத்தில் கடக ராசியின் அதிபதியான சந்திரனும், சூரியனும் நண்பர்களாக கருதப்படுகின்றனர். எனவே சூரியன் கடக ராசிக்கு செல்வதால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். என்ன தான் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் சூரியன் பெயர்ச்சியின் தாக்கம் இருந்தாலும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக் கதவு திறந்து பிரகாசிக்கப் போகிறது.
இப்படி அதிர்ஷ்டம் பிரகாசிப்பதால் அந்த ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும், செல்வம் பெருகும், முன்னேற்ற பாதைகள் திறக்கும். இப்போது கடகம் செல்லும் சூரியனால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு பகுதியிலும் நல்ல பலன்களைப் பெறுவார்கள். வெளிநாடு செல்லும் கனவு இருந்தால், அது இக்காலத்தில் நிறைவேறலாம். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்புக்கள் தேடி வரலாம். படிப்பிற்காக கடன் வாங்க வேண்டியிருக்கலாம். மேலும் வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டுமென்ற ஆசை இருந்தால், அந்த ஆசையும் நிறைவேறலாம். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அரசு தொடர்பான வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. ஒவ்வொரு வேலையிலும் எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். தந்தையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
ரிஷபம்
ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். உடன் பிறந்தவர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். அவர்களுடனான உறவு வலுவடையும். உங்களின் படைப்பாற்றல் அதிகரிக்கும். இதனால் அலுவலகத்தில் நல்ல பாராட்டைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்கள் செயல்திறனை பாராட்டுவார்கள். பதவி உயர்வுக்கான வாய்ப்புக்களும் உள்ளன. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியை வழங்குவீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
